(Reading time: 2 - 4 minutes)

என் மனதின் ஆதங்கம் - தீபாஸ்

Money

 பாமர மக்களின் மனசாட்சியாக நான் பேசுகிறேன் ,நான் எந்த கட்சியையும் சார்ந்தவளும் அல்ல ,அரசியலில் எனக்கு ஈடுபாடும் கிடையாது ,ஆனால் மத்திய அரசு ஏதோ புதுமையாகச் செய்து கருப்புப்பணத்தை ஒலிக்க நினைக்கிறதே ஏதாவது நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி .அதற்காக நாம் சில நடைமுறைப் பிரச்சனைகளை நாட்டுக்காக் பொறுத்துக்கொள்ளலாம் என்று மனதை திடப்படுத்தி விடிவை எதிர்பாத்திருந்தேன்.

எனவே  நான் எனது ஊரின் A.T.M ஐ பயன்படுத்தி  என் கணக்கில் உள்ள என்னுடைய ரூபாயை எடுக்க இரண்டரை மணிநேரம் காத்திருந்தும் வெறும் இரண்டாயிரம் ரூபாயை மட்டும் தான் எடுக்க முடிந்தது .எனினும் பொறுமையாக விடிவு பிறக்கும் என காத்திருந்தேன்

ஆனால்  தொலைக்காட்ச்சியில் தனியார் ஒருவரிடம் மட்டும் வருமான வரித்துறை ( புதூ இரண்டாயிரம் ரூபாய்)  எழுபது கோடி பறிமுதல் செய்தது என்றும் அதே போல் வேறு சில இடங்களிலும் வருமான் வரித்துறை கைப்பற்றியதை பற்றி அறிந்தவுடன் பெறும் அதிர்ச்சியடைந்தேன் .  பணப்புழக்கம் நடக்கும் வாங்கியில் பணிபுரியும்  ஊழியர்கலில் சிலர் இது போல் ,மக்கள் வரிசையில் இருந்து தங்களின் பணத்தை எடுக்கமுடியாமல் தவிப்பதை  அறிந்தும் கறுப்புப் பணக்காரர்களின் கைகூளியாகச் செயல்பட்டு இந்த தவறுகளுக்கு துணை நிற்கின்றார்களா?.

என் கையில் உள்ள பணத்தைவிட வங்கியில் உள்ள என்பணம் தான் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த பாமரமக்களின் ஒருவனாகிய எனது நம்பிக்கையும் .நாட்டின் விடியலும் காணாமல் போய்விடுமோ என் அஞ்சுகிறேன் .

எதற்காக் இந்த நிலை என் நாட்டிக்கு! சுயநலனத்தின் உச்சிக்கு போக  அதிகாரவர்க்கமும் பணவர்க்கமும் கைகோர்த்து தேரினில் ஏறி அமர்ந்து  உழைப்பு என்ற பாமரமக்களை சாட்டை எனும் அதிகாரத்தாலும் பணத்தாலும் அடித்து தேர் இழுக்க வைத்து ஆசையெனும் வெறிசிரிப்பு சிரிக்கும் வெறியர்களை விரட்ட எங்களிடம் தலைவன் என்னும் பதவியில்  மனத்தூய்மையும் மனதில்வீரமும்  உள்ள ஒருவன் இல்லாமல் போய்விட்டது ஏன்? .யார் இட்ட சாபம் இது ?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.