(Reading time: 3 - 6 minutes)

தங்கல் vs இறுதிச் சுற்று - உங்கள் ஓட்டு யாருக்கு? - சாந்தி

Dangal vs Irudhisutru

மீபத்தில் என்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு சுவாரசியமான, காரசாரமான விவாதம் நடைப் பெற்றது.

தங்கல் சிறந்த படமா, இறுதிச் சுற்று சிறந்த படமா என்ற விவாதம்.

இரண்டு படத்திலும் மையக் கரு கிட்டத்தட்ட ஒன்றே தான்.

தங்கல் படத்தில் தன் மகள்களுக்கு மல்யுத்தம் கற்றுக் கொடுத்து, அவர்கள் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்ல காரணமாக இருக்கிறார் தந்தை. [ இது நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை சார்ந்து எடுக்கப்பட்ட படம் ]

இறுதிச் சுற்று படத்தில் குத்து சண்டை இடும் திறமை இருக்கும் ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவளை வெற்றி வீராங்கனை ஆக்குகிறார் ஒரு கோச்.

இரண்டு படத்திலும் தேவைக்கேற்ப ஜனரஞ்சகத்தையும் கலந்திருக்கிறார்கள்.

இரண்டு படத்திலும் அவர்களின் வெற்றி பாதையில் இடையூறுகள் வருகின்றன. அதையும் தாண்டி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தந்தை / கோச் துணையுடன் வெற்றி பெறுகிறார்கள்.

ரே கதை எனும் போது எதை வைத்து எது சிறந்த படம் என்று சொல்வது?

நடிப்பை வைத்தா?

அப்படி பார்த்தால், கட்டாயம் இறுதிச் சுற்று மாதவனை விட தங்கல் ஆமீர்கான் அதிகமாக ஸ்கோர் செய்ய தான் செய்வார்.

னால் அது மட்டும் போதுமா?

என்னை பொறுத்த வரை தங்கல் படத்தை விட இறுதிச் சுற்று சிறந்த படம்.

ஏன் என்றால் இறுதிச் சுற்று படத்தில் குத்து சண்டை மீது ஆர்வம் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்த திறமையை மெருகேற்றி வெற்றி பெற உதவி செய்கிறார் கோச்.

இங்கே ஆர்வம் என்பது திணிக்கப் படவில்லை. அந்த பெண்ணிற்கே ஆர்வம் இருக்க தான் செய்கிறது. அதை கோச் மெருகேற்றுகிறார்.

ஆனால் தங்கல் படத்தில் அப்படி இல்லை. சிறுவயது முதலே மல்யுத்த பயிற்சி அவர்களின் மீது திணிக்கப் படுகிறது.

ல்ல விஷயம் என்றாலும் சரி, கெட்டது என்றாலும் சரி, ஒன்றை கட்டாயப் படுத்தி மற்றவர் மீது திணிக்கும் போது அதன் பயன் பின் சென்று விடுகிறது.

ஒவ்வொருவர் உள்ளேயும் ஏதேனும் ஒரு தனித் திறமை இருக்க தான் செய்கிறது. அதை நாம் தூண்டி விட்டு, பாலிஷ் செய்யும் போது அதிக சிறப்படைகிறது.

தங்கல் பட சிறுமிகள் பயிற்சியினால் பயன் பெற்று பதக்கம் வென்றார்கள் என்றாலும் கூட அவர்களுள் இருந்த / இருக்கும் தனித் திறமை மல்யுத்தம் தானா என நாம் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டது!

பெற்றோர்கள் இப்படி தங்களின் கனவுகளை பிள்ளைகளின் மீதி திணிப்பது சரியா தவறா? இன்னுமொரு விவாதத்திற்கான கேள்வி அது!

என் சொந்த கருத்தை பொறுத்த வரை அது தவறு!

சச்சின் டெண்டுல்கர் கூட முதலில் ஜான் மெக்கன்ரோவை போல டென்னிஸ் விளையாட வேண்டும் என்று ஆசைப் பட்டாராம். ஆனால் பதினோரு வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய பின் அவரின் விருப்பமே மாறி போய் விட்டதாம்!

இங்கே சச்சினின் விருப்பம் வெற்றி பெற்றதால் தான் சாதனை படைக்கும் ஒரு வீரரை நாம பார்க்க முடிந்தது.

வெற்றிகள், பதக்கங்கள், கோப்பைகள் எல்லாவற்றையும் விட முதலில் விருப்பம் தான் முக்கியம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஹிந்து ஆங்கில நாளிதழின் தங்கல் திரைப்பட விமர்சனத்தில் சொல்லப்பட்டிருக்கும்

It’s great to see the girls made to go beyond domesticity and early marriages alright but did they have a choice in opting to become wrestlers? What if they had desired to be actresses? In this real life story, the decision-making for women still rests with a man, doesn’t it? 

விமர்சனத்தை நானும் வரவேற்கிறேன்.

எனவே என்னுடைய வாக்கு இறுதிச்சுற்று படத்திற்கே!

உங்களுடைய ஓட்டு யாருக்கு?

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.