(Reading time: 3 - 5 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 02 - எந்தன் மனம் உன்னை சுற்றுதே - அருணா நந்தினி

enthan Manam Unnai Sutruthe

ஷ்யாம் ஒரு பெண்ணை கண்டதும் காதல் கொள்கிறான். அவள் பெயர், ஊர் எதுவும் தெரியாமல் அவன் தவிக்கும் வேளையில், அவனின் பெற்றோர் அவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள்.

ஷ்யாமின் மனதில் இருக்கும் மர்ம பெண்ணை பற்றி தெரிந்துக் கொள்பவர்கள், அவளை கண்டுபிடிக்க அவனுக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுக்கிறார்கள்.

ஷ்யாம் எதிர்பாராத விதமாக இரண்டு மூன்று முறை அந்த பெண்ணை பார்க்கிறான். அப்படி பார்க்கும் நேரத்தில் அவளின் பெயர் திருமதி சுமதி கணேசன் என்பதும், அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதும் தெரிந்து அதிர்ந்து போகிறான்.

ஏற்கனவே திருமணமான பெண்ணை மனதாலும் நினைப்பது தவறு என்பதை உணர்ந்து, தன் கனவு காதலியை மறக்க முயற்சிக்கிறான். ஆனாலும் அவனின் இதயம் அவனின் முயற்சியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

எனவே வேறு வழி இல்லாமல் பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணையே திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறான். ஆனால் திருமண நிச்சயத்திற்கு பின்னரும் அவனால் அவனின் கனவு காதலியை மறக்க முடியாமல் தவிக்கிறான்.

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்

தொடரும் சில குழப்பங்களுக்கு பின் சுமதி கணேசன் என்பது கதாநாயகியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்ப தலைவியின் பெயர் என்பதும், அந்த குழந்தையும் அதே பக்கத்து வீட்டு குழந்தை என்பதும் தெரிய வருகிறது.

பிறகென்ன குழப்பங்கள் சரி செய்யப்பட்டு ஷ்யாமின் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிகிறது!
*************************** End of Spoiler *********************************** 

ருணா நந்தினி தன் கை வண்ணத்தில் நம்மையும் கதையோடு ஒன்ற வைத்து விடுகிறார்கள்.

ஜனரஞ்சகமான குடும்பக் கதை.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.