(Reading time: 3 - 5 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 03 - அன்பெனும் மழையில் – அமுதவல்லி கல்யாணசுந்தரம்

anbenum Mazhaiyil

தீவிரவாதிகளின் தாக்குதலில் காதல் கணவன் ராஜீவை இழந்த ஜீவரேகா தன் மகள் ப்ரியாவுடன் வசிக்கிறாள்.

பிள்ளைப்பேறின் போது தன் அன்பு மனைவி பிரியதர்ஷினியை இழக்கும் பிரபல டாக்டர் விஜயராகவன் தன் மகன் ராகுலை பேணி வாழ்கிறான்.

அம்மா, தங்கை, தங்கை கணவன் என அனைவரும் எவ்வளவோ வற்புறுத்தியும் மனைவி மீதிருக்கும் அன்பினால் மறுமணம் செய்துக் கொள்ள மறுக்கிறான் விஜய்.

பள்ளியில் ஒன்றாக படிக்கும் ப்ரியாவும், ராகுலும் நண்பர்களாகிறார்கள்.

குழந்தைகள் மூலம் ஜீவாவிற்கும், விஜயிற்கும் பரிச்சயம் ஏற்படுகிறது.

குழந்தைகளின் மூலம் மற்றவர் வாழ்வில் இருக்கும் இழப்பு பற்றி தெரிந்துக் கொண்டு இருவரும் அந்த குழந்தையின் மீதும் கூடுதல் அன்பை பொழிகிறார்கள்.

மெல்ல மெல்ல இதுவே விஜய், ஜீவா இடையே காதலாக மாறுகிறது.

இந்நிலையில் ராஜீவ் இறக்கும் முன் பதிவு செய்த விடியோவை பார்த்து விஜய் அதிர்ந்து போகிறான்.

விடியோவில் ராஜீவ் தன் மனைவி மறுமணம் செய்துக் கொள்ள கூடாது என்று சொல்லி பதிவு செய்திருக்கிறான்.

ஒரு அன்பான கணவன் இப்படி சொல்ல காரணம் என்ன என விஜய் குழம்ப, ஜீவாவோ எந்த அதிர்ச்சியும் இல்லாமல் இருக்கிறாள்.

ராஜீவை பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கும் ஜீவா, அவன் கட்டாயம் அந்த பொருள் பட எதுவும் சொல்லி இருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்கிறாள்.

குழம்பி போகும் விஜய் ராஜீவின் பேச்சின் பின் இருக்கும் மர்மத்தை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.

 

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்

இறுதியில் ஜீவாவின் நம்பிக்கை சரி தான் என்பதை ராஜீவ் உண்மையில் சொல்ல விரும்பியதை ஆராய்ந்து கண்டுப்பிடித்து தெரிந்தும் கொள்கிறான்

அதன் பின் எல்லாம் சுபம்!
*************************** End of Spoiler *********************************** 

ல்ல ஜனரஞ்சகமான குடும்பக் கதை.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.