(Reading time: 4 - 8 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 08 - நிலவினில் சிறகடிப்போம் – அகிலா ரூபன்

பகிர்ந்தவர் - பிந்து வினோத்

nilavinilSiragadippom

லங்கையில் இருந்து அமெரிக்கா வந்து தன் மருத்துவ பயிற்சியை தொடரும் சாமந்தி தற்காலிகமாக ஒரு கஃபேயில் வேலை செய்கிறாள்.

அங்கே தினமும் வரும் மித்ரா மீது அவளுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. அவளுடைய இந்த ரகசியம் அவளுடைய பிரென்ட்ஸ் காவ்யா, மீனா மற்றும் கார்த்திக்கிற்கும் தெரிந்த ரகசியமாகவே இருக்கிறது.

தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் மித்ராவிற்கும் அவள் மீது அதே சாஃப்ட் கார்னர் இருப்பதை காட்டுகிறது.

ஆனாலும் தன்னுடைய மனதை அடக்கியே வைக்கிறாள் சாமந்தி. காரணம் அவளின் மனதினுள் அங்கே இருப்பவர்களுக்கு தெரியாத மிக பெரிய ரகசியம் இருக்கிறது.

அந்த ரகசியதிற்கும், இப்போது மித்ரா மீது ஏற்பட்டிருக்கும் அன்பிற்கும் நடுவே அவள் போராடிக் கொண்டிருக்கும் போது, மீண்டும் அவள் வாழ்வில் வருகிறான் அசோகன்.

அசோகனின் வருகையால் வேறு வழி இல்லாமல் தன் ரகசியத்தை மித்ரா மற்றும் தன் நண்பர்களுடன் பகிர்கிறாள் சாமந்தி.

இலங்கையில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது சாமந்திக்கும் அசோகனுக்கும் நடுவே நட்பு ஏற்படுகிறது. ஒரு நாள் வேலை காரணமாக தாமதமாக வீடு திரும்பும் சாமந்தி ராணுவத்தினரால் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள். இதனால் அவளின் அப்பா தற்கொலை செய்துக் கொள்கிறார்.

சாமந்தியும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகிறாள். நடந்த கோர சம்பவத்தால் கர்ப்பமாகிறாள் சாமந்தி. அவளின் அம்மா முதல் அனைவரும் அந்த குழந்தை வேண்டாம் என்று அறிவுரை கூற, சாமந்தி, அசோகனின் உதவியை கேட்க நினைக்கிறாள். அவன் அவளுக்கு நல்ல விதமாக வழிககட்டுவான் என்று நம்புகிறாள்.

ஆனால் அவள் கேட்டுக் கொண்ட பிறகும், அசோகன் அவளை சந்திக்காமலே இருக்கிறான். அசோகன் இப்படி தன்னை தவிர்ப்பான் என்று எதிர்பார்த்திராத சாமந்தி தானே ஒரு முடிவிற்கு வந்து, அனைவரின் எதிர்பையும் மீறி அந்த குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறாள். இதனால் உறவினர்கள், அண்டை வீட்டார் என அனைவரின் ஏளனத்திற்கும் ஆளாகிறாள்.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மருத்துவ படிப்பை படித்து விட்டு, தன் வாழ்க்கைக்கு புதிய பாதை அமைக்க அமெரிக்கா வந்திருக்கிறாள்.

சாமந்தியின் வாழ்வில் நடந்தவற்றை கேட்டு மித்ராவும் அவள் நண்பர்களும் திகைத்து போகிறார்கள். ஆனால் அவளை வெறுத்து ஒதுக்காமல் முன்பு போல அதே அன்புடன் பழகுகிறார்கள்.

சாமந்திக்கும், அசோகனுக்கு ஒரே கல்லூரியில் ரெசிடென்சி கிடைத்து விட, சாமந்தி அவள் மகன் அநபாயனை அமெரிக்காவிற்கே அழைத்து வருகிறாள்.

அவனிடம் அசோகனும், மித்ராவும் போட்டி போட்டுக் கொண்டு அன்பை கொடுக்கிறார்கள். அதே போல இருவருமே சாமந்தியின் மனதை வெல்லவும் போட்டி போடுகிறார்கள்.

அசோகன் மீது கோபம் இருந்தாலும், அவன் முன்பு நடந்த விதத்திற்கு தன்னிலை விளக்கம் கொடுக்கவும், சாமந்தி குழப்பம் கொள்கிறாள்.

யோசித்து பார்த்தால் எப்போதுமே அவள் அசோகன் மீது காதல் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்கிறாள்.

தெளிவாகி விட்ட மனதுடன் அவள் முடிவெடுக்க நினைக்கும் போது மித்ரா வாழ்வில் அவனின் பழைய காதலியால் சிறு குளறுபடி ஏற்படுகிறது.

இறுதியில் அசோகனின் உதவியால் குழப்பங்கள் தீர்ந்து மித்ராவிடம் தன் மனதில் இருக்கும் காதலை பகிர்கிறாள் சாமந்தி.

 

ந்த கதையை ஒரு long distance பயணத்தின் போது படித்தேன். In general, first person வழியாக சொல்ல படும் கதைகள் எனக்கு ரொம்ப ஆர்வத்தை கொடுத்ததில்லை. கதையின் ஆரம்பத்தில் அகிலா ரூபன் நியூ  யார்க் பற்றி சொல்லி இருந்தது என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் ஒத்து இருந்ததால் தொடர்ந்து படித்தேன். கதையில் ஆங்காங்கே சின்ன சின்ன ups அண்ட் downs இருந்தாலும் கதையின் கரு மற்றும் அதை அகிலா ரூபன் எளிதாக கையாண்டிருந்த விதம் பிடித்திருந்தது. கதையில் வருபவர்கள் அனைவரும் இயல்பாக இருப்பதும் நன்றாக இருந்தது.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.