(Reading time: 6 - 11 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 09 - காதல் உறவே – தேவி [ பிந்து வி]

பகிர்ந்தவர் - பிந்து வினோத்

Kathal urave

ன் வீட்டு குடும்ப விழா ஒன்றில் மைதிலியை சந்திக்கிறான் ராம். இருவருக்குமே முதல் சந்திப்பிலேயே மற்றவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.

ராம் பெரிய இடத்தை சேர்ந்தவன் என்பது தெரிந்து அவனை விட்டு தள்ளி செல்ல முயற்சி செய்கிறாள் மைதிலி.

ஆனால் ராம் மைதிலியிடம் நேரடியாகவே அவளை விரும்புவதாக சொல்கிறான்.

இரண்டு நாள் சந்திப்பிலேயே காதலை சொல்லும் ராமின் வேகத்தை பார்த்து சந்தோஷம் & குழப்பம் கொள்கிறாள் மைதிலி. ஆனால் ராம் அவளை அதிகம் யோசிக்க வாய்ப்பு கொடுக்காமல் தன் வீட்டு பெரியவர்களுக்கு அவளை அறிமுகம் செய்து வைக்கிறான்.

பெரியவர்களும் பச்சைக்கொடி காட்டி விட, உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான் ராம். அதில் வெற்றியும் பெறுகிறான்.

திருமணத்திற்கு பின் ராம் – மைதிலி வாழ்க்கை இனிமையாகவே தொடங்குகிறது. நாட்கள் செல்ல ராம் மனைவியிடம் தன் வேலை தொடர்பான டென்ஷன்களை அவ்வப்போது கோபமாக காட்டுகிறான். ஆனாலும் அவனை அனுசரித்து போக முயற்சிக்கிறாள் மைதிலி.

இந்நிலையில், மைதிலி தாயாக போகும் செய்தி அறிந்து ராமின் மொத்த குடும்பமும் சந்தோஷப் படுகிறார்கள்.

அந்த நேரத்தில் வரும் மார்னிங் சிக்னஸில் மைதிலி தவிக்க, ஆபிஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறான் ராம். எனவே அந்த பெரிய வீட்டிலும் ஒரு மாதிரியான தனிமையை உணர்கிறாள் மைதிலி.

இதனால் மனதில் ஏற்படும் சஞ்சலம் மற்றும் குழப்பத்துடன் அவள் ராமிடம் பேச, அவன் அவளிடம் கோபத்துடன் எரித்து விழுகிறான், அவளிடம் பேசாமல் பாராமுகமாகவும் இருக்கிறான். அவளை திருமணம் செய்துக் கொண்டதே தவறு என்பது போல குடும்பத்தினரிடமும் சொல்கிறான்.

ராமின் நடவடிக்கைகள் மைதிலிக்கும், ராமின் அம்மா கௌசல்யாவிற்கும் நடுவிலும் இடைவெளியை ஏற்படுத்த மொத்தமாக தனிமைப் படுத்த படுகிறாள் மைதிலி.

இதே நேரத்தில் ராமின் தங்கை சபரியின் திருமண ஏற்பாடும் நடக்கவே குடும்பத்தினர் அனைவரும் அதை பற்றிய கவனத்தில் மைதிலியை கவனிக்க தவறி விடுகின்றனர்.

சபரியின் திருமணம் முடிந்த பிறகு, மீண்டும் ராமுடன் பேசி அவனின் கோபத்தை போக்க முயற்சி செய்கிறாள் மைதிலி. அவன் அப்போதும் கோபமாகவே இருக்கவும், மைதிலி அந்த வீட்டை விட்டு வெளியேறி செல்கிறாள்.

தனியே வீடு எடுத்து தங்கி, தனக்கென ஒரு வேலையை தேடி கொள்பவள், தன் மகன் ஷ்யாமை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறாள்.

நான்கு ஆண்டுகள் இப்படியே செல்ல, ஒரு நாள் ஃபிரான்க்பர்ட்டில் இருந்து நேராக மைதிலியின் வீட்டிற்கு வருகிறான் ராம். அவளையும், ஷ்யாமையும் தன்னுடன் அழைத்தும் செல்கிறான்.

ராமின் வீட்டில் பெரியவர்கள் திகைத்தாலும் ஷ்யாமையும், மைதிலியையும் அன்புடனே வரவேற்கிறார்கள்.

கௌசல்யா மைதிலியிடம் மனம் விட்டு பேசவே அவர்கள் இருவர் இடையே இருந்த இடைவெளி காணாமல் போகிறது. ஷ்யாமும் குடும்பத்தினர் அனைவரிடமும் நன்கு ஒட்டிக் கொள்கிறான்.

மைதிலி மற்ற குடும்பத்தினர் அனைவரிடமும் முன்பு போல அன்பாக இருந்தாலும், ராமிடம் மட்டும் விலகியே இருக்கிறாள்.

ஆனால் முன்பு போல் அதை கோபத்துடன் எதிர் கொள்ளாமல் மைதிலியின் மன வருத்தத்தை சரி செய்ய முயற்சி செய்கிறான் ராம். இறுதியில் அதில் வெற்றியும் பெறுகிறான்.

முன்பு நடந்த குழப்பங்கள் பற்றி மனம் விட்டு பேசி தங்களின் வேற்றுமைகளை மறந்து மனம் ஒன்று படுகிறார்கள் கணவனும் மனைவியும்.

 

Chillzeeயில் இருக்கும் completed stories பட்டியலில் இருந்து நான் படித்த கதை.

கதை ஆரம்பம் முதல் இறுதி வரை மைதிலியின் உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் தேவி.

கணவன் மனைவிக்குள் understanding எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக சொல்கிறது கதை.

இந்த கதையை படித்து முடித்த உடனே, அதை பற்றி ஒரு சில நிமிடங்கள் யோசித்து பார்த்தேன்.

அது என்னவோ மைதிலி ராமை மன்னித்த பிறகும் கூட என்னால் அவரை முழுதாக மன்னிக்க முடியவில்லை ;-) ராம் அளவிற்கு இல்லை என்றாலும் மைதிலி கொஞ்சமாவது அவரிடம் கோபமாக பேசி இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆனால் தொடர்ந்து யோசித்த போது ஒன்று புரிந்தது.

மைதிலி, ராம் நடுவே இரண்டு நாள் பரிச்சயத்திலேயே முழு புரிதல் வந்து விட்டது என்று சொல்லி இருந்தால் கட்டாயம் அது dramatic போல தான் இருந்திருக்கும். சாதாரணமாக Arranged marriageல் கூட ஒன்றிரண்டு முறை பார்த்து பேசி தானே திருமணம் நடக்கிறது.

எனவே திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இரண்டு பேரும் முயற்சி செய்து ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டால் தான் அவர்களுள் புரிதல் ஏற்படும்.

ராம் கதையின் பின் பகுதியில் மைதிலியை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதை முதலிலேயே செய்திருந்தால் அவர்கள் நடுவே பிரச்சனைகளே வந்திருக்காது என்று கதை வழியாக தேவி மறைமுகமாக சொல்வதாக தான் நான் எடுத்துக் கொண்டேன்.

அப்படி யோசித்த போது, அதுவும் எனக்கு ரசிக்கும் படி இருந்தது, ஏனென்றால் அதுவும் உண்மை தானே!

ராமை விட்டு பிரிந்து இருக்கும் போது, மைதிலி அவரின் குடும்பத்தினரை பற்றி ஷ்யாமிடம் சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்த இடம் மனதில் பதிந்தது. அதை பார்த்து ராமின் குடும்பத்தினர் அடையும் மகிழ்ச்சியையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஏனென்றால் இதை நான் வேறு விதத்தில் என் வாழ்விலும் பார்த்திருக்கிறேன். என் இரண்டாவது மகள் பிறந்தது யூ.எஸ்ல். இந்தியா வரும் முன்பே அவளுக்கு எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் பற்றி சொல்லி கொடுத்திருந்தோம். அவள் ஒவ்வொருவரையும் அடையாளம் தெரிந்து சொன்ன போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை நேராகவே பார்க்க முடிந்தது.

ராம் நான்கு வருடங்கள் மனைவியை பிரிந்து இருந்ததற்காக சொல்லும் காரணம் மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தமானதாக இருந்திருக்கலாம் என்று எனக்கு எழுந்த எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

அது ஒன்றை தவிர, திருமண வாழ்வை, அதன் ஏற்ற, இறக்கங்களை, வெகு இயல்பாக, அதே நேரம் நமக்கும் பிடிக்கும் விதத்தில் காதல் blend செய்து ஜனரஞ்சங்கமாக சொல்லி இருக்கிறார் தேவி. அதற்காக கட்டாயம் அவரை பாராட்ட வேண்டும்!

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.