(Reading time: 3 - 5 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 11 - கண்ணிலே அன்பிருந்தால் - ஜெய்சக்தி

பகிர்ந்தவர் - இந்துஸ்ரீ

kanniley-anbirunthal

தையின் நாயகி இலக்கியா ஓரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அழகான பெண். நாயகன் மணிவாசகம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த, தொழில் வெற்றி கண்ட மணமகன். அவரிடம் இருக்கும் ஒரு குறை அவர் கருப்பானவர் என்பதே.

மணிவாசகனின் குடும்பம் மிகவும் பெரிய குடும்பம்.  இலக்கியாவுக்கு மணிவாசகனை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை அதற்கு  ஒரு காரணம்  இலக்கியாவின் தோழி சௌமியா “அவரு ரொம்ப கருப்பு உனக்கு பொருத்தமானவர் இல்லை” என்று கூறிய வார்த்தைகள்.

திருமணம் முடிந்தவுடன் முதலிரவில்  இலக்கியா அழுதுக் கொண்டே "நீங்க கறுப்பு எனக்கு உங்களை பிடிக்கவில்லை" என்று மணிவாசகனிடம் கூறிவிடுவாள்.  

அதனால்  மணிவாசகன் மிகவும் கவலையடைவான்.

கணனை பிடிக்கவில்லை என்றாலும் அவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் இலக்கியா மிகவும் நெருங்கிவிடுவாள்.

காலப்போக்கில் அவளுக்கு அந்த குடும்பத்தில் உள்ள ஒற்றுமை, அவர்களின் அன்பு மற்றும் உழைக்கும் குணம் மற்றும் மணிவாசகனின் நல்ல குணம் மற்றும் அவனின் திறமைகளை கண்டு மெல்ல காதல் மலரும்.

முதலிரவில் அவரிடம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு இப்பொழுது எப்படி உண்மையை கூற முடியும் என்று தயக்கத்துடன்  இருக்கிறாள்.

சில பல நிகழ்வுகளுக்கு பின் மற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்ககளின் உதவியுடன்  இருவரும் இனிதே சேர்ந்து விடுவார்கள் . 

 

மிகவும்  அழகான காதல் மற்றும் குடும்பம் சார்ந்த கதை. நிறம் என்பது ஒரு விஷயம் இல்லை ஒருவரின் குணம்தான் வாழ்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியிருக்கிறார் கதாசிரியர் ஜெய்சக்தி.

நான் வாசித்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகம். பல முறை வாசித்தாலும் சலிக்காத  ஒரு புத்தகம்.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.