(Reading time: 5 - 10 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 14 - மங்களாவின் கணவன் – லக்ஷ்மி

mangalavinKanavan

தையின் நாயகி மங்களா, அவளின் அப்பாவினால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் படுகிறாள். அவளுக்கு சம்மந்தமே இல்லாத காரணங்களால் இரண்டு முறை அவளுக்கு நிச்சயிக்கப் பட்ட திருமணம் நின்று போகிறது. இதனால் ராசியில்லாதவள் என மற்றவர்களால் முத்திரை குத்தப் படுகிறாள்.

அவளுடைய அப்பா எவ்வளவோ முயற்சி செய்தாலும் மங்களாவிற்கு ஏற்ற துணையை கண்டுப்பிடிக்க முடியாமல் போகிறது.

இந்த வருத்தத்திலேயே அவர் இறந்து விட மங்களாவின் வாழ்க்கை மாறி போகிறது. வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அவளுடைய அண்ணன், அண்ணியை நம்பி வாழும் நிலை அவளுக்கு ஏற்படுகிறது.

மங்களாவிற்கு ராசியில்லாதவள் எனும் முத்திரை இருப்பதால் அவளுக்கு திருமணம் நடக்காது என்ற முடிவிற்கு வந்து விடும் அவளின் அண்ணனும், அண்ணியும், அவளின் சம்பாத்தியத்தை தங்களின் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவர்களின் பேச்சும், நடத்தையும் பின் இருபதுகளில் இருக்கும் மங்களாவின் மனதை புண் படுத்தினாலும், அண்ணன், அண்ணி இருவரிடமும் ஒரு வார்த்தையும் மறுத்து பேசாமல் அமைதியாக நாட்களை ஓட்டுகிறாள். அவளின் வாழ்வில் இருக்கும் ஒரே சந்தோஷம் உயிர் தோழி லீலா மட்டுமே.

இந்நிலையில் மங்களா வேலை செய்யும் அலுவலகத்தில் புதிய மேனேஜராக பொறுப்பேற்கிறான் காசிநாதன். மங்களாவின் மனம் அவனின் நல்ல குணத்தினால் அவனிடம் ஈர்க்கப் படுகிறது. ஆனாலும் அவளின் பொதுவான குணத்தின் படி அதை வெளியே காட்டிக் கொள்ளாமலேயே இருக்கிறாள்.

மங்களாவின் அண்ணன் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அதற்கு மங்களா பணம் கொடுத்து உதவ வேண்டும் என கட்டளை இடுவது போல அவளிடம் பணத்தையும் கேட்கிறார்.

அண்ணனின் நடவடிக்கைகளால் மனம் புண் படும் மங்களா வீட்டை விட்டு வெளியே வந்து லீலாவின் உதவியுடன் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதி ஒன்றில் தங்குகிறாள்.

துரதிரஷ்டவசமாக அந்த விடுதி வாழ்வும் மங்களாவிற்கு கசப்பான அனுபவத்தையே தருகிறது. ஒரு நாள் மங்களா ஹாஸ்டலுக்கு திரும்ப தாமதமாகி விட்டதால் விடுதி கதவை திறக்க மறுக்கிறாள் அந்த விடுதியின் வார்டன்.

நள்ளிரவில் போகும் இடம் இல்லாமல் தெருவில் நிற்கும் மங்களாவிற்கு உதவுகிறான் காசிநாதன். அத்துடன் இல்லாமல் அவளுக்கு உயர்தரமான விடுதி ஒன்றிலும் தங்க இடம் ஏற்பாடும் செய்து தருகிறான்.

ஒரு நாள் மங்களாவை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக காசிநாதன் மனம் திறக்க, ஆச்சர்யப்பட்டாலும் அவனின் காதலை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறாள் மங்களா.

மங்களாவின் அண்ணன் முதல் அனைவரும் மங்களா ராசி இல்லாதவள் என்று சொல்லி காசிநாதனின் மனதை மாற்ற முயலுகிறார்கள். மங்களாவின் மனதில் பாலை வார்க்கும் விதத்தில் அவற்றை கண்டுக்கொள்ளாமல் விடுகிறான் காசிநாதன்.

வேலை சம்மந்தமாக டெல்லி செல்லும் காசிநாதன் திடீரென மங்களாவிடம் தொடர்புக் கொள்ளாமலே இருக்கிறான். அலுவலகம், குடும்பம் என எங்கும் அனைவரும் மங்களா ராசி இல்லாதவள் என்று தெரிந்துக் கொண்டதால் அவன் ஓடிப் போய் விட்டதாக புரளி பேசுகிறார்கள்.

காசிநாதன் இப்படி செய்வான் என்று எதிர்பார்த்திராத மங்களா, மனம் புண் பட்டு மும்பையில் இருக்கும் லீலாவின் வீட்டிற்கு செல்கிறாள்.  

 

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்

லீலாவின் வீட்டில் இருக்கும் மங்களாவை வந்து சந்திக்கிறான் காசிநாதன். அவள் கோபப்பட, தான் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு மருத்துவமனையில் இருந்ததை பொறுமையாக அவளிடம் சொல்கிறான் காசிநாதன். திடுக்கிட்டு போகும் மங்களா, தான் ராசி இல்லாதவள் தான் என்ற முடிவிற்கு வருகிறாள். அவர்கள் திட்டமிட்ட திருமணம் வேண்டாம் என மறுக்கிறாள். அவளின் பேச்சை ஏற்றுக் கொள்ள மறுக்கும் காசிநாதன். மங்களாவினால் தான், தான் உயிர் பிழைத்ததாக சொல்கிறான். மங்களாவின் மனதையும் தன் அன்பினால் மாற்றுகிறான். மனம் நிறைந்த சந்தோஷத்துடனும், அன்புடனும், திருமதி மங்களா காசிநாதன் ஆகிறாள் மங்களா.*************************** End of Spoiler *********************************** 

டைமுறை வாழ்க்கையை போன்ற சம்பவங்களையும், படிப்பவர்களுக்கு ஆர்வத்தை கொடுக்கும் விதத்தில் ஜனரஞ்சகமான விதத்தில் கொடுக்க லக்ஷ்மி அவர்களால் மட்டுமே முடியும் என மீண்டும் ஒருமுறை அழுத்தமாக சொல்லும் கதை இது.

எந்த காரணத்திற்க்காக திருமணம் நின்றாலும், அதில் சம்மந்தப்பட்ட ஆணை விட்டு விட்டு பெண்களை பற்றி மட்டும் புரளி பேசும் இந்த உலகை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் லக்ஷ்மி.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன் எழுதி இருந்தாலும் பெண்கள் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதையும் மங்களாவின் வழியாக சொல்லி இருக்கிறார். நல்ல விஷயங்களை எடுத்து சொன்னாலும் அதை போர் அடிக்காமல் ஆர்வத்தோடு கதை வாசிக்கும் விதத்தில் சொல்லி இருப்பது லக்ஷ்மி அவர்களின் தனித்துவம்!

இன்றும் நம் வாழ்வோடு தொடர்புக் கொள்ளக் கூடிய விதத்தில் கதை இருப்பது மிக பெரிய ப்ளஸ். காசிநாதனும் சரி, மங்களாவும் சரி கதை படிப்பவர்களின் மனதில் வெகு நாட்கள் நீடித்திருப்பார்கள் என்பதில் எந்த கேள்வியுமில்லை.

காதல் கலந்த அழகான குடும்ப கதை.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.