நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
நாம் படித்தவை - 18 - தியாக பூமி – கல்கி

புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சாதி பேதமில்லாமல் உதவுகிறார் சம்பு சாஸ்த்ரி. இதனால் கோபப்படும் அவருடைய சக மனிதர்கள் சம்பு சாஸ்த்ரியையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைக்கிறார்கள்.
எனவே தன் சொந்த ஊரை விட்டு மெட்ராஸிற்கு வருகிறார் சம்பு சாஸ்த்ரி.
சம்பு சாஸ்த்ரியின் ஒரே மகள் சாவித்திரியை கல்கட்டாவில் இருக்கும் ஸ்ரீதரனுக்கு திருமணம் செய்துக் கொடுத்திருக்கிறார்.
மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் ஸ்ரீதரனுக்கு கிராமத்து பெண்ணான சாவித்ரியை மணக்க துளியும் விருப்பமில்லை. எனவே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்து ஏதேதோ செய்து பார்க்கிறான். ஆனால் இறுதியில் அவனுடைய அம்மாவின் பேச்சே ஜெயிக்கிறது. விருப்பமில்லாமல் சாவித்ரியை மணமுடிக்கிறான் ஸ்ரீதரன்.
திருமணத்திற்கு பின் ஸ்ரீதரனும், அவனின் அம்மாவாலும் பல விதமான துன்பங்களுக்கு ஆளாகும் சாவித்திரி, இறுதியில் கர்ப்பிணியாக வீடில்லாமல் தெருவில் நிற்கிறாள்.
மெட்ராஸில் ஒரு அரசு மருத்துவமனையில் சாவித்ரிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. மனம் வெறுத்து போய் இருக்கும் சாவித்ரியின் கண்ணில் எதிர்பாராமல் படுகிறார் சம்பு சாஸ்த்ரி. கோபத்தில் இருக்கும் சாவித்திரி அவரிடம் நேரில் சென்று பேசாமல், தன் மகள் சாருவை அவரின் பொறுப்பில் திணித்து விட்டு மாயமாகிறாள்.
சம்புசாஸ்த்ரி மகாத்மா காந்தியின் வழிகளில் கவரப்பட்டு கள்ளுக் கடை மறியல் மற்றும் பல விதமான சமுக முற்போக்கு போராட்டங்களில் ஈடுபடுகிறார்.
வருடங்கள் சில ஓடிவிட, உமாராணி எனும் நாகரிகம் மிக்க பணக்கார பெண்ணாக மீண்டும் தோன்றுகிறாள் சாவித்திரி. சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்துக் கொண்டிருந்த தன் அத்தையை சந்தித்தன் மூலம் பணத்தையும், நாகரிக முறைகளையும் கற்றுக் கொண்டிருக்கும் சாவித்திரி, தன் பணத்தைக் கொண்டு பல தர்ம காரியங்களும் செய்கிறாள்.
அவளை பார்க்கும் ஸ்ரீதரன், அவள் தன் மனைவி சாவித்திரி என்பதை கண்டுபிடித்து விடுகிறான். அவள் தான் விரும்பியது போலவே மாறி இருப்பதை உணர்ந்து அவளிடம் அன்பு பாராட்ட முயல்கிறான். ஆனால் சாவித்திரி அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.
*************************** Spoiler ahead ***********************************
கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்தன் மனைவி தன்னுடன் வாழ மறுப்பதாக சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்கிறான் ஸ்ரீதரன். வழக்கின் நடுவே சாறு சாவித்திரி, ஸ்ரீதரனின் மகள் என்றும் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட மொத்த மெட்ராஸ் மக்களும் அந்த வழக்கை தொடர்கிறார்கள். அந்த காலத்து சட்ட படி கணவன் விரும்பினால் மனைவி கட்டாயம் அவனுடன் சென்று வாழ தான் வேண்டும் என்று இருந்தாலும் மக்கள் சாவித்திரி பக்கமாக யோசிக்கிறார்கள். வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி குழம்பி போகிறார். ஆனாலும் சட்டபடியே முடிவு எடுக்கிறார். தீர்ப்பு வந்த பிறகும் கணவனுடன் சென்று வாழ விரும்பாமல் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்கிறாள் சாவித்திரி. வழக்கு நடக்கும் போது ஸ்ரீதரனின் மனமும் மாறி போகிறது. அவனும் சாவித்ரியை கட்டாயப்படுத்தாமல், தன்னையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்கிறான். இருவரின் முடிவும் ஒன்றாக இருப்பதை பார்க்கும் சம்பு சாஸ்த்ரி, இருவரும் ஒருநாள் மனம் ஒன்றாகி கணவன் மனைவியாகவும் வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை கொள்கிறார்.*************************** End of Spoiler ***********************************
1939ல் எழுத பட்ட இந்த கதையில் இருக்கும் முற்போக்கான விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். சாதி பேதமை, பெண்கள் முன்னேற்றம், சுதந்திர போராட்டம், மேற்கத்திய கலாச்சார மோகம் என இன்று 2018 நாம் பார்க்கும் பல விஷயங்களை பற்றி அன்றும் எழுதி இருக்கிறார் கல்கி.
சுதந்திரம் கிடைக்கும் முன் எழுதிய கதையில்,
ஒரு ஆண் தன் மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்றால் அவளுக்கு ஜீவனாம்சம் என சிறிய தொகையை கொடுத்து பிரிந்து சென்று விடலாமே, அதே போல நானும் என் கணவனுக்கு ஜீவனாம்சம் தருகிறேன், அவனுடன் வாழ முடியாது
என்று சாவித்திரி சொல்லும் இடத்தில் கல்கிக்கு கை தட்டுவது மட்டுமல்லாமல் கை எடுத்தும் கும்மிடலாம் என்று தோன்றுகிறது.
எத்தனை வருடங்கள் சென்றாலும் அழியாமல் நம் மனதில் நிற்கும் உன்னதமான கதை.
நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால்,
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:703}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.