(Reading time: 7 - 14 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 19 - புது வரவு – என்.சீதாலட்சுமி [சுமதி கு]

puthuVaravu

நான் இன்று வாசித்த என்.சீதாலட்சுமி  எழுதிய "புது வரவு" நாவல் பற்றி உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். 

வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இருவர் (அனுஜா, நிஷாந்த் ) ஒரு அலுவலகத்தில் ஒன்றாய் பணியில் சேரும்பொழுதில் அறிமுகம் ஆகுகிறார்கள். அனுஜாவின் குழந்தைத்தனமான பேச்சு மற்றும் செயல்களால் கவரப்படுகிறான் நிஷாந்த். வேறு பிரிவுகளில் வேலை என்றாலும் அடிக்கடி பேசி பழகி இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

உடன் பணிபுரியும் ஒருவர்(செந்தில்) அனுஜாவிடம் தன காதலை சொல்ல, அதை செந்திலின் முன்னாள் காதலியிடம் சொல்லி அவளிடம் திட்டுவாங்கிக்கொண்டு சோகமாய் அழுதுகொண்டிருக்கும் அனுஜாவை விசாரிக்க வருகிறான் நிஷாந்த். அப்பொழுது தான் அவளை காதலிப்பதையும் சொல்லி பதில் கூற அவகாசம் கொடுத்து செல்கிறான்.

வார  விடுமுறையில் அனுஜா அவளின் ஊருக்கு செல்ல, அன்று சென்னையில் மழையாலும் அவளின் ஊரிலும் கலவரத்தாலும் பயணம் தடைபட, விடுதி திரும்புகிறாள் அனுஜா. விடுதி வரும் வழியில் அவள் சிக்கலில் மாட்ட, நிஷாந்தை துணைக்கழைக்கிறாள் அனுஜா. அந்த நேரத்தில் அவளுடைய (நிஷாந்தின் மீதான) காதலையும் உணர்கிறாள் அனுஜா.

அனுஜாவின் வீட்டில் மொத்த குடும்பத்துக்கே(பெரிய கூட்டு குடும்பம்) இளவரசியாக வளர்க்க பட்டாலும், அவளின் காதலை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள் அவள் பெற்றோர். நிஷாந்தின் வீட்டில் ஒரு படி மேலே போய் அவனுடைய சிறு வயது தோழியையே(சரிதா) மணம் பேசி முடித்து விடுகிறார்கள் .

இருவர் வீட்டையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். அனுஜாவை ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொள்கிறான்  நிஷாந்த். இப்படியாக நாட்கள் இனிதே செல்கிறது. நிஷாந்த்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போக, சமயலறைப் பக்கம் அனுஜாவின் கவனம் செல்கிறது.

நிஷாந்தின் பால்ய வயது சிநேகிதன் ஆனந்த் சரிதாவை நேசிக்க, அவர்களின் திருமண அழைப்பு வருகிறது. அதில் கலந்து கொள்ள கும்பகோணம் செல்கிறார்கள். அங்கே டில்லியிலிருந்து வரும் நிஷாந்த்தின் பெற்றோரை சந்தித்தாலும் அவர்களின் கோபம் குறையாமல் இருக்கிறது. அப்பொழுது அனுஜாவை தேற்ற  சரிதா கூறும் வார்த்தைகள் "ஒரு குழந்தை பிறந்தால் இரு வீட்டிலும் கோபம் மறந்து உங்களுடன் சேர்ந்து விடுவார்கள். கவலைப்படாதே."

இதன்பின் குழந்தையின் வரவு தான் இதற்கு தீர்வு என்று குழந்தை பெற்றுக்கொள்ள  நினைக்கிறாள் அனுஜா. அனுஜாவே இன்னும் குழந்தை என்று வாதிடும் நிஷாந்த்தையும் தன முடிவுக்கு பணியவைக்கிறாள். நிஷாந்தே சாப்பிட சொன்னாலும் அவனின் உறவுகளின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அவளுக்கு மிகவும் பிடித்த நான்-வெஜ் அயிட்டங்களையும் தவிர்க்கிறாள். குழந்தை விஷயத்தில் அனுஜா மெனக்கெடுவதை கண்டு இருவரும் டாக்டரிடம் செல்கிறார்கள். பரிசோதனையின் முடிவில் அனுஜாவுக்கு தைரொய்ட் பிரச்சினை என்று வருகிறது. அதற்கு சிகிச்சையும் எடுத்து கொள்கிறார்கள்.

அனுஜாவுக்கு  தன் குலதெய்வக்கோயிலில் செய்த சத்தியம் ஞாபகத்திற்கு வருகிறது. தன் பெற்றோர் சம்மதத்தில் தான் நிஷாந்த்தை மணம் முடிப்பேன் என்று சத்தியம் செய்யும் அனுஜா நிஷாந்த்தின் வட்ப்புறுத்தலால் தான் உடனே திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். அந்த சத்தியத்தால் தான் அவளுக்கு குழந்தை விஷயத்தில் மென்மேலும் பிரச்சினனைகள் வருவதாக நினைக்கும் அனுஜா அதை நிஷாந்த்திடம் தெரிவிக்கிறாள். எல்லோருக்காகவும் யோசித்து அனுஜா மிகவும் அழுத்ததிட்குள்ளாகிறாள் என்று நினைக்கும் நிஷாந்த் அவள் மேலும் வருத்தத்திட்க்குள்ளாகவிடுவாளோ என்றும் பயந்து அவளை குல தெய்வக்கோயிலுக்கு கூடி செல்வதை தவிர்ப்பதோடு அவளிடம் கடுமையாகவும் நடந்து கொள்கிறான்.

இந்த நேரத்தில் அலுவலகத்தில் அவனுக்கு வேலைப்பளு கூடுகிறது. அனுஜாவிற்கு ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனை செல்கிறார்கள். அதன் முடிவில் ஒரு சின்ன ஆப்பரேஷன் ( கர்ப்பப்பையில் இருந்து கட்டியை அகற்றும்) செய்ய வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் அவன் வெளிநாட்டிட்கு சென்றே ஆகவேண்டிய அலுவலக பணி வந்து சேர்கிறது. அவன் இரண்டு நாள்தானே என்று அலுவலக வேலையாக வெளிநாடு சென்று வாருங்கள் என்று டாக்டர் சொல்ல, அரை மனதாக செல்கிறான் நிஷாந்த். ஆனால் வெளிநாட்டில் ஏற்படும் இயற்கைச்சீற்றத்தால் நினைத்தது போல் இரண்டே நாட்களில் வரமுடியாமல் போகிறது.

அவனும் இரண்டு வீட்டார்களிடமும் நிலைமையை சொல்லி உதவி கேட்கிறான். ஆனாலும் நிஷாந்த் மற்றும் இரு வீட்டார்கள் வீடு திரும்பும்பொழுது அனுஜா வீட்டில் இருக்கவில்லை. மனம் உடைந்து போகிறான் நிஷாந்த்.  

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்அவன் அனுஜாவை பார்த்துக்கொள்ள நியமித்திருந்த நர்ஸ் அவனை புரிந்துகொண்டு தேற்றுகிறாள். அவனின் அன்பை உணர்ந்த அனுஜாவின் அண்ணன், அம்மா மற்றும் நிஷாந்த்தின் பெற்றோர் வியந்து போவதோடு அவர்களின் கோபமும் மறைகிறது. அதே நேரத்தில் அனுஜா அவளின் குலதெய்வக்கோயிலுக்கு தனியாகவே சென்றுவிடுகிறாள். ஆனால் ஆபரேஷன் முடிந்து போதிய ஓய்வு இல்லாத காரணத்தால் அனுஜா  கோயிலில் மயங்கி விழ, பூஜாரி அவளின் அண்ணா/அப்பாவுக்குத்  தெரிவிக்கிறார். அவளை மருத்துவமனையில் சேர்க்கும் அவளது அண்ணாவும் அப்பாவும் அவள் நிஷாந்த் மீது வைத்திருக்கும் நேசத்தை உணர்கிறார்கள். நிஷாந்த்தை அழைத்து விஷயத்தை சொல்லி வரச்சொல்கிறார்கள். இரு வீட்டாரும் பாசத்துடன் இருவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். நிஷாந்த் மட்டும் சொல்லாமல் வந்துவிட்டாயே என்ற கோபத்தில் இருந்தாலும் அனுஜாவின் வார்த்தைகள் அவனை சமாதானப்படுத்துகிறது. ஆறு மாதங்களில் அனுஜா கருவுருகிறாள். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. மூன்று வருடங்கள் கழித்து நிஷாந்த் மற்றும் அனுஜா வேலை காரணமாக சிங்கப்பூர் செல்ல , இரண்டு குழந்தைகளையும் இரு தாத்தா பாட்டி வீட்டில் ஒரு மாதம் தங்குகிறார்கள். அப்பொழுது குழந்தைகளின் நட்பண்புகளையும் அவர்களை நல்ல முறையில் வளர்த்துள்ள அனுஜாவின் திறமையை அவள் வீட்டில் உணர்ந்து மகிழ்கிறார்கள்.*************************** End of Spoiler *********************************** 

ரண்டு வீட்டையும் எதிர்த்து செய்யும் திருமணங்களில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளில் ஒன்றான "பெரியவர்களின் துணை" என்ற கருவை அடிப்படையாக கொண்ட கதை. செல்லமாய் வளர்ந்தாலும் எல்லோருக்காகவும் யோசிக்கும் அனுஜாவிற்கு அவள் எதிர்பார்க்கும் அவளின் அன்பின் எதிரொலி அவளின் புகுந்த வீட்டிலும் கிடைப்பதில் நம் மனம் நிறைகிறது. அவளுக்கு தேவையான சமையல் மற்றும் குழந்தை, வீடு நிர்வகிக்கும் திறன் என்று தேவைப்படும் நேரத்தில் பெண்கள் கற்றுக்கொண்டு ஜொலிக்கும் நிறைய பெண்களை நேரிலேயே பார்த்து வியக்கும் எனக்கு இந்த கதையின் கதைநாயகி அனுஜா மனம் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. படித்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். 

இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஆழ்மனது நம்பிக்கைகள் ( belief ) பொறுத்தே வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதால் - நாம் நேசிப்பவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி நடப்பது - நேசிப்பவர் மற்றும் நேசிக்கப்படுபவர் இருவருக்கும் நன்மையே  விளைவிக்கும்.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.