(Reading time: 2 - 4 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 17 - சொர்கத்தைக் கண்டேனடி – ரமணிசந்திரன்

sorgathaiKandenadi

மீபத்தில் தாயை இழந்த சகோதரிகள் வாணி, பானுமதி தங்களின் வாழ்க்கையை நிலை செய்துக் கொள்ள சென்னையை விட்டு திருச்சியை அடுத்த புறநகர் பகுதிக்கு குடிபெயர்கிறார்கள்.

அங்கே தவறான புரிதலால், பஞ்சாயத்து தலைவராக இருக்கும் புவன பூபதிக்கும் வாணிக்கும் இடையே முதலில் மோதல் ஏற்படுகிறது.

போக போக வாணியை பற்றி தெரிந்துக் கொள்ளும் புவன பூபதி, அவளுக்கு உதவுகிறான்.

புவன பூபதி பழைய ராஜ வம்சத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்து ஆச்சர்யப்படும் வாணி, அவனுடைய அம்மாவாக அவன் கருதும் பெரியம்மா பெரியநாயகியையும் சந்திக்கிறான்.

நேரடியாக சொல்லிக் கொள்ளாவிட்டாலும் புவன பூபதிக்கும், வாணிக்கு இடையே நேசம் வளர்கிறது.

நடுவில் பெரியநாயகியின் மகன் சுந்தர ராஜா இவர்களை பிரிக்கவும், புவன பூபதிக்கு கெட்ட பெயரை கொண்டு வரவும் செய்யும் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு, மனம் விட்டு பேசி இணைகிறார்கள் இருவரும்.

ளிமையான கதையை தன்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறார் ரமணி சந்திரன்.

மது பழக்கம், ஆர்கானிக் உணவுகள், சிகப்பு கொய்யா என்று மட்டும் அல்லாமல் பாகுபலியையும் சேர்த்து இன்றைய காலத்திற்கேற்ப கதையை கொடுத்திருக்கிறார்.

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.