(Reading time: 3 - 5 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 16 - பனிமலர்ச் சோலை - ஜெய்சக்தி

பகிர்ந்தவர் - இந்துஸ்ரீ

panimalarsolai

ரவணபவனின் மனைவி இறந்துவிட்டார்,அவரின் இரண்டு வயது மகனை மனைவியின் தங்கை ஜெயஜோதி  பார்த்துக்கொள்கிறார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறும், அதற்கு சம்மதம்  இல்லை என்றால் குழந்தையை தானே வைத்துக் கொள்கிறேன் இடரும் ஜோதியிடம் சொல்கிறார் சரவணபவன். 

கலங்கும் ஜோதி குழந்தைக்காக அவரை மணந்துக் கொள்கிறார். ஒரு வருட திருமண வாழ்வில் சரவணபவனின் குணங்களை புரிந்து கொண்டு அவரை காதலிக்கிறார் ஜோதி. 

சரவணபவனின்  அண்ணாவின் திதியை தன் மகனை வைத்து செய்கிறார்கள் அதை பார்த்த ஜோதிக்கு சந்தேகம் வருகிறது, தன் அக்காவின் வாழ்வில் நடந்தது  என்ன என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

கணவனிடம் கேட்டால்  ஒழுங்கான பதில் இல்லை. அந்த வீட்டில் ஒரு அறை உள்ளது, அவள் அக்காவின் அறை. அதை திறந்து பார்ப்பதற்கு தடை விதிக்கிறார்கள் அதனால் கணவன் இல்லாத நேரத்தில் அந்த அறையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

கணவனிடம் சண்டைபோட்டு அக்காவின் வாழ்வில் நடந்தது என்ன என்று தெறிந்து கொள்கிறாள்.

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்

சரவணபவனின் அண்ணாவிற்கும்(ஹரி) ஜோதியின் அக்காவிற்கும்(சிவா) காதல் மலர்கிறது. அண்ணா சாகச விளையாட்டில் ஆர்வம் கொண்டவன், இதனால் அவர் glider விபத்தில் இறந்து போகிறார். அண்ணாவின் காதலி கர்ப்பமாக இருப்பதை தெரிந்துக் கொண்ட பின் அவளை திருமணம் செய்து கொள்கிறான் சரவணபவன். காதலனை மறக்க முடியாத சிவா குழந்தை பிறந்த பின் depression காரணத்தினால் இறந்து போகிறார். உண்மையை தெறிந்து கொண்ட பின் கணவனை நினைத்து பெருமை அடைகிறாள் ஜோதி. *************************** End of Spoiler *********************************** 

ரொம்ப விறுவிறுப்பான கதை, நமக்கு கூட கதையின் முடிவில் சரவணபவன் மீது காதல் மலரும்.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.