(Reading time: 5 - 10 minutes)

01. நானும்... என் கதையும்... - பிந்து வினோத்

My Stories

 

ந்த வருடம் வேலன்டைன்ஸ் டேக்கு கடைசி நிமிடத்தில் ஒரு ஆர்டிகில் எழுத முடியுமான்னு கேட்டாங்க.

நான் அன்று பிஸி என்பது ஒன்று, மற்றபடியும் நான் என்னன்னு எழுத! frown

நான் கதைன்னு சொல்லி எழுதினாலே நிறைய பேர் உங்க வாழ்க்கைல நடந்ததான்னு கேட்குறாங்க smile. அதிலும் சமீபத்தில் நான் எழுதிய ‘இது என்னுடைய காதல் கதை’ வந்த நேரத்தில், என்னுடைய சொந்த அக்காவே, உன்னுடைய கதை எழுதி இருக்கீயாமேன்னு கேட்ட போது, நான் ஒரு ‘ஞே’ லுக் மட்டுமே விட முடிந்தது laughing.

பொதுவாக என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள், காதில் விழும் விஷயங்கள் நிறைய விதத்தில் என் கதையை influence செய்யும் smile அதில் கொஞ்சம் கொஞ்சம் என் சொன்தாஹ் கதையும் உண்டு... என் ஃப்ரென்ட்ஸ் கதையும் உண்டு... smile சரி அதை விடுவோம்... விஷயத்திற்கு வருவோம்..

இந்த வேலன்டைன்ஸ் டே ஆர்டிகில் பற்றி பேசியதில் எனக்கு ஒரு ஐடியா ஸ்ட்ரைக் ஆனது... சொந்த கதை இல்லாமல் நான் எழுதிய, எழுத போகும் கதைகளின் ஹீரோ – ஹீரோயின், ரொமான்ஸ், டூயட் பத்தி சொல்லலாமேன்னு நினைத்தேன்.

அது தான் இந்த “நானும் என் கதையும்” சீரிஸ்.

தையை பற்றி பேசுவதற்கு முன், என்னுடைய புனைபெயர்களை பற்றி பேசுவோம்.

ஏன் இத்தனை பேருல எழுதுறீங்க அப்படின்னு என் கிட்ட எத்தனை பேர் கேட்டிருக்காங்க என்று கணக்கே இல்லை.

201௦ல் புயலுக்கு பின் எழுத தொடங்கிய போது 2017ல் நான் எழுதிக் கொண்டிருப்பேன்னு 1% கூட நினைக்கலை... அதும் இத்தனை பெயர்களில் எழுதுவேன்னு நினைக்கவே இல்லை.

என் முதல் புக் ‘உயிர் கேட்கும் அமுதம் நீ’ வீட்டுக்கு வரும் வரைக்கும், என் அம்மா, அப்பா முதல் அக்கா வரை யாருக்குமே நான் எழுதுவது பற்றி தெரியாது...

உண்மையில், என் கணவர் ‘சதி’ செய்து பிந்து வினோத் என்ற பெயரில் அந்த புக் பப்ளிஷ் செய்திருக்காவிட்டால், பிந்து வினோத் என்று ஒருவர் இருப்பதே உங்கள் அனைவருக்குமே தெரியாமல் போயிருந்திருக்கும் wink

என்ன செய்வது நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று.

Names

ன்னுடைய புனை பெயர்களை நான் எப்படி பிரித்து வைத்திருக்கேன் என்று சொல்றேன். இது உங்களுக்கும் என் கதை படிக்கும் போது என்ன எதிர்பார்ப்பது என்று ஐடியா கொடுக்கும்னு நினைக்கிறேன்.

வினோதர்ஷினி

து நான் புயலுக்கு பின் எழுத பயன்படுத்திய புனைப்பெயர்.

இந்த பெயரில் வரும் கதைகள் குடும்பம், பெண்ணியம் & சமூகம் சார்ந்த கதைகளாக இருக்கும்.

இதில் ரொமான்ஸ் இருந்தாலும் குறைவாக இருக்கும்.

இங்கே வரும் கதைகள்,

புயலுக்கு பின்

பனிப்பாறை

மலையோரம் வீசும் காற்று

 

ஆதி

து என் தோழி தேன்மொழி கண்டுபிடித்த புனைப்பெயர். நான் அவங்க கிட்ட இருந்து காசு எதுவும் கொடுக்காமல் எடுத்துக்கிட்டேன் smile.

இந்த பெயரில் எழுதிய முதல் கதை ‘மனம் விரும்புதே உன்னை’

நான் சொல்லாமலே உங்களுக்கே புரிஞ்சிருக்கும். இந்த் பெயரில் வரும் கதைகள் 100% காதல் கதைகள்ன்னு சொல்லலாம். பொதுவாக ரொமான்ஸ் கூடவே குடும்பம், காதல், பிரென்ட்ஸ்ன்னு ஜாலியா போகும் கதை.

இங்கே வரும் கதைகள்

மனம் விரும்புதே உன்னை

விளக்கேற்றி வைக்கிறேன்...

வேறென்ன வேண்டும் உலகத்திலே

மலர்கள் நனைந்தன பனியாலே

பார்த்தேன் ரசித்தேன்

 

வினோதா

து ஒரு வாசகியாக என்னுடைய ஃபேவரைட் கேட்டகரி.

காதல் - குடும்பம் - நட்பு எல்லாமே சமவிகிதத்தில் கலந்த கதைகள் இந்த பெயருக்கு கீழே வரும். எதுவுமே மிகையாக இருக்காது.

இந்த பெயரில் நான் எழுதிய முதல் கதை ‘கம்பன் ஏமாந்தான்’

இங்கே வரும் கதைகள்

கம்பன் ஏமாந்தான்

நீ தானா

காதல் நதியென வந்தாய்

உன்னை பார்த்திருந்தேன்

உன் ஆசை முகம் தேடி

கனவுகள் மட்டும் எனதே எனது

அ-ஆ-இ-ஈ

என்றென்றும் உன்னுடன் 1

என்றென்றும் உன்னுடன் 2

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.