(Reading time: 4 - 8 minutes)

தொடர் - நானும்... என் கதையும்... - 04 - நான் ஏன் எழுதுகிறேன்? - பிந்து வினோத்

Why do I write

நான் ஏன் எழுதுகிறேன்?

கடந்த ஒரு சில நாட்களாக மனதில் எழுந்திருக்கும் கேள்வி இது!

என்ன இப்படி ஒரு ஆராய்ச்சி அப்படின்னு கேட்குறீங்களா?

அது என்னவோ தோன்றியது! எனக்கு தெரிந்த அளவில் என் நெருங்கிய & தூரத்து உறவில் எழுதுபவர்கள் யாரும் இல்லை.

சொல்ல போனால் கதைகள் படிப்பவர்களை கூட கை விட்டு எண்ணி விடலாம்.

அப்புறம் எப்படி நான் மட்டும் இப்படி??

இந்த கேள்வி வந்ததோ இல்லையோ கூடவே சில நினைவுகள்...

1. என்னோட கல்லூரி தோழியிடம் பேசிய போது, என்னுடைய கதைகள் பற்றி எல்லாம் பேசி விட்டு,

“நீ காலேஜ் பஸ்ல எனக்கு நிறைய கதை சொல்வீயே ஞாபகம் இருக்கா?”ன்னு ஒரு கேள்வி கேட்டாள்.

இங்கே அவள் சொல்லும் கதை, என் சொந்த கதை இல்லை. நான் படித்த கதைகளை பகிர்ந்துக் கொள்வது ;-)

ஒவ்வொரு நாளும் காலேஜ் – வீடு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் * 2 நாங்கள் ஒன்றாக பயணம் செய்யும் போது, நான் படித்து,  எனக்கு பிடித்த கதைகளை அவளிடம் சொல்வேன். முக்கியமாக ரமணிச்சந்திரன் மற்றும் 'கண்மணி' கதைகள்....!

இப்படி கதைகளை சொல்வது எனக்கு ரொம்ப பிடித்த ஒரு விஷயம்...

என் கிளாஸ் பசங்கள் கூட,

“பிந்து என்ன சின்னக் குழந்தையா, எப்போ பார் கதை சொல்றா...” ன்னு என் தோழியிடம் ஓட்டியதுண்டு..!

2. அடுத்த நினைவு, ஸ்கூல் லெவல்!

இது என் பள்ளித் தோழி என் முதல் புக் வெளியான போது வாழ்த்தி விட்டு சொன்னது,.

“உனக்கு பிடிச்ச மாதிரியே புக் எழுதுறீயே, பரவாயில்லை!”

கொஞ்சம் ஷாக் ஆக இருந்தது :-)

நான் எப்போ ஸ்கூல் படிக்கும் போது கதை எழுதுவதை பற்றி சொன்னேன்னு ஒரே குழப்பம்.

ரொம்ப யோசித்ததில் நினைவு வந்தது.... மேலே காலேஜில் சொன்ன அதே கதை தான் இங்கேயும்... ஹி ஹி ஹி...!

லஞ்ச் நேரத்தில் சில சமயங்களில் நான் படித்த கதைகள் சொன்னதுண்டு....! அதை தான் இவள் சொல்லி இருக்கிறாள் என்பது புரிந்தது.

3. இந்த லெவலுக்கு அடுத்தது, விடுமுறை நாட்களில் ஊருக்கு போகும் போது என் பெரியம்மா மகள்களுடன் கதைகள் பகிர்ந்துக் கொண்ட நேரம்...

நிறைய கதைகள் அவர்களும் சொல்வார்கள், நானும் சொல்வேன்...

ஊரில் செலவிடும் நேரங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் இது...!

ந்த நினைவுகள் தான் கதைக்கும் எனக்கும் இருக்கும் லிங்க்!

அப்படி தீவிரமாக கதைகள் படித்து பகிர்ந்துக் கொண்டிருந்த என்னை எழுத வைத்தது எது?

மீண்டும் என்னுடைய நினைவுகளிடமான விசாரணை தொடர்ந்தது...

இதற்கான கிரெடிட் முழுக்க முழுக்க நான் வேலை செய்த இன்போசிஸ்க்கே ;-)

ன்னவோ ஏதோ என நினைத்து விடாதீர்கள்.

புறநகர் பகுதி ஆபிஸ் என்பதால் தினமும் ‘அதே’ ஒன்றரை மணி நேர பயணம். ஆனால் கல்லூரி போல பேசி அரட்டை அடிக்க யாருமில்லை.

நத்தை போல நகரும் போக்குவரத்து நெரிசலில் எதை வேடிக்கை பார்ப்பது...?

அப்படி தான் என்னுடைய முதல் கதை மனதில் உருவானது....

கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறேனோ இல்லையோ அரவிந்த் – சாந்தி (புயலுக்கு பின்) வாழ்க்கை பற்றி யோசித்து பார்ப்பேன்...!

ஒரு நாள் யோசித்தது பிடிக்காவிட்டால், மறுநாள் அதை மாற்றி விடுவேன்...

இதை நான் தொடங்கியது திருமணத்திற்கு முன்பே.... ஆனால் எழுத தொடங்கியது என்னவோ திருமணத்திற்கு பிறகு தான்.

என் கதைகள் பேச்சு மொழியில் இருப்பது நான் மேலே சொன்ன கதை 'சொல்லும்' / 'நினைக்கும்' காரணங்களால் தான் என்று நினைக்கிறேன் :-)

ஒரு விதத்தில் அது தான் எழுதுவதில் எனக்கு பிடித்த விஷயமும் கூட. :-)

ழுதியது பல விதங்களில் எனக்கு உதவியும் இருக்கிறது. குறிப்பாக வேலை செய்த நாட்களில் தலை மேலே ரயில் ஓடுவது போல இருக்கும் டென்ஷனை குறைக்க பெரிதும் உதவி இருக்கிறது.

பிடித்த விஷயத்தை செய்யும் போது எப்போதுமே ஒரு தனி சந்தோஷம் தான்.

ப்படி எழுத ஆரம்பித்தேன் என்ற கேள்விக்கான பதிலுடனேயே, ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கான பதிலும் ஒரு வழியாக கிடைத்து விட்டது :-)

எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது!!!

அவ்வளவே தான்! வேற என்ன காரணம் வேண்டும்! :-)

BTW, என்னுடைய மலர்கள் நனைந்தன பனியாலே கதையையும் ad-hoc தொடர் ஆக மாற்ற சொல்லி இருக்கிறேன்.

ஒரு முக்கிய வேலையில் ஈடுப்பட்டிருப்பதால் concentrate செய்து எழுத முடியவில்லை. எனவே ரொம்ப சின்னதாக ஒரு ப்ரேக் எடுக்கலாம் என நினைக்கிறேன்.

என் பிரென்ட்ஸ் கிண்டல் செய்வது போல சிந்துபாத் கதை போல் அல்லாமல் MNPஐ சீக்கிரமே முடிக்க எனக்கும் ஆசை தான். ஆனால் உதய் – நந்திதா எனக்கு பிடித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு gala bye bye சொல்ல வேண்டும் என்று ஒரு ஆசை. சும்மா பேருக்கு முடிக்க மனம் வரவில்லை.

சோ ப்ளீஸ் அட்ஜஸ்ட் பிரென்ட்ஸ். இயன்ற அளவில் விரைவிலேயே எல்லா கதைகளுக்கும் update தருகிறேன்.

எழுதவில்லை என்றாலும் வாசகியாக & இந்த 'நானும் என் கதையும்' வழியாக என்னை Chillzeeயில் சந்தித்துக் கொண்டே தான் இருப்பீர்கள் :-) நோ escape ;-)

மீண்டும் சந்திப்போம் பிரென்ட்ஸ் :-)

 

Naanum en kathaiyum - 03

Naanum en kathaiyum - 05

{kunena_discuss:1105}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.