(Reading time: 5 - 10 minutes)

தொடர் - நானும்... என் கதையும்... - 05 - Binds இன் ஃபார்ம் :-) - பிந்து வினோத்

பிந்துவின் லேட்டஸ்ட் ஆராய்ச்சி!

 Naanum en kathaiyum

ன்னோட லேட்டஸ்ட் கலாட்டா, கண்ணுல படுற ஓவ்வொரு பொருள், ஞாபகம் வர ஒவ்வொரு ரிலேட்டிவ், பிரெண்ட்ன்னு எல்லாத்தையும் / எல்லோரையும் ஏதாவது கதைல ரெப்ரசன்ட் செய்திருக்கேனான்னு ஆராய்ச்சி செய்றது.

சொன்னா நம்ப மாட்டீங்க ஆல்மோஸ்ட் எனக்கு ரொம்ப பரிச்சயமான விஷயங்கள் எல்லாமே ஏதாவது ஒரு ஃபார்ம்ல என் கதைல வந்திருக்கு.

அப்படி கண்டுபிடிச்ச ஒரு விஷயம் ஒரு போட்டோ.

த்தனை பேர் என்னோட ‘நீ தானா’ கதை படிச்சிருக்கீங்கன்னு தெரியலை. அந்த கதையோட penultimate எபிசோட்ல ஒரு இடத்துல இருக்க ரத்த துளி வச்சு எந்த டைரக்ஷன்ல இருந்து அது வந்திருக்கும்னு கண்டுபிடிக்கிற சீன் ஒன்னு இருக்கு.

அதை காமிக்குற ஒரு போட்டோ அந்த எபிசோட்ல இருக்கு. அது என்னன்னு படிச்சவங்க யாரவது யோசிச்சிருக்கீங்களான்னு தெரியலை.

அந்த ஷேப் வைத்து டைரக்ஷன் கண்டுபிடிகுறது என்பது நான் படிச்சு தெரிஞ்சுக்கிட்ட ஒரு விஷயம். அதை டெக்ஸ்டா மட்டும் இல்லாமலா போட்டோல காட்டினால் இன்னும் நல்லா இருக்கும்னு தோணிச்சு.

அப்படி யோசிச்சுதான் எங்களோட (நானும், என் பொண்ணும்) எக்ஸ்பெரிமென்ட் தொடங்கியது.

(ஆமாம், குடும்பமே அப்படி தான் :p )

ஒரு ஜக் தண்ணியை வச்சுட்டு எங்க அபார்ட்மென்ட்ல இருக்க பாத்வேல (pathway) எல்லாம் தண்ணி தெளிச்சு, தெளிச்சு முயற்சி செய்தோம்.

எல்லோரும் ஒரு மாதிரியா பார்த்துட்டு போறதை எல்லாம் கண்டுக்காமல் ட்ரை செய்தோம்.

ஆனாலும் ஹு ஹும் ஒன்னும் வொர்க் அவுட் ஆகலை!

அந்த தண்ணி ட்ராப்ஸ் ஷேப்பும் சரியா இல்லை, சம்மர் என்பதால் தண்ணியும் சீக்கிரம் ட்ரை ஆகிட்டே இருந்தது

அன்னைக்கு ஈவ்னிங் பேமிலியோட McDonalds போயிருந்தோம். ஒரு கோக் வாங்கிட்டு சும்மா பேசிட்டு இருந்தப்போ கோக் கொஞ்சமா சிந்தியது!

voila!!!!

கோக் வச்சு அந்த போட்டோ எடுக்குற ஐடியா என் பொண்ணுக்கு தான் வந்தது ( ஹை-ஃபை கேர்ள்!)

Nee thanaaஐடியா வந்துச்சோ இல்லையோ, அந்த McDonalds டேபிள்ல இருந்த கோக் துளிகளை வேண்டிய மாதிரி மாத்தி க்ளிக்கிட்டோம்ல!

தை படிக்குற உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரியலை. ஆனால் எனக்கு ஒரு பெரிய சிரிப்பு வந்தது.

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் தான் எழுதுறதை ஃபன் ஆக வைக்குது. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமும் கூட!

பிந்துவும் பொறுமையும்!!!

Naanum en kathaiyum

ழுதுறது எனக்கு பிடிக்கும்ன்னு நான் சொல்ல, இந்த மாதிரி அறுவை கதைலாம் சொல்லனுமா என்ன, நான் ஒரே டைம்ல எத்தனை கதை எழுதுறேன்னு பார்த்தாலே தெரிஞ்சுக்கலாமே ;-) ஹி ஹி ஹி!!!!

நான் இப்போ ப்ரேக் எடுத்ததே மெயினா அதற்காகவும் தான். என் கிட்ட ஒரு பெரிய கெட்ட பழக்கம் இருக்கு. அது impatience! பொறுமை என்பது ரொம்ப குறைவு!

ஒரு கதை கரு க்ளிக் ஆச்சுன்னு வைங்க, எனக்கு உடனே அந்த கதையை ஸ்டார்ட் செய்தே ஆகனும். நம்மால தொடர்ந்து எழுத முடியுமா இல்லையான்னு எல்லாம் அப்புறமா தான் யோசிப்பேன்.

சில்சீ டீம்ல இன்னொரு கதையான்னு கேட்டால் அவ்வளவு தான்! க்ர்ர்ர்ன்னு கோபம் வரும்!

ஆனால் ஸ்டார்ட் செய்த பிறகு அதே டீம் கிட்ட blush செய்துட்டே சாரி, மெதுவா அப்டேட் செய்றேன்னு சொல்ல வேண்டி இருக்கும் :-) ஹி ஹி ஹி!!!!

இந்த ஆர்வக் கோளாறை கொஞ்சமா கட்டு படுத்த முயற்சி செய்றேன்.

அதனால தான் பர்ஸ்ட் எபிசொட்ல சொன்ன “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” கதையை கூட உடனே ஸ்டார்ட் செய்யாமல் இருக்கேன்.

பிந்துவின் சுய ஆராய்ச்சி!

Naanum en kathaiyum

ந்த பொறுமையின்மை பத்தி எப்படி கண்டுபிடிச்சேன்னு பார்த்தீங்கன்னா, பீட்பேக் கேட்டு வந்த ஏதோ ஒரு ஈமெயில் தான் இதை ட்ரிகர் செய்தது.

உலகத்துல பெர்பெக்ட்ன்னு ஒன்னுமில்லை & யாருமில்லை. சோ, அப்பப்போ பீட்பேக் எடுத்து எது சரியா இருக்கு, எது சரி செய்யனும்னு யோசிப்பது கட்டாய தேவை.

இதை நாம காலேஜ்ல கன்ட்ரோல் சிஸ்டம்ல தொடங்கி ப்ராசஸ் அது இதுன்னு எல்லா இடத்துலேயும் படிச்சிருப்போம் / பார்த்திருப்போம்.

ஆனால் இது அப்படி பெரிய விஷயங்களுக்கு மட்டும் தானா என்ன? நம்ம கிட்ட குறையே இல்லையா???

நாம எல்லோருமே சூப்பர் ஹீரோயின் / ஹீரோ தான்! அப்படி தான் யோசிக்கனும் கூட! ஆனால் ஆப்வியஸ்லி நம்ம கிட்டேயும் சின்னதா, பெரியதா ஏதாவது சரி செய்ய வேண்டிய விஷயம் இருக்கும்!

அப்படி என்னை நானே சுய ஆராய்ச்சி செய்து பீட்பேக் கொடுத்து, சரி செய்யலாம்னு நினைச்சிருக்க ஒன்னு தான் இந்த ‘பொறுமை’!

என்றாவது ஒரு நாள் இந்த பிந்து பொறுமையான மனிஷியாக மாறுவாள்ன்னு நம்பிக்கையோட காத்திருங்க!

இன்னுமொரு கதை!

Naanum en kathaiyum

ப்படியே, என் மனசில வந்திருக்க இன்னுமொரு கதை கருவை ஒன்லைனரா சொல்றேன், பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க!

ஒரு கொலை நடக்கிறது. அதை செய்ததா அந்த மனிதனுடைய மனைவி அண்ட் mistress மேல பழி விழுது... சாட்சி எல்லாமும் கூட இருக்கு... இந்த கொலையை இன்வெஸ்டிகேட் செய்வது அந்த மனைவியுடைய முன்னாள் காதலன்!

ன்னதுப்பா இது’ன்னு சொல்ற உங்க மைன்ட் வாயிஸ் எனக்கும் கேட்குது. ஹி ஹி ஹி !

எப்போவும் எதையும் மேலோட்டமா பார்த்து கெஸ் செய்யக் கூடாது!

இதை நான் கதையா எழுதும் போது படிச்சிட்டு சொல்லுங்க! உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்! எனக்கு நம்பிக்கை இருக்கு.

உங்களுக்குமே பிந்து தப்பா எதையும் சொல்ல மாட்டான்னு சின்னதாவாது நம்பிக்கை இருக்கனுமே ;-) ஹி ஹி ஹி!!!!

இதுவும் பேமிலி / ரொமான்ஸ் கதை தான். கொஞ்சமா சஸ்பென்ஸும் சேர்த்துக்கலாம்.

இந்த கதைக்கு நான் கண்டுபிடிச்சு வச்சிருக்கும் பாட்டு

ந்த பாட்டை வச்சும் அதிகமா கெஸ் செய்யாதீங்க :p ! நான் இந்த கதையை எழுதுற வரைக்கும் பொறுமையா காத்திருங்க!

(பின்ன, எனக்கும் மட்டுமா பொறுமை வளர்க்கும் ட்ரீட்மென்ட், உங்க எல்லோருக்கும் கூட தான் ;-) )

கிடைச்சிருக்க ஓரே ஒரு வாழ்க்கையை தேவை இல்லாமல் யோசிச்சு குழம்பி டல்லடிக்காமல், பிடிச்ச திசையில போய், பிடிச்சதை செய்து, Have fun!!!! என்ஜாய் மாடி!

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!!!

டாட்டா – பை – பை!!!!

 

Naanum en kathaiyum - 04

Naanum en kathaiyum - 06

{kunena_discuss:1105}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.