(Reading time: 4 - 7 minutes)

தொடர் - நானும்... என் கதையும்... - 06 - நட்பின் பின்னணி :-) - பிந்து வினோத்

Happy

வணக்கம்!

லோ பிரென்ட்ஸ்! இதை படிக்குற உங்க நிறைய பேருக்கு டேட் 12த் ஏப்ரல் ஆனால் எனக்கு இங்கே இன்னும் 11த் ஏப்ரல். 11த் ஏப்ரல் எனக்கு personally ரொம்ப ரொம்பவே ஸ்பெஷல் நாள்.

அதனால் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!

இப்படி ஹாப்பியா இருக்கும் போது எழுதுவது என்பது ஒரு தனி எக்ஸ்பீரியன்ஸ்.

ஓகே, என்னோட blabbering போதும், இந்த தொடருடைய content பார்ப்போம்.

மனம் விரும்புதே உன்னை ?!

ந்த வாரம் மனம் விரும்புதே உன்னை பற்றி பேசலாம்னு முடிவு செய்து வச்சிருக்கேன்.

இந்த கதை படித்து விட்டு நிறைய பேர் என்கிட்டே அவங்களுக்கு பிடிச்சதா சொன்ன ஒரு விஷயம் கீதா – வீணா – இந்து வுடைய ப்ரெண்ட்ஷிப்.

அடுத்ததா நிறைய பேர் கேட்ட ஒரு கேள்வி ‘ஏன் 3 பேரையும் ஒரே ஏஜ் க்ரூப்ல வைக்காமல் கீதாவை பெரியவங்களா காட்டினீங்க’ என்பது.

கீதாவை ஏன் பெரியவங்களா காட்டினேன்?

Happy

ஹானஸ்ட்லி என் கிட்ட பதில் இல்லை :-)

It just happenned ன்னு தான் சொல்ல முடியும்னு நினைக்கிறேன் :-)

கீதா – வீணா – இந்து நட்பு

Happy

ந்த கதைல கல்யாணத்திற்கு பின்பும் கீதா – வீணா – இந்து 3 பேருடைய நட்பு தொடர்வதாக வந்தது கதையை படித்த நிறைய பேருக்கு பிடித்திருந்ததா மென்ஷன் செய்திருந்தாங்க.

இந்த நட்புக்கு பின்னாடி நிஜ லைப் இன்ஸ்பிரேஷன் இருக்கு. சோ அதற்கான கிரெடிட் முழுக்க முழுக்க கடவுளுக்கே :-)

என்னோட அக்கா & அவங்க 2 ஸ்கூல் பிரென்ட்ஸ் தான் அந்த நட்பு பார்ட்டுக்கு இன்ஸ்பிரேஷன்.

என் அக்கா மட்டுமில்லாமல் அவளுடைய பிரென்ட்ஸ் இரண்டு அக்காவையும் கூட எனக்கும் சின்ன வயசு முதலே தெரியும்.

கிட்டத்தட்ட 20 வருஷமாகவே இவங்க 3 பேரும் MVUல வருவது போல அவ்வப்போது சந்திப்பாங்க.

ஒருத்தங்க சிங்கப்பூர்ல இருப்பதால அவங்க இந்தியா வரும் போதெல்லாம் ஒரு கெட் டு கெதர் உண்டு.

என் கல்யாணத்திற்கு முன்பு அவங்க இப்படி மீட் செய்யும் போது நிறைய தடவை என் அக்கா கூட நானும் போயிருக்கேன்.

இது தான் பிரென்ட்ஸ், கதைல அந்த கல்யாணத்திற்கு பின்பும் நட்பு தொடர்வதாக வருவதற்கான இன்ஸ்பிரேஷன்.

பட் அப்கோர்ஸ் அந்த நட்பு மட்டுமே இன்ஸ்பைர் செய்யப் பட்டது :-) கதை எல்லாம் என்னுடையது தான்!

இன்பாக்ட் கம்பன் ஏமாந்தான் கதைல லாவண்யா சிங்கப்பூர்ல இருப்பதாக சொன்னதும் இங்கே இந்த அக்கா சிங்கப்பூர்ல இருப்பதை வைத்து தான் ;-)

எப்படி எல்லாம் லிங்க் ஆகுது பார்த்தீங்களா!

இன்னுமொரு கதை:

Happy

ருங்காலத்தில் எழுத ப்ளான் செய்து வைத்திருக்கும் இன்னுமொரு கதைக்கான கரு இது பிரென்ட்ஸ்.

தன்னுடைய சுயநலத்தினால் ஹீரோயினை பிரிந்த வெளிநாட்டில் வசிக்கும் ஹீரோ, ஒரு சில வருஷம் கழிச்சு எப்படியோ பலப் எரிஞ்சு தன்னுடைய தவறை உணர்ந்து ஹீரோயினை தேடி இந்தியா வரார். ஆனால் அவருக்கு ஒரு ஷாக்! ஹீரோயின் இப்போ உயிரோடு இல்லை!

அப்புறம் என்ன ஆச்சு என்பது தான் கதை :-)

இதுவும் ரொமான்ஸ் / பேமிலி வகை கதை தான்.

ஹீரோ, ஹீரோயினை டாக்டர்ஸ் ஆக்கலாம்னு நினைக்கிறேன்.

இந்த ஹீரோ நம்ம கனவுகள் மட்டும் எனதே எனது ஹீரோ எஸ்.கே போல ஆரம்பத்தில் சுயநலம் & self centered ஆக இருப்பார்னு நினைக்கிறேன்.

கதையை ஆக்ச்சுவலி எழுத ஆரம்பித்து அவுட்லைன் செய்யும் போது இன்னும்  detailed ஆக ஸ்கெட்ச் செய்யனும்.

எப்போ எழுத ஆரம்பிப்பேன்னு தெரியலை, ஆனால் எழுதும் போது கதை எப்படி வருதுன்னு பார்ப்போம்.

ந்த "நானும்... என் கதையும்..." தொடர் எனக்கு நிறைய விதத்தில் பிடிச்சிருக்கு. முக்கியமா இப்படி யோசித்து வைத்திருக்கும் கதையை மண்டைக்குள்ளே வச்சிருக்காமல் சொல்ல முடியுதே :-) அது ரொம்பவே பிடிச்சிருக்கு.

இதை சொல்லும் போதே, இன்னுமொரு விஷயம் நினைவுக்கு வருது. ஒரு பிரெண்ட் கேட்டாங்க, ஷார்ட்டா என்றாலும் இப்படி நீங்க கதையை சொன்னால் யாராவது காபி அடிச்சிற மாட்டாங்களான்னு :-)

அதற்கு நான் என்ன பதில் சொன்னேன்னு அடுத்த வாரம் சொல்றேன்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

புதிய வருடம் உங்களை போலவே இனிப்பானதாக அமைய வாழ்த்துக்கள் :-)

 

Naanum en kathaiyum - 05

Naanum en kathaiyum - 07

{kunena_discuss:1105}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.