(Reading time: 6 - 12 minutes)

தொடர் - நானும்... என் கதையும்... - 07 - ஸ்மைலியுடன் சொல்லப் படும் சோக கதை :-) - பிந்து வினோத்

Happy

ன்னைக்கு கதைன்னு இல்லாமல் அது தொடர்பான சின்ன சின்ன விஷயங்கள் பற்றி பார்ப்போமா??

நான் ஒன்றிரண்டு எபிசொட்ஸ்க்கு முன்பு சொன்னது போல எனக்கு பொறுமை ரொம்ப ரொம்ப குறைவு.

ஆனால் உண்மையாக சொல்ல போனால் இதுக்கு chillzeeயும் ஒரு காரணம் :p

chillzee நிறைய விதங்களில் உண்மை உலகை நமக்கு காட்டாத fantasy உலகம்.

என்ன சொல்ல வரேன்னு யோசிக்குறீங்களா, சொல்றேன்... பொறுமை பொறுமை!! :-)

தை நீங்கள் படிக்குறீங்க என்றால் உங்களுக்கு நான் எழுதுவேன்னு தெரியும்னு நினைக்கிறேன்.

நான் எழுதிய கதைகள் or கட்டுரைகள் என்று பார்த்தால் அதை நீங்க மூன்றே இடத்தில் தான் பார்த்திருக்க முடியும்.

ஒன்று obvious, chillzee சைட், இரண்டாவது இன்னுமொரு வெப்சைட், மூன்றாவது என்னுடைய கதைகளின் புக் வெர்ஷன்.

மேலே நான் சொன்ன இரண்டு சைட்டுகளிலும் நான் எழுதியது, எழுதுவது & எழுத போவது என் பிரென்ட்ஸ்க்காக :-)

ன்னுடைய "எனக்கு பிடித்த பாடல்" chillzeeயில் முதல் முதல் சிறுகதையாக இருந்தாலும் அதன் பின்னே நிராகரிக்கப் பட்ட ஒரு சோக கதை இருக்கிறது :-)

சோகம்ன்னு சொல்லிட்டு என்ன ஸ்மைலின்னு யோசிக்காதீங்க, நானே சொல்றேன் :-)

உங்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்கலாம் ஆரம்ப நாட்களில் chillzeeயில் இத்தனை பகுதி எல்லாம் இல்லை. Infact சிறுகதை பகுதின்னு ஒன்னு இல்லவே இல்லை.

அந்த டைம்ல தொடர்கதை இங்கே எழுதினேன் என்றால், சிறுகதைகளை அந்த இன்னுமொரு சைட்ல எழுதினேன்.

அந்த சைட்ல எனக்கு ஒரு க்ளோஸ் பிரெண்ட் இருந்தாங்க. நான் அங்கே எழுதியது முழுக்க முழுக்க அவங்களுக்காக தான்.

அவங்க அங்கே ஆக்டிவ் யூசர் என்ற ஒரே காரணத்திற்காக அங்கே எழுதினேன்.

அந்த நாட்களை நான் இப்பொழுதும் cherish’உம் செய்றேன் :--) சரி அந்த பிரெண்ட்ஷிப் கதையை அப்புறம் ஒரு நாள் பேசுவோம்.

ல்லாம் நல்ல விதமாக போய் கொண்டிருந்த போது திடீர்னு எனக்கு ஒரு ஆசை :-)

என்னன்னா ஒரு தமிழ் மேகசின்ல நம்ம கதை வந்தா எப்படி இருக்கும்னு ஒரு ஆசை வந்தது.

தோணிச்சோ இல்லையோ, அடுத்த செகண்ட் ஒரு கதை எழுதி ரெடி செய்துட்டு ஒரு பிரபல தமிழ் மேகசின் சைட்டுக்கு போய் அங்கே இருந்த ஈமெயில் ஐடி எடுத்து அந்த கதையை அனுப்பி வைத்தேன்.

அனுப்பினால் என்ன ஆச்சுன்னு நினைக்குறீங்க? நம்ம டீம் அனுப்புற notification ஈமெயில் எல்லாம் வரலை. Infact ஒரு பதிலும் வரலை.

ஒன்றிரண்டு வாரம் வெயிட் செய்துட்டு அப்போ ரொம்ப ஆக்டிவாக இருந்த அந்த மேகசினின் பேஸ்புக் பக்கத்தில பிங் செய்து கேட்டேன்.

அவங்க, ‘ஈமெயில் எல்லாம் அனுப்ப கூடாதுங்க, அதுக்கு எல்லாம் ரிப்ளை வராது, நீங்க போஸ்ட்ல அனுப்பி வைங்க’ன்னு சொன்னாங்க.

ஆசை யாரை விட்டது, நானும் போஸ்ட்ல கதையை அனுப்பிட்டு காத்திருந்தேன் :-)

எவ்வளவு நாள்ன்னு நினைக்குறீங்க?? நாள் இல்லை மாதங்கள்...

இந்த கிணத்துல போட்ட கல்லுன்னு சொல்வாங்களே அப்படி தான் :-) ஒரு அப்டேட்டும் இல்லை!

ரொம்ப frustrating ஆக இருந்தது. பப்ளிஷ் செய்யலைன்னு அவங்க சொல்லி இருந்தா கூட ரொம்ப பீல் செய்திருக்க மாட்டேன். இந்த மாதிரி செய்தது ரொம்ப ஒரு மாதிரி இருந்தது.

இதே நிலமையில என் பர்த்டே பக்கத்தில வந்துட்டே இருந்தது.

அப்போ என் பிரென்ட் தேன்மொழி & நந்தினி கிட்ட பேசிட்டு இருந்தப்போ, இந்த சோக கதையை சொன்னேனா, ‘கொடுங்க அந்த கதையை’ன்னு வாங்கி உடனே chillzeeல பப்ளிஷ் செய்தாங்க.

அதுக்கு முன்பே chillzee எனக்கு ஸ்பெஷல் தான் ஆனால் அன்று முதல் சூப்பர் ஸ்பெஷல் :-)

உங்களில் எத்தனை பேர் இதை experience செய்திருப்பீங்கன்னு தெரியலை ஆனால் ஸ்பெஷல் ரெக்வெஸ்ட்டுன்னு சொல்லி நம்ம டீம் கிட்ட கேட்டு பாருங்க எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து நீங்க கேட்பதை செய்துக் கொடுப்பாங்க.

ஆனால் மேலே சொன்ன அந்த மேகசின் கதை தான் ப்ராக்டிகல் உலகம்.

ப்போ உங்களுக்கே புரிந்திருக்கலாம் ஏன் நான் முதலில் chillzeeயை fantasy உலகம்னு சொன்னேன்னு.

மேலே மாதக் கணக்கில் பொறுமையாக காத்திருந்த நானே தான், இங்கே பொறுமையே இல்லைன்னு எழுதுவதும் :-)

இங்கே நாம மெயில் அனுப்பி notification வரலைன்னா, என்ன என்னன்னு கேட்கலாம், இந்த பேரை ஏன் இப்படி போட்டீங்க, அந்த ஆர்டர்ல ஏன் போட்டீங்கன்னு கேட்கலாம் :-) ஏதோ ஒரு விதத்தில் அதை கேட்க நமக்கு உரிமையும் இருக்கு (இருக்கிறதா நாம நினைச்சுக்குறோம் :p )

இது ஒரு நல்ல விஷயம் :-)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.