(Reading time: 3 - 6 minutes)

தொடர் - நானும்... என் கதையும்... - 08 - மலரே ஒரு வார்த்தை பேசு - பிந்து வினோத்

movpip

ன்று நாம பேச போகும் கதை, ‘மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று

Chillzeeயை எனக்கு அறிமுகப் படுத்தினவங்க ஒரு பிரென்ட்! அவங்க பெயர் வள்ளி.

அவங்க பெயரை ஒரு ஹீரோயின்க்கு வைத்து ஒரு கதை எழுதனும் எனும் ஆர்வத்துல ஆரமபித்தது தான் இந்த கதை. RR எனும் புனைப் பெயர் எனக்கு கண்டு பிடிச்சு கொடுத்தவங்க அவங்க தான். அதான் இந்த கதை அந்த பெயரில் தொடர்கதையா வருது.

ந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் சொன்னது போல RR கதைகள் பொதுவா கணவன் – மனைவி நடுவே இருக்க காதலை & குடும்பத்தினுள்ளே இருக்கும் நட்பை எடுத்துக் காட்டும் கதைகள்.

இந்த கதையும் அதே தான்!

நம்பிக்கை & அன்பு இருந்தால் எந்த கஷ்டத்தையும் தாண்டலாம் என்பது தான் இந்த கதையின் ஒன் லைனர்!

பொதுவா கதாபாத்திரங்களுக்கு பெயர் வைக்க ரொம்ப யோசிக்க மாட்டேன் நான். என் பிரென்ட்ஸ், பேமிலி சர்க்கிள்ல இருந்து ஏதாவது பேரை செலக்ட் செய்துப்பேன்.

இன்பாகட் என்னோட டீம்ல இருந்தவங்க பெயரை கூட யூஸ் செய்திருக்கேன் :p.

ஆனால் இந்த கதைக்கு தான் முதல் முறை ஹீரோ பெயரை இன்டர்நெட்டில் தேடி செலக்ட் செய்தேன் :-)

விஷாகன் என்பது முருகரோட இன்னொரு பெயர் என்பது அதுக்கு முன் வரை எனக்கு தெரியவே தெரியாது.

நமக்கு தெரிந்தது கை மண் அளவு என்பதை நான் தெரிந்துக் கொண்ட இன்னொரு இன்ஸ்டன்ஸ் அது :-)

ந்த கதை சீக்கிரமே reboot ஆக போகுது. பிரிந்து இருக்க ஹீரோ ஹீரோயின் என்ன ஆவாங்க என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டாம் ;-)

ஆனால் அது எப்படி நடக்குதுன்னு படித்து தெரிஞ்சுக்கோங்க.

Family - Romance genre பிரியர்களுக்கு கட்டாயம் இந்த கதை பிடிக்கும். இதுவரை படிக்கலைனாலும், இனிமேல் படிங்க :-)

 

புதுக் கதை!

ந்த வீக் நான் சொல்ல போகும் புது கதையின் கரு, ரொம்ப வருடமா என் மனசில இருப்பது.

புயலுக்கு பின்’க்கு முன்பே மனசில வந்த ஒரு கதை இது.

ஹீரோ சார் ஒருத்தங்களை லவ் செய்றார். ஆனால் அவங்களுக்கு ஹீரோ மேல இன்ட்ரஸ்ட் இல்லை, வேற ஒருத்தரை விரும்புறாங்க.

நம்ம ஹார்ட் ப்ரோக்கன் ஹீரோ பேமிலி ப்ரெஷர்னால வேற ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்குறார்.

அப்புறம் என்ன, ஆஸ் யூஷுவல் ஹீரோ மனம் மாறுவார்ன்னு நினைச்சீங்கன்னா, அங்கே தான் செக் பாயின்ட்!

ஹீரோ மனம் மாற மாட்டார், முதலில் இவரை வேண்டாம்னு சொன்னவங்க இப்போ மனம் மாறிட்டாங்க :-)

என்ன ஒரு ட்ரெண்டியான கதை ;-) :D

ரி சரி திட்டாதீங்க! கதையை எழுதும் போது படிச்சுட்டு சொல்லுங்க :-)

ஆனால் இந்த கதையை எப்போ எழுதுவேன்னு தெரியலை.

உண்மையா சொல்ல போனால் அது என்னவோ இந்த கதையை எழுத மனசு வர மாட்டேங்குது :D

மத்தபடி ஏழு வருஷத்துக்கும் மேல யோசிச்ச கதையை எழுதாம இருக்க ஆளா நான் :-)

சென்ற வாரம் இந்த வீக் பேசலாம்னு சொன்ன விஷயத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக கொஞ்ச நாள் தள்ளி போட்டிருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் அதை பற்றி பேசுவோம் :-)

ம்மர் ஸ்டார்ட் ஆகி விட்டது!

எல்லோரும் முடிந்த அளவு வெயில்ல போகாமல் இருங்க. நிறைய தண்ணீர், மோர், இளநீர் போன்றவை குடியுங்க.

டேக் கேர்.

டுத்த வாரம் மலர்கள் நனைந்தன பனியாலே கதை பற்றி பேசுவோம் :-) அந்த கதைக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன மாதிரியான லிங்க் இருக்குன்னு பேசுவோம் ;-)

இப்போதைக்கு டாட்டா பை பை!

 

Naanum en kathaiyum - 07

Naanum en kathaiyum - 09

{kunena_discuss:1105}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.