(Reading time: 9 - 18 minutes)

தொடர் - நானும்... என் கதையும்... - 09 - பிந்து வினோத்

My Stories

27 ஜூலை!

ழு வருடங்களுக்கு முன்... இதே நாளில் தான் நான் என் முதல் முதல் அத்தியாயத்தை எழுதினேன்.

அதாவது நான் கதை எழுத தொடங்கி ஏழு வருடங்கள் நிறைவுபெற்றுவிட்டன!

 

இதுவரை எப்போது எழுத தொடங்கினேன் என்று தேதியை நான் பார்த்ததே இல்லை.

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் ஏனோ புயலுக்கு பின் அத்தியாயம் 1ஐ எழுதிய தேதியை பார்க்க தோன்றியது!

அந்த 2010 நாளை பற்றி எனக்கு பெரிய நினைவுகள் இல்லை!

இன்ஃபோசிஸ் சோழிங்கநல்லூர் ஆபிசில் இருந்து எழுதினேன் என்பது மட்டுமே இப்போது நினைவில் இருக்கும் செய்தி!

 

ந்த ஏழு ஆண்டுகளை திரும்பி பார்க்கிறேன்!

கிட்டத்தட்ட நாற்பது சிறுகதைகள் எழுதி இருக்கிறேன்!

பதினோரு நாவல்கள், நான்கு குறுநாவல்கள் எழுதி முடித்திருக்கிறேன்.

அதில் 8 நாவல்களும், 1 குறுநாவலும் புத்தகமாக வெளியாகி இருக்கின்றன!

ஆறு நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்!

கதைகள் தாண்டி சில கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன்!

 

Not bad என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஆனாலும் மனதினுள் சின்ன நெருடல்!

எழுதுவதை ஓவர்-டூ செய்கிறேனா என்பது தான் அது!

career ஸ்ட்ரெஸில் இருந்து விடுப்பட உதவும் ஒரு கருவியாக தான் முதலில் எழுதுவதை வைத்திருந்தேன்.

 

மனம் விரும்புதே உன்னை எழுத தொடங்கிய லேட் 2011 / 2012 முதல் காதல் நதியென வந்தாய், வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா, உன் ஆசை முகம் தேடி கதைகள் நிறைவுப் பெற்ற மிட் 2015 வரை என்னுடைய பீக் பீரியட் என்று தோன்றுகிறது!

 

அதன் பின் அது என்னவோ ஒரு அலுப்பு or டையர்ட்னஸ் வந்து விட்டதை போல ஒரு பீல்!

 

இதை பற்றி ஒரு பிரெண்டிடம் கேட்ட போது அவங்க சொன்னாங்க,

“ஒரு விஷயத்தை பிடிச்சு செய்தா அலுப்பு வராது டையர்ட்னஸும் வராது! பிடிக்காத விஷயத்தை எப்படி ஜிகினா போட்டு அலங்கரிச்சு செய்தாலும் சரியா இருக்காது! எழுதுறது உனக்கு பிடிச்சிருக்கான்னு யோசி! பிடிச்சிருந்தா செய், பிடிக்கலைனா ப்ரீயா விடு!”

 

என்னை பொறுத்த வரை இது நச்சென்ற பதில்!

யோசிக்க வைத்த பதிலும் கூட!

 

தற்காக எழுதுகிறேன்?

பிந்து வினோத் பெரிய ரைட்டர் எனும் பேர் வாங்குவதற்காகவா???

எழுதுவதன் கூட வரும் புகழுக்காகவா???

 

இப்படி எழுதினால் தான் படிப்பார்கள், ‘ரீச்’ ஆக வேண்டும் என்று எழுத வேண்டுமா அல்லது இது தான் எனக்கு பிடித்தது இதை தான் எழுதுவேன் என்று எழுத வேண்டுமா?

 

கடந்த சில நாட்களாகவே நிறைய நிறைய கேள்விகள்... சிந்தனைகள்... சுய மதீப்பிடுகள்... ஆய்வுகள் etc etc....

 

ஆனால் ஒன்று எனக்கு புரிந்தது!

ஒரு எழுத்தாளராக எனக்கு maturity வந்து இருக்கிறது!

என் மேல் எனக்கே நம்பிக்கை வந்திருக்கிறது!

 

அப்பப்போ entertainingஅ கதை எழுதும் உன்னால இப்படி blade கூட போட முடியுமான்னு நீங்க கேட்குறது எனக்கும் கேட்குது!

எனவே டாப்பிக்கை மாற்றுவோம்! smile

 

ந்த ஏழு வருடங்களில் எனக்கு பக்கபலமாக இருந்து உதவியவர்கள் பலர் இருக்கிறார்கள்!

அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

 

கதையை வாசித்த, ஏதாவது ஒரு விதத்தில் feedback கொடுத்த அனைவருமே எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.