(Reading time: 9 - 18 minutes)

ஆனால் சிலர் ரொம்ப ஸ்பெஷல்!

சென்ற ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் அவரை வெளியான என் அத்தியாயங்களில் என் நன்றியை சின்ன குறிப்பாக சொல்லி இருந்தேன்.

2011 தொடங்கி இன்று வரை என்னுடனே இருக்கும் என் அன்பு தோழிகள் தேன்ஸ், வள்ளி

எனக்கு முதல் முதல் கமன்ட் பதிவு செய்த ஷோபா,

என்னுடைய சின்ன உலகை தாண்டி எழுதுவதன் வாயிலாக எனக்கு கிடைத்த அன்பு சகோதரி பொன்ஸ்!

என் கதைகளை புத்தகமாக வெளியிட்ட திரு. வெங்கடாசலம் அவர்கள்

கருத்துக்கள் வழியாக என்னை ரொம்பவே ஸ்பெஷலாக உணர வைத்த மகி எனும் Mages Sithrai!

நாம் எழுதுவது வாசிப்பவர்களை எந்த அளவுக்கு ரீச் ஆகிறது என்பதை உணர வைத்த சித்ரா வெங்கடேஷ்

எல்லை இல்லாமல் கரைகள் தாண்டியும் என் கதைகள் சென்று சேர்ந்திருப்பதை எனக்கு சொல்லாமல் சொன்ன சித்ரா!

பல பல வருடங்களாக தொடர்ந்து கருத்து பகிர்ந்து பெரிய அளவில் எனக்கு ஊக்கமளித்த / அளித்துக் கொண்டிருக்கும் ஜான்சி, கீர்த்தனா, சித்ரா V!

கதை பற்றிய விமர்சனம் / கருத்து எழுதி என் மனதில் இடம் பிடித்த லாவண்யா N, அம்ரிதா S, ரமா K

 

ந்த பட்டியலில் விட்டு போன ஆனால் chillzee வாசகர்களுக்கு பரிச்சயமான இன்னும் கொஞ்சம் பேரை பற்றி மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

 

சாந்தி!

சாந்தி மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று அடுத்தவர் point of view யோசிப்பது. சண்டை, விவாதம்னு வரும் போது, அப்படியே ரியாக்ட் செய்யாமல், ஏன் அவங்க கோபப்படுறாங்கன்னு அவங்க point of viewல யோசித்து பார்க்க சொல்வாங்க.

இது பர்சனல் வாழ்க்கையில் எனக்கு மிகவும் உதவின ஒரு டிப். நம்ம மேல தப்பே இல்லாமல் கோபப்படுறாங்களேன்னு நானும் கோபப்படாமல், ஏன் இந்த கோபம்ன்னு யோசித்து பார்த்து conflict avoid செய்த situations நிறைய இருக்கு.

என் கதைகளில் சின்ன அளவில் கூட பெண்களை கீழே இறக்கி காட்டி விடக் கூடாதுன்னு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனத்துடன் இருப்பேன்!

இந்த என்னுடைய பழக்கத்திற்கு காரணகர்த்தா இவங்க தான்.

Iceberg மாதிரி soft ஆனால் strong!

ரமணிச்சந்திரன் ரசிகை என்பதற்காக அப்படி அதே மாதிரி எழுதனும்னு இல்லை, நீ நீயா இரு! என நச்சுன்னு மண்டையில ஒன்னு போட்டவங்க!

ஓவர் சென்சிடிவ் ஆக இருந்த பிந்துவை மாற்றிய பெருமை முழுக்க இவங்களுக்கே!

வாழ்க்கையை ரசித்து வாழ & எழுத சொல்லிக் கொடுத்தவங்க!

இங்கே, ஆரம்பத்தில் நான் சொன்ன ‘பதிலை’ எனக்கு சொன்னவங்களும் இவங்களே!

இந்த தொடரின் ஆரம்பத்தில் நான் சொனனது போல கனவுகள் மட்டும் எனதே எனது ஸ்டைலில் Shans வைத்தும் ஒரு கதை எழுதனும்னு  ரொம்ப நாள் ஆசை. இந்த வருஷமாவது என் ஆசை நிறைவேறுமான்னு பார்ப்போம் 

 

நந்தினி

ன்று இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு 99% காரணம் Nands தான். நல்லதை எடுத்து சொல்வதில் மட்டும் அல்லாமல் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அவங்களுக்கு நிகர் அவங்களே தான்.

என்னுடைய கதைகளில் சின்ன தவறுகள், பெரிய தவறுகள்ன்னு அவங்க சுட்டிக் காட்டி இருக்கும் லிஸ்ட் போட்டால் நமக்கு பக்கங்கள் போதாது

நான் ஒரே genreல் எழுதாமல் பல வகையான கதை எழுதவும் இவங்க தான் காரணம்னு சொல்லலாம். பாசம் + நட்பு & கண்டிப்பு நிறைந்த ஒரு உறவு.

ஒரு 'ரொம்ப' நல்ல மனைவி & அம்மா. இவங்களை மாதிரி இருக்கனும்னு அப்பப்போ நான் நினைக்கும் ஒரு பர்சன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.