(Reading time: 9 - 18 minutes)

மது!

வங்களுக்கு நான் மிக பெரிய சாரி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!

என்னுடைய மெமரி சரி என்றால் விளக்கேற்றி வைக்கிறேன் எழுதி முடித்த பின்பு chillzeeயில் கமன்ட் பகுதியை கலக்கிய ஒருவர் இவங்க.

சின்ன சின்ன விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளும் நான் இன்று, அப்படியா, அவ்வளவு தானா, சரி, போகட்டும் என கேஷுவலாக விஷயங்களை எடுத்துக் கொள்ள முதல் பிள்ளையார் சுழி போட்டவங்க இவங்க!

சில விஷயங்களை ஜாலியாகவும் எடுத்து பழகிக்கோங்க பிந்து என்று அவங்க சொன்ன அந்த கருத்து எழுதுவது என்ற அளவில் மட்டுமல்லாமல் பர்சனல் வாழ்க்கையிலும் எனக்கு ரொம்பவே உதவி இருக்கிறது என்று சொல்லனும்!

முதல் கதையை முடித்து அடுத்து 2 கதை ஸ்டார்ட் செய்துட்டாங்க!

நான் இன்னும் அவங்க முதல் கதையையே முழுவதுமாக வாசித்து முடிக்கலை. [ அதுக்கு தான் மேலே சொன்ன சாரி ]

மூன்றாவது கதையில் அவங்க கொடுத்திருக்கும் மழை சீன் ரொம்ப ரொம்ப பிரபலம்!

இதுவரை படிக்காதவங்க மறக்காமல் போய் படிங்க!

 

சுஜாதா!

நான் மிஸ் செய்யும் கமன்ட் ராணிகளில் முதல் இடத்தை பிடித்திருப்பவங்க!

இவங்களோட அந்த எனர்ஜி நிறைந்த கமன்ட்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு விஷயம்!

 

தேவி

தைகளுக்கு straight forward ஆக இவங்க கொடுக்கும் கமன்ட்ஸ் ரொம்ப பிடித்த ஒரு விஷயம்!

இது பிடிச்சிருக்கு, இது பிடிக்கலை, இது நல்லா இருக்கு, இது நல்லா இல்லை! அப்படின்னு நேரா சொல்லிடும் ஒருத்தங்க!

நான் எழுதுவது சரியாக ரீச் ஆகிறதா, சரியா சொல்லி இருக்கேனா என்பதை இவங்க கமண்டை பார்த்து தெரிந்துக் கொள்வேன்.

 

ஆதர்வ்

மீப காலங்களில் கமன்ட் பகுதியை கலக்கி கொண்டிருக்கும் ஒருத்தங்க!

ஒவ்வொரு அத்தியாத்தையும் இவங்க அனலைஸ் செய்து பதிவிடும் கமன்ட் அழகோ அழகு!

 

ன்னும் நிறைய பேரை சொல்லலாம் ஆனால் பொதுவாக வாசகர்களுக்கு தெரிந்தவர்களை மட்டும் இங்கே சொல்லி இருக்கேன் !

 

என் கதைகள்

நான் எழுதியவை என்ற விதத்தில் எல்லா கதைகளும் எனக்கு பிடித்தவை தான்!

ஆனால் ஒரு வாசகியாக பார்த்தால் என் கதைகளில் எனக்கு ரொம்ப பிடித்த கதைகள் இவை:

 

நாவல் / குறுநாவல்

கம்பன் ஏமாந்தான்

காதல் நதியென வந்தாய்

உன் ஆசை முகம் தேடி

ரோஜாவை தாலாட்டும் தென்றல் & அ-ஆ-இ-ஈ [ Tie ]

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா

 

சிறுகதை

மோனா லிசா புன்னகை

வா வா என் தேவதையே

நீ பாதி... நான் பாதி...!

இது தான் காதலா?

டும் டும் டும்

என்ன கல்யாணமடி கல்யாணம்

தேவதையைக் கண்டேன்

எனக்கு பிடித்த பாடல்

பூ ஒன்றுக் கண்டேன்

காதல் கதை

கண்ணிலே என்ன உண்டு

 

ங்கே மோனா லிசா புன்னகை பற்றி சொல்லியே ஆக வேண்டும்!

அந்த கதையை எழுதி முடித்த பின், இது கற்பனை கதைன்னு ஒரு disclaimer சேர்க்கலாமா, வேண்டாமா என மனதுக்குள் சின்ன பட்டிமன்றம்!

கடைசியில் வேண்டாம் என முடிவு செய்து அப்படியே பப்லிஷ் செய்ய சொன்னேன்!

அங்கே கதையில் கணவன் கதாபாத்திரம் சொல்லும் கருத்துக்கள் என் காதில் நான் கேட்டவை தான்!!!

ஆனால் என்ன அதை நிஜ வாழ்வில் சொன்னது என் கணவர் அல்ல laughing

 

அந்த கதையில் எழுதுவது பற்றி சொல்லப்படும் கருத்தில், கேள்வியில் ப்ராக்டிகல் உண்மை இருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது!

ஆனால் பிடித்ததாக ஒன்றை செய்யும் போது மற்ற சில விஷயங்கள் பின்னுக்கு போய் விடுகின்றன என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.