(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.

எனக்கு பிடித்த பாடல்! – பிந்து வினோத்

   

னக்கு இந்த கல்யாணம் வேண்டாம், எனக்கு பிடிக்கலை...” எத்தனையாவது முறையாக சொல்கிறேன் என்று எனக்கு எண்ணிக்கையே மறந்துப் போயிருந்தது.

   

“இங்கே பார் பவி, நீ சரின்னு சொன்ன பிறகு தானே இந்த கல்யாணத்திற்கு அப்பா ஒத்துக்கிட்டார். இப்போ என்ன புதுசா?”

   

அம்மாவின் பேச்சில் இப்போது கோபம் எட்டி பார்த்திருந்தது.

   

“அப்போ சரின்னு தோணிச்சு இப்போ, சரியா வரும்னு தோணலை.”

   

அம்மா எதுவும் சொல்லாமல் முறைத்து பார்த்து விட்டு, என்ன நினைத்தாரோ, என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, கோபம் இல்லாமல் அமைதியாக பேசினார்கள்.

   

“என்ன விஷயம்? என்ன ஆச்சு? இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம், இப்போ இப்படி சொன்னால் எப்படி?”

   

“ப்ச்...”

   

“இதோ பாரு பவி, நீ சொன்னால் தானே எனக்கு புரியும், நான் அப்பாவிடம் சும்மா உனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா? இரண்டு பேரும் நல்லா தானே பேசிட்டு இருந்தீங்க? ஏதாவது சண்டையா?”

   

இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. சொன்னால் அம்மாவிற்கு புரியுமா என்றும் தெரியவில்லை. 

   

எனக்கும் விஜய்க்கும் பெரியவர்கள் பார்த்து எங்கள் விருப்பத்தை தெரிந்துக் கொண்டு நிச்சயித்த திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருந்தது. எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகி இருந்தது. படிப்பு, குடும்பம் என அனைத்து 

2 comments

  • உங்கள் எழுத்துகளில் ஏதோ ஒரு தனித்தும் இருக்கிறது என நினைக்கிறேன். படிப்பவர்கள் மனதை இலகுவாக்குகிறது.வாழ்த்துகள் பிந்து வினோத்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.