(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.

   

“இப்போ சொல்லு, நான் அப்பா கிட்ட பேசனுமா?”

   

வேண்டாம் என்று நான் தலை அசைக்க, அம்மாவின் முகம் மலர்ந்தது.

   

“வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் எதுன்னு புரிஞ்சு நடந்துக்கனும்... சில சமயம் நாம் விட்டுக் கொடுத்தும் கூட வெற்றி பெறலாம்...” ஏதோ அர்ஜுனனுக்கு கீதை சொன்ன கண்ணன் போல் அம்மா எனக்கு சொல்லி விட்டு, கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு என் அறையை விட்டு வெளியே போனார்கள்.

   

விஜயை நினைத்து பெருமையாக இருந்தது. இவ்வளவு நாள் மனதில் இருந்த பாரம் அகன்றிருந்தது. ஆனாலும் அவருடன் பேச எதுவோ என்னை தடுத்தது. அவர் தானே திருமணத்தை நிறுத்துவது பற்றி பேசினார்... அதன் பிறகு என்னிடம் எதுவுமே கேட்கவே இல்லை... அவரே பேசட்டும்... ஒரு அரை மணி நேரத்தை எப்படியோ தள்ளிய பின், அம்மா சொல்லி விட்டு சென்ற கடைசி வாக்கியத்தை நினைத்து பார்த்தேன். மனதை மாற்றிக் கொண்டு, சற்றே தயக்கத்துடன், என் செல் போனை எடுத்து, விஜயின் எண்ணை அழுத்தினேன், உடனேயே எடுக்க பட்டு, விஜய் பேசினார்.

   

“பவி...”

   

“ம்ம்ம்...”

   

“சாரிடா... அன்னைக்கு கோபத்தில் ஏதோ பேசிட்டேன், அதற்கு மேல் உன்னோட பேசவே எனக்கு தயக்கமா இருந்தது... சாரிடா...”

   

அவர் தயக்கத்துடன் சொல்லவும், என் தயக்கம், குழப்பம் எல்லாம் காணமல் போனது.

   

நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது, இதோ சென்ற வாரத்துடன், எங்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. என் பைத்தியக்காரத்தனத்தினால் எப்பேர் பட்ட சொக்க தங்கத்தை இழந்திருப்பேன் என்று நான் எண்ணாத நாளே இல்லை. காரை ஒட்டிக் 

2 comments

  • உங்கள் எழுத்துகளில் ஏதோ ஒரு தனித்தும் இருக்கிறது என நினைக்கிறேன். படிப்பவர்கள் மனதை இலகுவாக்குகிறது.வாழ்த்துகள் பிந்து வினோத்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.