Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 4.65 (69 Votes)
தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதை - 4.7 out of 5 based on 69 votes
Pin It

தோழியா! என் காதலியா! 

 Thozhiyaa en kaathaliyaa

ன் இப்படி என் உயிரை எடுக்குற? செத்து போயிடு! என்னால உன் இம்சையை தாங்க முடியலை!”

அதுவரை குனிந்திருந்த பாரதி முகத்தை நிமிர்த்தி பார்த்தாள். கண்கள் கலங்கி இருந்தது... அது விக்ரமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவசரமாக மனைவி வைத்திருந்த மதிய உணவை எடுத்துக் கொண்டவன், கொஞ்சம் திகைப்பும் அதிர்ச்சியுமாக நின்றிருந்த குழந்தைகளையும், அவனுடைய அம்மாவையும் கண்டுக்கொள்ளாது நடந்து, காரை கிளப்பி கிளம்பினான்.

அன்று நடக்க வேண்டிய முக்கிய வேலை பற்றி எண்ணியபடியே அவன் மாடியில் இருந்து இறங்கி வந்தால், பள்ளிக்கு செல்ல தயாராகி நின்றிருந்த இரண்டு குழந்தைகளும் ஒரு பக்கம் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, அவன் மனைவி பாரதியும், அம்மா கல்பனாவும் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். எதை பற்றிய விவாதம் என்று அவனுக்கு தெரியாது, யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்றும் அவனுக்கு தெரியாது ஆனால் அவனின் எண்ண ஓட்டம் தடை படவும் எப்போதும் போல் மனைவியிடம் எரிந்து விழுந்தான்.

அலுவலகத்தை அடைந்தவனுக்கு வேலையை தவிர வேறு எதுவுமே மனதில் தோன்றவில்லை. இது அவனுக்கே சொந்தமான நிறுவனம். அவன் அதை நிறுவி ஒரு வருடம் ஆக போகிறது. அவனுடைய உழைப்புக்கேற்ற வருமானம் வர தொடங்கி இருந்தது... ஆனாலும் அவன் இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையை எடுத்து செய்துக் கொண்டிருந்தான்.

அந்த பெரிய கட்டிட வளாகத்தில் மாடியில் வணிக வளாகம் இருந்தது... கீழே அவனுடைய அலுவலகம் போல் வேறு சில அலுவலகங்கள் இருந்தன.

மதியம் அவனின் நண்பன் கோபால் வந்து உணவு உண்ண அழைக்கும் வரை முழு ஈடுபாடுடன் வேலை செய்துக் கொண்டிருந்தவன், பசி வயிற்றை கிள்ளுவதை உணர்ந்து நண்பனுடன் சென்றான்.

அங்கே இருக்கும் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் அமர்ந்து உண்ண தனியே கேண்டீன் இருந்தது. கோபால் ஒரு ஆடிட்டர். கடந்த சில வருடங்களாகவே அங்கே அலுவலகம் வைத்திருந்தான். அவனின் பரிந்துரையின் பேரில் தான் விக்ரம் இந்த வளாகத்தை அவனுடைய அலுவலகத்திற்கும் தேர்ந்தெடுத்திருந்தான்.

ன்ன என்று புரியாத ஏதோ ஒன்று விக்ரமின் மனதை உறுத்தியது! என்னவென்று தொடர்ந்து யோசிக்க விடாது பசித்தது. அவர்களின் நண்பர்கள் குழுவோடு இணைந்துக் கொண்டவர்கள் டிபன் பாக்ஸை திறந்தார்கள்.

“ஹா, விக்ரம் இன்னைக்கு தக்காளி சாதமா? அப்பா என்ன வாசனை! உன் வைப் செம குக்ப்பா...” என்றாள் நந்தினி. நந்தினி கோபாலின் புதிய தொழில் பார்ட்னர்.

“அது என்னவோ உண்மை தான் நந்து... புது புது வெரைட்டி சமையல் வேற” என்றாள் தேவி.

“நீங்க ரொம்ப லக்கி விக்ரம்...”

“ஆமாம், அவன் லக்கி ஆனால் அவன் வைப் தான் அன்லக்கி...” என்றான் ஷாஜஹான்.

“என்ன இப்படி சொல்றீங்க?”

“இவன் வீட்டு கிரஹபிரவேசம் அன்னைக்கு அவங்க கிட்ட இவன் எரிஞ்சு விழுந்ததை பார்த்திருக்கணும் நீங்க அப்போ தான் உங்களுக்கு புரியும்... என் மனைவியிடம் அப்படி எல்லாம் பேசினால் அவ்வளவு தான்... அடி பின்னிடுவா...”

எழுந்த சிரிப்பினூடே,

“அது தப்பும் இல்லையே... மனைவிக்கு மரியாதை கொடுக்க தெரியனும்ப்பா...”

அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த விக்ரமிற்கு மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் புரிந்தது. எப்போதும் அவன் அலுவலகம் வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே பாரதியிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வரும். அவன் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதை அறிந்துக் கொண்டால் தான் அவளுக்கு நிம்மதி. இன்று அவளிடம் இருந்து அது வரை அழைப்பு வரவில்லை...

திய உணவை முடித்து திரும்பியவனுக்கு, காலையில் அவன் எரிந்து விழுந்ததும் பாரதியின் கலங்கிய விழிகளும் நினைவில் வந்தது... அதற்கு மேல் அமைதியாக இருக்க இயலாது மனைவியின் செல்போனை அழைத்தான் அவன். அந்த பக்கம் ரிங் போனதே தவிர எடுக்கப்படவில்லை. அவளுக்கு கோபமா? பொதுவாக பாரதி அவனிடம் கோபத்தை காட்டுபவள் அல்ல. ஆனால் அவளின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு தானே?

விக்ரம் மனைவி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான்... முன்பெல்லாம் அவன் இது போல் அவளிடம் கோபமாக எதையும் சொன்னதில்லை...

அவர்கள் திருமணம், கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்ற, பெற்றோர் நிச்சயித்து நடந்த திருமணம். பெண் பார்க்கும் படலத்தில், முதல் முறை பார்த்த உடனேயே இருவருக்கும் பிடித்து விட, இருவரும் செல்போன் எண் பகிர்ந்துக் கொண்டு, தங்களின் எதிர்கால வாழ்வை பற்றி போனில் பேச தொடங்கினார்கள்... ஆனால் எதிர்பாராத விதமாக செல்வமும், புகழும் பெற்று விளங்கும் துரைசெல்வம் குடும்பத்தினர் பாரதியை எங்கேயோ பார்த்து பிடித்து போய் பெண் கேட்டு வர, சிறு குழப்பம் ஏற்பட்டது.

துரைசெல்வத்தின் மகன் சஞ்சயிடம் எந்த குறையும் இல்லை. குணத்தில் விக்ரமிற்கு இணையாக இருந்த சஞ்சய், பணத்தில், செல்வாக்கில் அவனை விட பல அடி உயர்ந்து இருந்தான். மகளின் வாழ்வு சஞ்சயுடன் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்து பாரதியின் பெற்றோர் அவளை சஞ்சய்க்கு மணம் முடிப்பது என்று முடிவு செய்தார்கள். ஆனால் பாரதி இதில் எல்லாம் மனம் மாறிவிடவில்லை. விக்ரமை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று அடம் பிடித்தாள்.

விக்ரமின் பெற்றோருக்கு, அவர்களின் மகன் தான் உலகில் உள்ள மற்ற அனைத்து ஆண்களையும் விட சிறந்தவன்! என் மகனை வேண்டாம் என்ற இடத்தில் ஏன் சம்மந்தம் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். ஆனால் விக்ரம் இளகவில்லை. பாரதியை தான் மணம் முடிப்பேன் என்று வைராக்கியத்தோடு இருந்தான் அவன்.

எத்தனை சொல்லியும் இருவரும் மாறாததால் வேறு வழி இல்லாது இரு வீட்டினரும் அரைமனதுடன் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் அளித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பாரதியும், விக்ரமும், அவர்கள் எடுத்த முடிவிற்கு வருத்தப் படுமாறு நேரவில்லை. இருவரும் மற்றவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். வேலையை விட்டுவிட்டு அவனுக்கு சிறப்பான மனைவியாக இருந்தாள் பாரதி. இரண்டு முத்தான குழந்தைகளும் இருந்தனர்.

குழந்தைகள் வளரும் முன் அவர்கள் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆர்வம் விக்ரமிற்கு இருந்தது. அதனால் தான் சொந்த தொழில் துவங்கினான். பாரதி கணவனின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லவில்லை. ஆனால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராதிருக்க மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கினாள். பொருளாதரா ரீதியாகவும், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் மனைவி ஏற்றுக் கொண்டதால், விக்ரம் முழு மூச்சுடன் தொழிலில் ஈடுபட்டான்... ஆனால் கூடவே டென்ஷன், வேலை ப்ரெஷர், ஸ்ட்ரெஸ்ஸும் அவனை வந்து சேர்ந்தது...

கோபம் வரும் போதெல்லாம் அவனின் குழந்தைகளிடமோ, அன்பு செலுத்தி வளர்த்த அம்மாவிடமோ காட்ட அவனுக்கு மனம் வந்ததில்லை... எனவே எப்போதும் அவனின் கோபத்திற்கு வடிகாலாய் இருந்தது அவனின் மனைவி தான். பொதுவாக இது போன்ற சம்பவங்கள் தன்னை பாதித்ததாக பாரதி காட்டிக் கொண்டது இல்லை... எப்போதும் இயல்பாகவே நடந்துக் கொள்வாள்.

விக்ரமும் தனியாக மனைவியிடம் மன்னிப்பு கேட்டதில்லை... ஆனால் அவனின் பேச்சு நினைவு வந்து அவனையே வருத்தும் போது, மறக்காது மனைவிக்காக ஸ்பெஷலாக அதே வணிக வளாகத்தில் இருந்த அந்த புகழ் பெற்ற ஜவுளி கடையில் இருந்து விலை உயர்ந்த சேலை வாங்கி செல்வான். பாரதி இதற்காக கோபப் பட்டதும் இல்லை, தனியாக மகிழ்ந்ததும் இல்லை...

மீண்டும் மனைவியின் எண்ணை செல்போனில் தட்டினான். மீண்டும் அது அடித்து விட்டு நிற்கவும், அவன் மனதில் முதல் முறையாக பயம் எட்டி பார்த்தது... காலையில் அப்படி சொல்லி இருக்க கூடாது! அவளுக்கு சிறு காயம் என்றாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது! சொன்ன நேரத்தில் அவன் நாக்கில் சனி இருந்ததோ?

அவசரமாக அவனின் ஈ-மெயில் திறந்து பார்த்தான். அன்று புதிதாக அவளிடம் இருந்து எந்த ஈ-மெயிலும் வந்திருக்கவில்லை. வழக்கமாக குழந்தைகள் பள்ளியில் நடக்கும் விஷயங்களை, அவர்களின் படிப்பு சம்மந்தப் பட்ட விஷயங்களை அவள் ஈ-மெயில் அனுப்புவது வழக்கம். இந்த அலுவலகம் தொடங்கிய நாள் முதல், அதை எல்லாம் பேச, கேட்க அவனுக்கு நேரம் இல்லை. ஆனால் அவை எல்லாம் அவன் அறிந்திருக்க வேண்டிய விஷயம் என்பதால், அதை ஈ-மெயில் மூலம் அவனுடன் பகிர்ந்துக் கொள்வது அவள் வழக்கம்...

அவளிடம் இது எல்லாம் தேவையில்லை என்று அவன் மறுத்த போது அவள் சொன்னது இன்னமும் நினைவில் இருந்தது...

“நீங்க இப்போ இருக்கும் ரேஞ்சுக்கு கொஞ்சம் மாசம் கழிச்சு பசங்க எந்த கிளாஸ் படிக்குறாங்கன்னு கேட்டா திரு திருன்னு முழிப்பீங்க... ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னு வச்சுக்கோங்க, என்ன செய்வீங்க? இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருப்பது அவசியம்...”

காலையில் அவன் கத்தியதும் அன்று அவள் சொன்னதுமாக இணைந்துக் கொண்டு அவனின் இதயத்தை பிசைந்தது... கடவுளே பாரதிக்கு எதுவும் இருக்க கூடாது!

வேலையில் கவனத்தை செலுத்த முயன்றவன், முழு கவனம் செலுத்த இயலாது மீண்டும் அவள் எண்ணை அழைத்தான். இப்போதும் எடுக்கப்படவில்லை...

என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை... வேறு யாரிடம் கேட்பது? அவளின் அலுவலக தோழிகள் யாரையும் அவனுக்கு தெரியாதே! வீட்டிற்கு போன் செய்யலாமா? ஆனால் அம்மாவிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது?

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # Nice storyÀákkòó 2018-11-08 21:42
Lovely story 😍😍
Reply | Reply with quote | Quote
# RE: Nice storyBindu Vinod 2018-11-09 05:38
Thank you very much :-)
Reply | Reply with quote | Quote
# RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைsathyapriya 2018-10-13 15:56
Is it possible to download pdf file for the stories
Reply | Reply with quote | Quote
# RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைsathyapriya 2018-10-13 15:56
Is it posible to download stories
Reply | Reply with quote | Quote
+1 # YesKiruthika 2016-08-11 16:48
Beautiful story well said
Reply | Reply with quote | Quote
# RE: YesBindu Vinod 2018-11-09 05:38
Thank you very much Kiruthika :-)
Reply | Reply with quote | Quote
+1 # thozhiyaa-en-kathaliyaasri jaya 2016-07-09 19:03
story is super....
.
Reply | Reply with quote | Quote
# RE: thozhiyaa-en-kathaliyaaBindu Vinod 2018-11-09 05:37
Thank you very much Sri jaya :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைUthka 2014-09-22 14:39
Hi,

Nice Story... I am from Malaysia and my name is Uthka.
All the stories are full of love and romantic.. I love the way you express the love. I have been reading some of your novel. It is simply superb.. I love it.
Without realising I becoming your fan.
Keep going and my wishes for you.
Reply | Reply with quote | Quote
# RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu Vinod 2014-11-03 05:50
Thanks Uthka :)
I write for fun and I am very happy to to know that you are enjoying it too :)

Thank you very much for your wishes :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைanu.r 2014-09-02 16:56
nice story.
Reply | Reply with quote | Quote
# RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu Vinod 2014-11-03 05:48
Thank you Anu :)
Reply | Reply with quote | Quote
+1 # TEKTamil Selvi 2014-05-08 10:06
Nice Story...
Nala msg soli irukinga..
Reply | Reply with quote | Quote
# RE: TEKBindu Vinod 2014-07-18 01:50
Thank you very much Tamil selvi :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைsubbu 2014-04-21 09:06
sema storypa suma nachunu msg solringa
Reply | Reply with quote | Quote
# RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu Vinod 2014-04-29 20:02
Thankyou'nga Subbu :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைsahitya 2014-04-12 22:11
very nice short story
Reply | Reply with quote | Quote
# RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu Vinod 2014-04-29 20:02
Thanks Sahitya :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைSurabi 2014-04-02 03:45
Too gud like it
Reply | Reply with quote | Quote
# RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu Vinod 2014-04-29 20:02
Thank you Surable (aka) Sathya :P
Reply | Reply with quote | Quote
+3 # thozhiya en kadhaliyaMadhu_honey 2014-03-25 22:41
Nice story... Though it was an arranged marriage they stood for each other as they felt love...tats superb and great understanding.....
Reply | Reply with quote | Quote
+1 # RE: thozhiya en kadhaliyaBindu V 2014-03-26 07:05
Thank you Madhu :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைkkumar 2014-03-12 21:56
All lines are very nice................... intha mathiriyana purithal unarvu real lifela ellorukkum vanthuvittal ella uravukalume rompa inimayanathaga marividum.

thank u very much mam......... for your great lines............
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu V 2014-03-13 07:57
Thank you very much for your comments Kumar :)
Reply | Reply with quote | Quote
+1 # Thozhiya En Kadhaliyalucki 2014-03-10 18:58
wow awesome Anon mam................... i like that last line especially..........
Reply | Reply with quote | Quote
# RE: Thozhiya En KadhaliyaBindu V 2014-03-11 00:37
Thanks Lucki :-)
Reply | Reply with quote | Quote
+2 # தோழியா,என் காதலியாHemalatha Raghavan 2014-02-01 18:08
ஹாய்,

கதை அருமையாக இருக்கு.
சின்ன கதை ஆனாலும் நச்சுனு இருக்கு.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா,என் காதலியாBindu V 2014-02-03 08:22
மிக்க நன்றி ஹேமலதா :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu V 2013-12-18 19:46
Thank you all for your comments, likes and ratings.
Reply | Reply with quote | Quote
+2 # storiessiva.k 2013-12-10 17:43
excellent story
Reply | Reply with quote | Quote
+3 # Tholiya en kadhaliyapandis 2013-11-28 16:13
Nice story :-)
Reply | Reply with quote | Quote
+2 # storesiyyapparajan 2013-11-27 09:59
:P
Reply | Reply with quote | Quote
+2 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைSugu 2013-11-19 17:52
very true and cute story..... :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைKumuthini Palani 2013-11-16 16:06
Nice story Anon
Reply | Reply with quote | Quote
+3 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைSandhya 2013-11-11 09:25
Superb story Anon. Good to see you in top form :D
Reply | Reply with quote | Quote
+3 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைNanthini 2013-11-09 21:13
Very sweet story. Nice :-)
Reply | Reply with quote | Quote
+2 # சிறுகதைmca fareed 2013-11-07 22:30
பலமுறை படிக்கதூண்டுகிறது அழகிய சிறுகதை
Reply | Reply with quote | Quote
+3 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu Vinod 2013-11-05 19:31
Superb! Romba nalla kathai!
Reply | Reply with quote | Quote
+3 # tholiya en kadhaliyasumathi. 2013-11-06 12:54
nice story i like very much ya... thank u so much :-)
Reply | Reply with quote | Quote
+3 # THILIYA EN KATHALIYASNOBHA 2013-11-05 10:14
SUPERB NICE YA
Reply | Reply with quote | Quote
+3 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைSutha 2013-11-05 04:05
Sema storyppa :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBindu V 2013-11-04 03:34
Hello friends,
Thanks for all your comments :-)

Anuja, Bala, It's my story!

Thanks!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைThenmozhi 2013-11-03 22:12
:-)

Superb!
Reply | Reply with quote | Quote
+3 # ramyasreeramya sreekanth 2013-11-03 14:28
Super........... kalakkinel.....
Reply | Reply with quote | Quote
+4 # RE:abi bala 2013-11-02 17:29
superb story.. :-)
Reply | Reply with quote | Quote
+3 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைSahana 2013-11-02 17:02
Superb and nice story... :-) Many ppls losing their precious times to be spent with family bcz of chasing money...
Reply | Reply with quote | Quote
+4 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைjanneth 2013-11-02 10:35
romba nalla iruku edy madiri weekly 2 story poduga pls....... :-)
Reply | Reply with quote | Quote
+3 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைBala 2013-11-02 10:32
simply superbbbbbbbb... ;-) who wrote this...
Reply | Reply with quote | Quote
+4 # hiAnuja 2013-11-02 02:04
writer yaaru paa???
Reply | Reply with quote | Quote
+4 # HiAnuja 2013-11-02 02:04
romba nallah irukku. First line padiththathum shock aagittaen. apparam padikka padikka , wonderful. Nice pair. nice Story.
Reply | Reply with quote | Quote
+4 # RE: தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதைshreesha 2013-11-01 23:08
nice........ new try........ congratz....... :-) :lol:
Reply | Reply with quote | Quote
+5 # RE: தோழியா! என் காதலியா!Admin 2013-11-01 22:18
As always, super story :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top