அவன் பேசி முடிக்கும் முன் குறுக்கிட்டு,
“அது யார் அது நந்தினி?”
அது வரை அவள் குரலில் இருந்த கேலி மறைந்து போயிருந்தது. இப்போது அவன் முகத்தில் புன்னகை தோன்றி இருந்தது.
“இந்த ஒரு விஷயத்தில் மட்டும் உன்னை அடிச்சிக்கவே முடியாதுடா... இது போல் அழகான மனைவி இருக்கும் போது நான் வேற யாரையாவது நினைச்சு கூட ஏன் பார்க்க போறேன்... நந்தினி கோபாலோட புது பார்ட்னர்...”
“ஓஹோ!”
“அன்னைக்கு வீட்டு பங்க்ஷ்னில் உன்னிடம் கத்தினேன்ல அதை பத்தி பேசிட்டு இருந்தாங்க... மாமா அத்தை எல்லாம் என்னை பத்தி தப்பா தானே நினைச்சிருப்பாங்க?”
“க்கும்... அதெல்லாம் ஒண்ணுமில்லை, அவங்களுக்கு நீங்க சூப்பர் ஸ்டார் தான்... இப்படி தாங்கோ தாங்குன்னு தாங்க யாராலும் முடியாதுன்னு எல்லோர்கிட்டேயும் ஒரே பெருமை பீத்தல்ஸ் தான்... நீ இப்படி எல்லாம் கோபப் படுவது கண்ணு படாமல் இருக்கன்னு அவங்களே புதுசா ஒரு கதையை கிளப்பி விட்டு வச்சிருக்காங்க... சரி அதை போய் மாத்தி ஏன் உன் இமேஜை டேமேஜ் செய்யணும்னு நான் ஒன்னும் சொல்லலை...”
“ஹுஹும்... சரி நீ இன்னைக்கு வேலை எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வா...” என்றான் அவன் மெல்லிய குரலில்.
எப்போதும் போல் அவனின் பேச்சில் மயங்கியவள்,
“அதெல்லாம் சரி, முதல்ல சீக்கிரம் சாப்பிட வாங்க...” என்று அவனின் மூக்கை பிடித்து ஆட்டி விட்டு,
Very cute story...