(Reading time: 13 - 26 minutes)
சிறுகதை - தோழியா! என் காதலியா!
சிறுகதை - தோழியா! என் காதலியா!

“க்கும், இதை கண்டு பிடிக்க நான் அகதா கிறிஸ்டியை தான் கதை எழுத சொல்லணும்... இன்னைக்கு எப்படியும் தீபாவளிக்கு புதுசா வந்திருக்க அந்த பட்டு புடவை வரும்னு நினைச்சேன், என்ன வெறும் சாரி தான் வந்திருக்கு? கடையில் ரொம்ப கூட்டமா?”

   

வழக்கமான கேலி இழையோட அவள் பேசவும், அவன் முகம் தெளிந்தது.

   

“உனக்கு சேலை எல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சேன்...”

   

“ஓஹோ! அதனால் தான் இவ்வளவு நாள் அதை வாங்கிட்டு வந்தீங்களா?”

   

“ஹேய்... நீ மாறவே மாட்டீயா? லாயரா போயிருக்க வேண்டியவள் நீ... கேள்வியா கேட்டு போட்டு தாக்கு...”

   

“அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு என்ன புதுசா சாரி?”

   

“ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா! நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... நீ இல்லாமல் நான் என்ன ஆவேன்? என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை... ரொம்ப சாரிடா... இப்போ எல்லாம் ரொம்ப கோபப்பட்டு உன்னை ரொம்ப திட்டுறேன்ல...”

   

அவனருகில் வந்தவள்,

   

“என்ன இதுக்கு எல்லாம் இவ்வளவு எமோஷன் ஆகுறீங்க? சின்ன விஷயம் தானே? எனக்கு உங்களை பத்தி தெரியாதா?”

   

“இல்லை எப்போதும் இல்லாத விதமா உன் கண்ணு கலங்கிச்சா...”

   

“யாரு கண்ணு?”

   

“உன் கண்ணு தான்... காலையில் நான் திட்டின போது கண் கலங்க பார்த்தீயே...”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.