(Reading time: 13 - 26 minutes)
சிறுகதை - தோழியா! என் காதலியா!
சிறுகதை - தோழியா! என் காதலியா!

நிற்கவும், அவன் மனதில் முதல் முறையாக பயம் எட்டி பார்த்தது... காலையில் அப்படி சொல்லி இருக்க கூடாது! அவளுக்கு சிறு காயம் என்றாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது! சொன்ன நேரத்தில் அவன் நாக்கில் சனி இருந்ததோ?

   

அவசரமாக அவனின் ஈ-மெயில் திறந்து பார்த்தான். அன்று புதிதாக அவளிடம் இருந்து எந்த ஈ-மெயிலும் வந்திருக்கவில்லை. வழக்கமாக குழந்தைகள் பள்ளியில் நடக்கும் விஷயங்களை, அவர்களின் படிப்பு சம்மந்தப் பட்ட விஷயங்களை அவள் ஈ-மெயில் அனுப்புவது வழக்கம். இந்த அலுவலகம் தொடங்கிய நாள் முதல், அதை எல்லாம் பேச, கேட்க அவனுக்கு நேரம் இல்லை. ஆனால் அவை எல்லாம் அவன் அறிந்திருக்க வேண்டிய விஷயம் என்பதால், அதை ஈ-மெயில் மூலம் அவனுடன் பகிர்ந்துக் கொள்வது அவள் வழக்கம்...

   

அவளிடம் இது எல்லாம் தேவையில்லை என்று அவன் மறுத்த போது அவள் சொன்னது இன்னமும் நினைவில் இருந்தது...

   

“நீங்க இப்போ இருக்கும் ரேஞ்சுக்கு கொஞ்சம் மாசம் கழிச்சு பசங்க எந்த கிளாஸ் படிக்குறாங்கன்னு கேட்டா திரு திருன்னு முழிப்பீங்க... ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னு வச்சுக்கோங்க, என்ன செய்வீங்க? இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருப்பது அவசியம்...”

   

காலையில் அவன் கத்தியதும் அன்று அவள் சொன்னதுமாக இணைந்துக் கொண்டு அவனின் இதயத்தை பிசைந்தது... கடவுளே பாரதிக்கு எதுவும் இருக்க கூடாது!

   

வேலையில் கவனத்தை செலுத்த முயன்றவன், முழு கவனம் செலுத்த இயலாது மீண்டும் அவள் எண்ணை அழைத்தான். இப்போதும் எடுக்கப்படவில்லை...

   

என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை... வேறு யாரிடம் கேட்பது? அவளின் அலுவலக தோழிகள் யாரையும் அவனுக்கு தெரியாதே! வீட்டிற்கு ஃபோன் செய்யலாமா? ஆனால் அம்மாவிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது?

   

ஒரு சில நிமிடங்கள் குழம்பி விட்டு மீண்டும் மனைவியின் செல்போனிற்கு தொடர்புக் கொள்ள முயன்றான். இந்த முறை அழைப்பு ஏற்கபடவும், ஒரு ஆசுவாச பெருமூச்சு விட்டான், 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.