(Reading time: 13 - 26 minutes)
சிறுகதை - தோழியா! என் காதலியா!
சிறுகதை - தோழியா! என் காதலியா!

வைத்திருந்தான். அவனின் பரிந்துரையின் பேரில் தான் விக்ரம் இந்த வளாகத்தை அவனுடைய அலுவலகத்திற்கும் தேர்ந்தெடுத்திருந்தான்.

   

என்ன என்று புரியாத ஏதோ ஒன்று விக்ரமின் மனதை உறுத்தியது! என்னவென்று தொடர்ந்து யோசிக்க விடாது பசித்தது. அவர்களின் நண்பர்கள் குழுவோடு இணைந்துக் கொண்டவர்கள் டிஃபன் பாக்ஸை திறந்தார்கள்.

   

“ஹா, விக்ரம் இன்னைக்கு தக்காளி சாதமா? அப்பா என்ன வாசனை! உன் வைப் செம குக்ப்பா...” என்றாள் நந்தினி. நந்தினி கோபாலின் புதிய தொழில் பார்ட்னர்.

   

“அது என்னவோ உண்மை தான் நந்து... புது புது வெரைட்டி சமையல் வேற” என்றாள் தேவி.

   

“நீங்க ரொம்ப லக்கி விக்ரம்...”

   

“ஆமாம், அவன் லக்கி ஆனால் அவன் வைப் தான் அன்லக்கி...” என்றான் ஷாஜஹான்.

   

“என்ன இப்படி சொல்றீங்க?”

   

“இவன் வீட்டு கிரஹபிரவேசம் அன்னைக்கு அவங்க கிட்ட இவன் எரிஞ்சு விழுந்ததை பார்த்திருக்கணும் நீங்க அப்போ தான் உங்களுக்கு புரியும்... என் மனைவியிடம் அப்படி எல்லாம் பேசினால் அவ்வளவு தான்... அடி பின்னிடுவா...”

   

எழுந்த சிரிப்பினூடே,

   

“அது தப்பும் இல்லையே... மனைவிக்கு மரியாதை கொடுக்க தெரியனும்ப்பா...”

   

அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த விக்ரமிற்கு மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் புரிந்தது. எப்போதும் அவன் அலுவலகம் வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே பாரதியிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வரும். அவன் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதை அறிந்துக் கொண்டால் தான் அவளுக்கு நிம்மதி. இன்று அவளிடம் இருந்து அது வரை அழைப்பு வரவில்லை...

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.