Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 4.86 (21 Votes)
யாதுமாகி… - போட்டி சிறுகதை 02 - 4.9 out of 5 based on 21 votes
Pin It

யாதுமாகி… - Anon

yathumagi

தின காலண்டரில் தேதியை கிழித்த ஜோவிதா, அது காட்டிய தேதியை பார்த்தபடி ஒரு சில வினாடிகள் நின்றாள். இன்றைய தேதி இருபத்தி ஐந்து! அப்படி என்றால் அவள் அவளுடைய கணவனுடன் பேசி முழுதாக ஐந்து நாட்கள் ஆகி விட்டன...

அவளையும் அறியாது ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது... வழக்கம் போல் காலை வேலைகளை தொடங்கியவளின் மனம் மட்டும் கணவனை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது...

வெளிநாட்டிலிருக்கும் அவளின் கணவன் அன்புசெல்வனுடன் ஐந்து நாட்களுக்கு முன் போனில் பொரிந்து தள்ளியது நினைவில் இருந்தது...

“..உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு தெரியுது, தாராளமா நீங்க உங்களுக்கு பிடிச்ச ஒருத்தியை கல்யாணம் செய்துக்கோங்க... லீகலா நாம பிரிஞ்சிடுவோம்...”

அது தான் அவள் சொன்ன இறுதி வாக்கியம். அவள் பேசி முடிக்கும் முன் தொலைபேசி இணைப்பபை அவன் துண்டித்து விட்டான்... அதற்கு பின் மீண்டும் தொடர்புக் கொண்டு பேச அவளுக்கு மனம் வரவில்லை... அவள் சொன்னதும், சொன்ன விதமும் வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம் ஆனால் அவள் சொல்ல விரும்பியது ஒன்றே ஒன்று தான்... இது போல் பிரிந்து வாழ்வது இனி இயலாத காரியம்!

ஆனால், இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே பேசாமல் இருப்பது? இன்று அவனுடன் பேச வேண்டும் என்று அவள் நினைக்கும் போதே, ஏழு மணி அலாரம் ஒலி எழுப்பியது... இரண்டு பிள்ளைகளையும் பள்ளிக்கு கிளப்ப வேண்டும் என்ற நினைவு வரவும், மற்ற எண்ணங்களை தற்காலமாக ஒதுக்கி, அவசரமாக காலை உணவையையும், மதிய உணவையும் தயார் செய்து, லஞ்ச பாக்ஸ்க்குள் அடைத்து தயாராக வைத்து விட்டு, தூங்கி கொண்டிருந்த இருவரையும் எழுப்பினாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தைகளையும் தயார் செய்து தானும் தயாரகி அவசர அவசரமாக கிளம்பினாள்...

நான்கு வயதான ரோஹினியும், ஏழு வயதான ராஜாவும், அவள் ஆசிரியையாக பணி புரியும் அதே பள்ளியில் படிக்கின்றனர். அவளுடைய கணவன் வெளிநாடு சென்று இரண்டு வருடங்களாகி விட்டது... அவன் வேலை செய்த நிறுவனத்தில் நிரந்தர பணியும் கிடைத்திருந்தது... குடும்பத்தை அங்கே அழைத்து செல்ல வழி இருந்தாலும், குடும்பத்திற்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் அவன் இன்னும் சில மாதங்கள் குடும்பத்தை பிரிந்திருக்க திட்டமிட்டிருந்தான்...

ஜோவிதாவிற்கு அவனின் எண்ணம் புரியாமல் இல்லை ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பது அவளின் எண்ணம். அவர்களுக்கு என்று சென்னையில் ஒரு வீடு இருந்தது, ஊரில் சில நிலங்களும் இருக்கின்றன, கடன் என்று எதுவுமில்லை. எனவே பணம் சேமிப்பதை விட குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருப்பதே நல்லது என அவள் நினைத்தாள். ஒரு மாதமாகவே இருவரும் இதை பற்றி பேசி பேசி, விவாதித்து விவாதித்து, இறுதியில் சண்டையில் வந்து முடிந்திருந்தது.

ணவனின் அன்பில் அவளுக்கு சிறு சந்தேகமும் இல்லை... அவர்களை பிரிந்திருப்பது அவனுக்கு கடினமானது தான்... அவர்களின் எதிர்காலத்திற்காக தான் அவன் இதை சொல்கிறான் என்பதும் அவளுக்கு புரிந்தது... ஆனால் ஏற்றுக் கொள்ள தான் மனம் வரவில்லை. ‘நாளை’யை மட்டுமே நினைத்து இன்றைய பொழுதை இழப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை... சேமிப்பது நல்லது தான் ஆனால் தேவைக்கு அதிகமாக சேமிப்பது தேவையா என்று அவளுக்கு புரியவில்லை...

மற்றைய தினங்களிலும், பள்ளியில் நடக்கும் விளையாட்டு தினம், ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் ரோஹினிக்கும், ராஜாவிற்கும் அவனின் பிரிவு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது அவளுக்கு தெரியும்...

அவளுடைய கணவனுக்கும் அவர்களின் மூன்று பேரின் மீது அதீத அன்பு இருந்தது... அவனுக்கும் கஷ்டம், இங்கே இவர்களுக்கும் வருத்தம், பிறகு பணத்தை மட்டும் நினைத்துக் கொண்டு என்ன செய்வது?

பேருந்தில் செல்லும் வழி எல்லாம் மனதில் இதே நினைவோடு பயணம் செய்தவள், மாலையில் அவனுடன் பேச வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.

மாலை ஆறு மணி அளவில் தொலைபேசி ஒலி எழுப்பியது. மொபைலில் அல்லாது லேன்ட்லைனில் அழைப்பது அவன் தான் என்பது தெரிந்திருந்தப் படியால் அவளுக்கு முன்பே ராஜா ஓடி சென்று போனை எடுத்து பேசினான். ஒரு வாரமாக பள்ளியில் நடந்த கதைகளை அவன் சொல்லி முடித்து, ரோஹினியையும் பேச விட்டு விட்டு, கடைசியாக ஒரு வழியாக ஜோவிதாவிடம் அந்த கார்ட்லெஸ் போனை கொண்டு வந்து தந்தான்.

மன்னிப்பு சொல்லி ஆரம்பிப்பதா அல்லது இயல்பாக பேசுவதா என்று அவள் யோசிக்கும் போதே,

“நீ கேட்டது போல், நீ ஆசை பட்டதையே உனக்கு தரலாம்னு முடிவு செய்துட்டேன்... எல்லா பேப்பரையும் என் பிரெண்டோட மனைவியிடம் கொடுத்திருக்கேன்... ஸ்கூலுக்கே வந்து தருவாங்க... அவங்க என் க்ளோஸ் பிரெண்டோட வைப், தயவு செய்து சீன் எதுவும் க்ரியேட் செய்யாதே... பேப்பர் எல்லாம் பார்த்துட்டு இன்னும் ஏதாவது சேன்ஜ் செய்யனும்னா சொல்லு...”

அத்துடன் அந்த பக்கம் இணைப்பு துண்டிக்கப் பட்டதற்கான அடையாளமாக கீங் கீங் என்னும் ஒலி எழுந்தது. இல்லையென்றாலும் அவளால் பேச முடிந்திருக்குமா என்று தெரியவில்லை.

அவ்வளவு தானா? இத்தனை எளிதான விஷயம் தானா இது? பத்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இவ்வளவு தானா?

ன்புச்செல்வன் சொன்ன அவனின் நண்பனின் மனைவி லக்ஷ்மி அடுத்த நாளே அவளை பள்ளியில் வந்து சந்தித்தாள்.

“உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன், இப்போ தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது...”

பதிலுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் புன்னகையை பதிலாக கொடுத்தாள் ஜோவிதா.

லக்ஷ்மி, தன் கைப்பையில் வைத்திருந்த அந்த பெரிய கடித உரையை எடுத்து கொடுத்தாள். அதில் என்ன இருக்கும் என்பது புரிந்ததால் ஜோவிதாவின் முகம் தானாக வாடியது.

“உங்க கணவர் சொன்னார், உங்களுக்கு இந்த வேலை மீது ரொம்ப ஈடுபாடுன்னு, ஆனாலும் இப்படியா? யோசித்து பார்த்தால் அவர் எடுத்திருக்கும் முடிவும் சரி தான்...”

அவன் இவர்களிடம் என்ன சொல்லி இருக்கிறானோ? மற்றபடியும் அவன் போனில் சொன்னது நினைவு வர, மனதை கட்டுபடுத்தி, புன்னகைக்க முயன்றாள் அவள்.

“இன்னும் ஒரு வாரத்தில் அவரே வர போகிறாரே அப்புறம் ஏன் நான் நடுவில் இங்கேன்னு நினைத்தேன்... ஒருவேளை நீங்க பீல் செய்வீங்கன்னு தான் என்னிடம் சொன்னார் போலும்...”

“ஒரு வாரத்தில் அன்பு இங்கே சென்னை வருகிறாரா?”

நம்ப முடியாமல் அவள் தடுமாற, அவளை ஆச்சர்யமாக பார்த்த லக்ஷ்மி,

“உங்களுக்கு தெரியாதா? ஒருவேளை உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைத்திருப்பாரோ? நான் தான் உளறிட்டேனா? சாரிங்க... ஸ்கூல் அட்மிஷனுக்கு எல்லாம ரெடி செய்யனுமே அது தான் இப்போதே வருகிறார்...”

ஸ்கூல் அட்மிஷன்?

குழந்தைகளையும் அழைத்து செல்ல போகிறானா?

டுத்த ஒரு வாரம் எப்படி ஓடியது என்றே ஜோவிதாவிற்கு புரியவில்லை. இன்று இரவு அன்புச்செல்வன் சென்னை வந்து சேர்கிறான்... விமான நிலையத்திற்கு போகாமல் இருந்து விடலாமா என்று நினைத்தவளுக்கு மனம் வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவனை நேரில் பார்க்க கிடைக்கும் வாய்ப்பை தவற விட தோன்றவில்லை... இதற்கு பின் அவனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ!

மூவரும் காரில் அவனின் விமானம் வந்து சேரும் நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தை சென்று அடைந்தனர். குழந்தைகள் இருவரும் அப்பாவை பார்க்க போகும் சந்தோஷத்தில் இருந்தார்கள்... அவனிடம் சுயமரியாதை எல்லாம் விட்டு விட்டு நேராக பேசி பார்க்க வேண்டுமா இல்லையா என்ற குழப்பத்தில் அவளிருக்க, தூரத்தில் அன்புசெல்வனின் உருவம் தெரிந்தது. கடந்த சில நாட்களாக மனதில் இருந்த துயரம், வருத்தம் எல்லாம் கடந்து அவனை நேரில் பார்த்த சந்தோசம் அவள் முகத்தில் பொங்கியது...

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# NiceMini mini 2017-09-10 21:24
Hello Bindu

Very nice! Short stories are not easy to write !
Very nicely written, kudos to your talent!
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Janaki 2017-02-04 21:25
Nice story :clap:
Reply | Reply with quote | Quote
# LovelyKiruthika 2016-08-08 17:04
very Nice Story
Reply | Reply with quote | Quote
# hiBridha 2014-03-13 12:21
mam last line dha super.......neraiaya per money money nu life ah waste panidu irukaga neega sonadhu 100% true statement...........super mam :) :)
Reply | Reply with quote | Quote
# RE: hiBindu V 2014-03-14 02:07
Nandri Bridha :-)
Reply | Reply with quote | Quote
# Yathumaagilucki 2014-03-10 19:25
Super story Anon mam..................
Reply | Reply with quote | Quote
# RE: YathumaagiBindu V 2014-03-11 00:40
Thank you very much Lucki :-)

Ella kathaiyum padichiteenga, Itharku peyar than kathala mattum miss senjuteengalo? ;-)

Ippadi ovvoru kathaiyum paditthu comment seiyum pothu romba santhoshamaa irukku. Thanks a lot!
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:16
ஆதி மேடம்க்காக கொஞ்சம் அவசரமாக எழுதப் பட்ட கதை... நாவல் எழுத வைத்திருந்த கருவில் கொஞ்சம் பிய்த்து எடுத்து எழுதியது ;-)

இதை ஏன் சொல்கிறேன் என்றால், கொஞ்ச நாள் கழித்து நான் இதை ஒரு பகுதியாக கொண்டு கதை எழுதினால், நீங்க யாரும் what is thisன்னு கேட்க கூடாதே, அதற்கு தான் ;-)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Thenmozhi 2014-01-21 06:35
athu sari ithellam enna china kolmal thane Anon :)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02usha amar 2014-01-12 04:56
யாதுமாகி --> இருப்பது பணம் அல்ல....அன்பு மட்டும் தான்... நன்றி அருமையான கதை கொடுத்ததற்கு!
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:13
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி உஷா.
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Sandhya 2014-01-10 19:00
Super story as always Anon :) Jo and Anbu are so sweet ;-)

Sorry was busy with work and was not able to comment immediately
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:13
சந்தியா! நன்றி நன்றி!

மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை என்ற போதும், தோழி ஒருத்தங்க சொல்லும் போது என்ன செய்வது ;-)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bala 2014-01-09 00:04
nice story... :)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:12
நன்றி பாலா!
Reply | Reply with quote | Quote
# yaathumagiPreethi 2014-01-08 09:40
alagana kadhaiyai alaga sollirukinga Anon, Vazhtthukkal :)
Reply | Reply with quote | Quote
# RE: yaathumagiBindu V 2014-01-20 22:12
நன்றி ப்ரீத்தி!
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Nanthini 2014-01-07 18:18
Anon, solla vanthathai janaranjagamaana muraiyil solli irukeenga.
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:12
நாம எல்லாம் எப்போதுமே கமர்ஷியல் ரைட்டர் தானே வினோ அக்கா.

மிக்க நன்றி :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02shaji 2014-01-07 11:04
super story.
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:11
நன்றி ஷாஜி :)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Admin 2014-01-07 06:24
Nice one Anon :)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:11
இந்த் நைஸ்'ஐ விடவே மாட்டிங்களா ;-)

நன்றி நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Thenmozhi 2014-01-07 02:24
nice story Anon.

Thanks for participating in the contest :)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:10
நன்றிக்கு நன்றிங்க மேடம் ;-)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02shreesha 2014-01-06 23:31
nice story...
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:10
நன்றி ஸ்ரீஷா
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Abirami.B 2014-01-06 23:21
super story.. :)
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:10
மிக்க நன்றி அபிராமி.
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Anusha Chillzee 2014-01-06 23:21
Typical Anon story :)

Good to see you helping Aadhi. Good.
Reply | Reply with quote | Quote
# RE: யாதுமாகி… - போட்டி சிறுகதை 02Bindu V 2014-01-20 22:09
நன்றி அனு :)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top