(Reading time: 10 - 20 minutes)
சிறுகதை - யாதுமாகி…
சிறுகதை - யாதுமாகி…

“அந்த என்வெலப் வந்து சேர்ந்துச்சா?”

   

“ம்ம்ம்...”

   

“எல்லாம் சரியா இருக்கா?”

   

“ம்ம்ம்...”

   

“ஏதாவது சேன்ஜ் செய்யனும்னா உடனே சொல்லனும்...”

   

அவன் பக்கம் திரும்பி நேராக பார்த்தவள்,

   

“பசங்க இரண்டு பேரையும் கூட அழைச்சிட்டு போக போறீங்களா?” என்றாள் மெல்லிய குரலில்.

   

“ஆமாம்... இது என்ன கேள்வி?” என்றான் அவன் அவள் முகத்தை ஆராய்ந்தபடியே...

   

அவ்வளவு தான் இதோ அதோ என்று காத்திருந்த கண்ணீர் ஜோவிதாவின் கண்ணில் இருந்து கொட்ட தொடங்கியது...

   

“அப்போ நான் மட்டும் உங்க யாருக்கும் வேண்டாதவளாகி விட்டேனா? எப்படி இப்படி ஒரு முடிவு எடுக்க உங்களால முடிந்தது?”

   

பேசும் போதே, அவன் முன் அழுவது பிடிக்காமல் அழுகையை அடக்கியவள், முகத்தை நேராக திருப்பி வெளியே தெரிந்த இருளை வெறித்து பார்க்க தொடங்கினாள்.

   

ஒரு சில வினாடிகள் எதுவும் சொல்லாது அமைதியாக அவளையே பார்த்திருந்தவன்,

   

“நீ சொன்னதை தானே செய்தேன்...” என்றான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.