(Reading time: 10 - 20 minutes)
சிறுகதை - யாதுமாகி…
சிறுகதை - யாதுமாகி…

“ம்ம்ம்...” மீண்டும் இவன் முன் அழக் கூடாது என்று மனதை கஷ்டப் பட்டு அடக்கி அமைதியாக இருப்பதாக காட்டிக் கொள்ள முயன்றாள் அவள்.

   

“அந்த என்வெலப் எங்கே? எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கணும்...”

   

“அந்த டேபிளுடைய வலது பக்க டிராவில் இருக்கும்...”

   

எழுந்து சென்று அவள் சொன்ன இடத்தில் கிடைத்த அந்த உரையை எடுத்து பிரித்தவன், மீண்டும் அவளின் அருகில் வந்து அமர்ந்து, ஒவ்வொரு காகிதத்தையும் எடுத்து பார்க்க துவங்கினான்...

   

“ஒரு மாதம் போதுமா இல்லை மூணு மாசம் வேணுமா?”

   

“எதுக்கு?”

   

“உன்னுடைய வேலைக்கு நோட்டிஸ் பீரியட்?”

   

கேள்வியோடு அவன் பக்கம் பார்த்தாள் அவள்.

   

“விசா அப்ப்ளிகேஷன் எல்லாம் ரெடியா இருக்கு... நீ சைன் போடனும்... இன்னும் ஓரு இரண்டு மூணு வாரத்தில் கிடைச்சிடும்... அப்புறம் நீ வேலையை விட்ட உடனேயே நாம நாலு பெரும் கிளம்பிடலாமே...”

   

அவன் சொன்னதை நம்பாமல் பார்த்தாள் அவள்.

   

“என்ன பார்க்குற? இந்த கவரில் எல்லா டாகுமென்ட்ஸும் இருக்கு...”

   

அவசரமாக அவன் கையில் இருந்த காகிதங்களை பிடுங்கி பார்த்தவள், அவனை பார்த்து முறைத்தாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.