(Reading time: 10 - 20 minutes)
சிறுகதை - யாதுமாகி…
சிறுகதை - யாதுமாகி…

“இது தான் நீங்க சொன்னதா?”

   

“ஆமாம் நீ ஆசைப் பட்டதையே கொடுக்குறேன்னு சொன்னேன்... இது இல்லையா நீ ஆசைப் பட்டது?”

   

கேலியாக ஒலித்த அவனின் கேள்வியை கேட்டு கோபப் பட்டவள்,

   

“உங்களை!!!”

   

“ஹா ஹா... தெரியும் தெரியும் நீ என்ன நினைச்சேன்னு! ஏர்போர்ட்டில் உன்னை பார்த்த உடன் நானும் கூட ஒரு நிமிஷம், அட நம்ம ஜோ கூட புத்திசாலி தான் உண்மை தெரிஞ்சிடுச்சு போலன்னு நினைச்சேன்... அப்புறம் முகத்தில் தான் லிட்டர் லிட்டராக சோகம் வழிஞ்சதே... சரி தான் மேடம் இன்னும் கவரில் என்ன இருக்குன்னு பார்க்கலை ஆனாலும் இந்த ஹீரோவை பார்க்காமல் இருக்க முடியாமல் கிளம்பி வந்து இருக்காங்கன்னு புரிஞ்சது...”

   

அவன் சொன்னது உண்மை என்ற போதும் அதை ஏற்க மனம் வராது,

   

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை... பசங்க போகணும்னு சொன்னாங்க...”

   

“அப்படியா என்ன? அவங்களுக்கு நேத்து தான் விஷயமா தெரியுமாமே, ஆனால் டிரைவர் எல்லாம் மூணு நாளுக்கு முன்பே அரேன்ஜ் செய்து வச்சிருந்ததாக கேள்வி பட்டேனே...”

   

“ப்ச்...”

   

“ஜோ, உன்னையும் பசங்களையும் விட எனக்கு வேற என்ன வேணும்? உங்களுக்காக தான் நான் அங்கே தனியா இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு நினைச்சதே, அதில் உங்க யாருக்கும் சந்தோசம் இல்லை எனும் போது, நான் அங்கே இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு? உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும், நீ, அன்னைக்கு அப்படி பேசனும்னா, உனக்கு மனசில் எவ்வளவு வருத்தம் இருக்கும்னு புரிந்தது அது தான் உன்னுடைய ஹீரோ உடனே அக்ஷன் எடுத்தாச்சு...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.