Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

IPL 2017 @ Chillzee!<br>Check out cool statistics updated daily!
IPL 2017 @ Chillzee!
Check out cool statistics updated daily!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 4 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 4 votes

2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்

This is (guest) entry #155 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - பிந்து வினோத்

Monalisa

டிகாரத்தை பார்த்த படி சமையலறை வேலைகளை அவசர அவசரமாக செய்துக் கொண்டிருந்தாள் அவள்.

காலை உணவு தயார் செய்து முடித்து விட்டு, மதிய உணவையும் செய்தவள், அதை கணவனுக்கு ஒரு டிபன் பாக்ஸிலும், மகளுக்கு ஒரு டிபன் பாக்ஸிலும் அடைத்து வைத்தாள். பின் தூங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பினாள்.

“மணி ஏழு தானே ஆகுது? ஏழே கால் மாதிரி அவளை எழுப்பு..” என்ற கணவனை நேராக பார்க்காமல்,

“இன்னைக்கு... அந்த மீட்டிங்... ம்ம்ம்... ரைட்டர்ஸ் பங்க்ஷன் இருக்கு...” என்றாள்.

சொல்லும் போதே வர போகும் சூடான வார்த்தைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டே தான் சொன்னாள்.

அவளை ஏமாற்றாமல் அவளை எரித்து விடுவது போல பார்த்த படி,

“மண்ணாங்கட்டி! வேற வேலையே இல்லையா உனக்கு? ஏன் இப்படி டைமை வேஸ்ட் செய்ற? உருப்படியா ஏதாவது செய்யலாம்ல?” பொரிந்து தள்ளினான் அவன்.

எதிர்பார்த்தது மட்டுமல்லாமல் பழகி போனதும் என்பதால், பதில் சொல்லாமல் அமைதியாக மகளை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்ய தொடங்கினாள் அவள்.

குளிப்பாட்டி, காலை உணவு ஊட்டி விட்டு, யுனிஃபார்ம் அணிவித்து, ஷூ, சாக்ஸ் அணிவித்து ஸ்கூலுக்கு செல்ல மகளை தயார் செய்து விட்டு, அவளும் குளித்து சேலை மாற்றி தயாராகினாள்.

ஆட்டோ ஹாரன் சத்தம் கேட்கவும், மகளை ஆட்டோவில் ஏற்றி டாட்டா சொல்லி அனுப்பி விட்டு உள்ளே வந்த போது, மீண்டும் அதே கடு கடு முகத்துடன் அவன்....

“எனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும் விட மாட்டல்ல?”

“....”

“திமிர்! வேறென்ன?”

அவள் பதில் சொல்லாமல் அவனுக்கு காலை உணவை எடுத்து பரிமாறினாள்.

“இப்படியே ஊமைக் கோட்டான் போல இருந்து எல்லாத்தையும் சாதிச்சுக்கோ... சரியா அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆனா வா... இல்லைனா, நான் விட்டுட்டு போயிடுவேன்....”

“நான் ரெடி... சாப்பிட மட்டும் தான் செய்யனும்...”

சொல்லிவிட்டு அவசர அவசரமாக கொஞ்சமாக உணவை விழுங்கியவள், அவன் அலுவலகம் செல்ல பேகுடன் வந்த நேரம் கை கழுவி தயாராக நின்றாள்.

அவள் அப்படி நேரத்திற்கு தயாரானதும் கூட அவனுக்கு கடுப்பை தான் தந்தது.

“நீ ஏன் இப்படி இருக்க??? எனக்கு எரிச்சலா வருது.... ரைட்டர்! மண்ணாங்கட்டி! அதுக்கு ஒரு கூட்டம் வேற!”

இந்த முறை அமைதியாக இருக்காமல்,

“இப்போ என் ஃப்ரீ டைம் தான்... சும்மா இருக்க நேரத்துல...” என்று அவள் இழுக்க... அவன் பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.

“சும்மா இருக்கன்னா, உருப்படியா ஏதாவது செய்யலாம்ல? எதுக்கு இப்படி லைஃபை வேஸ்ட் செய்துட்டு இருக்க.... உன்னை வேலைக்கு தான் போக வேண்டாம்னு சொன்னேன்... வேற ஏதாவது கிளாஸ் போ... நல்ல விதமா டைமை யுடிலைஸ் செய்... இபப்டி உட்கார்ந்து பேப்பர் பேப்பரா கிறுக்குறதுக்கு, சும்மா லூசு மாதிரி சுவரை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கலாம்...”

அவள் பதில் சொல்லாமல் பைக்கில் ஏறி அமர்ந்தாள்....

அவளுக்கு தெரியும் இனி செல்லும் வழி எங்கும் அவன் என்ன பேசுவான் என்று...!

படித்த படிப்பிற்கு, உருப்படியாக ஏதாவது செய்ய கூடாதா?

உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

இதனால் ஏதேனும் பிரயோஜனம் உண்டா?

என்ன அச்சீவ் செய்ய இதை செய்கிறாய்?

பைசா பிரோயோஜனம் படாததை ஏன் விழுந்து விழுந்து, இரவு பகல் என்று செய்கிறாய்?

அவளை ஏமாற்றாமல் அவள் நினைத்த அனைத்து கேள்விகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, அறிவுரை மழை பொழிந்து, சிடு சிடுப்புடனே அந்த புகழ் பெற்ற ஹாலின் முன் பைக்கை நிறுத்தினான் அவன்...

அவள் இறங்கிக் கொள்ள,

“முடிச்சிட்டு, பத்திரமா வீட்டுக்கு போ....” என்று சொல்லிவிட்டு பைக்கை கிளப்பி சென்றான்.

ஏதோ அந்த அளவிற்காவது அவள் மீது அக்கறை இருக்கிறதே...!

வனை பொறுத்தவரை கதைகள் படிப்பவர்கள் வேற்று கிரகவாசிகள்! எழுதுபவர்கள் அதையும் விட மோசம்...!.

அவனுக்கு அது பிடிக்காது என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால் அவளுக்கு பிடித்திருக்கிறதே...!

அவளுக்கு அவன் செய்யும் வேலைத் துறை பிடிக்கவில்லை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னால், அவன் மாற்றிக் கொள்வானா என்ன?

மனைவியாக, அவர்களின் குழந்தைக்கு அம்மாவாக அவளால் முடிந்த அளவில் எல்லாம் சரியாக செய்த பின்பும் அவளுக்கு பிடித்த ஒன்றே ஒன்றை செய்யக் கூடாது என்று சொன்னால் எப்படி?

பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு, அங்கே இருந்த பெரிய பேனரை பார்த்தாள் அவள்...

இளம் எழுத்தாளர்களுக்கான பாராட்டு விழா, என்று கொட்டை எழுத்துக்களில் இருந்தது....

அதன் கீழே இருந்த ஐந்து பெயர்களில், அவளின் பெயரும் ஒன்று...!

பார்க்கும் போதே மனதினுள் ஒரு பரவசம்...!

ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவளுக்கு, மாயாஜால படங்களில் வருவது போல சுற்றி இருந்த உலகமே மாறி போனது போல இருந்தது...!

அங்கேயே நின்றபடி, அவளுக்கு பிடித்த அந்த உணர்வை ரசனையுடன் அனுபவித்தாள்...!

அவளின் கதைகள்...! அது அவளின் உலகம்...! அவள் உருவாக்கும் உலகம்....!

அவளின் எழுத்துக்கள் பிரம்மாவாக அனைத்தையும் படைக்கும் உலகம்....!

இங்கே அவளுக்கு பிடிக்காத விஷயங்கள் இல்லை...! எல்லாமே பிடித்ததாக தான் இருக்கும்...!

அன்புடன், நல்ல புரிதலுடன் காதலில் கசிந்துருகும் கணவன்... நல்லதையே பார்க்கும் உறவினர்கள்...

உண்மை நட்பை தவிர வேறு எதையும் நினைக்காத, எதிர்பார்க்காத நட்புக்கள்....!

நல்லவர்கள் மட்டுமே வாழும் உலகம்...!

அவளின் கற்பனை எழுத்துலகம் மன மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்க, அதே பரவச உணர்வுடனே நடந்து அந்த ஹாலின் உள்ளே சென்றாள்...!

தொடர்ந்த மணித்துளிகளில், பலரின் அறிமுகம்... வாழ்த்துக்கள்.... அங்கே அன்று பாராட்ட பட்ட ஐந்து பேரின் கதைகளை பற்றிய பேச்சுக்கள் என்று நேரம் சென்றது....

மெல்ல வாசகர் கேள்வி நேரம் வந்தது....

அவளின் முறையும் வந்து சேர்ந்தது....

“மேடம் உங்க கதைங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.... அதும் அதில வர கேரக்டர்ஸ் எல்லோரையும் ரொம்ப பிடிக்கும்.... பிரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ்ன்னு எல்லோரையும் அன்பானவங்களா, ஏன் மாமியார் எல்லோரையும் கூட ரொம்ப பிரென்ட்லியா நீங்க சொல்றது ரொம்ப பிடிக்கும்... அதும் உங்க கதைல வர ஹீரோ ஹீரோயின் சான்ஸே இல்லை! இந்த மாதிரி நீங்க எழுதுற கபில்ஸ் உங்க லைஃப்பை பேஸ் (base) செய்து வந்தவங்களா மேடம்? உங்க எழுத்தை பார்த்தால் ரொம்ப பர்சனலா ஃபீல் செய்து நீங்க எழுதுற மாதிரி இருக்கே... அப்போ கதைல வர ஹீரோ எல்லாம் உங்க கணவரை வைத்து நீங்க க்ரியேட் செய்தவங்களா?”

இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை....

திகைத்து நின்றிருந்தவள், அனைவரின் பார்வையும் தன் பக்கம் இருப்பதை உணர்ந்து, இல்லை என்று சொல்ல வாய் திறந்த நேரம், தொண்டையில் எதுவோ அடைத்தது...

மெல்ல மிடறு விழுங்கியவள்....

ஒருவரும் கவனிக்காத, கவனித்தாலும் புரியாத மர்ம மோனா லிசா புன்னகையை கொடுத்து விட்டு,

“ஆமாம், அவரை வச்சு நான் எழுதுறவங்க தான் என் ஹீரோஸ்... வேற யாரை வச்சு நான் எழுத முடியும்... நான் கதை எழுத பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கிறதே அவர் தான்... எல்லா விதத்திலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கிறவர் அவர் தான்...” என்றாள் பற்கள் தெரிய புன்னகைத்து.

அங்கே எழுந்த கரகோஷத்திற்கு ஒட்டாமல் அவளின் மனம் கசந்து வழிந்தது!

#திருமண வாழ்க்கை!!!!!

புகழ் பெற்ற ஓவியர் & விஞ்ஞானி லியனார்டோ டா வின்சி 16வது நூற்றாண்டில் வரைந்த மோனா லிசா ஓவியம் மிகவும் புகழ் பெற்றது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் புன்னகை மகிழ்ச்சியை பிரதிபலிக்கிறதா, சோகத்தை பிரதிபலிக்கிறதா என்பது இன்று வரை புரியாத புதிர். இதை பற்றி பல பேர் பலவிதமான ஆராய்ச்சிகளைக் கூட மேற்கொண்டுள்ளனர் :-)

This is (guest) entry #155 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - பிந்து வினோத்

PencilEvery time you read a story without adding a comment a writer's dream is silently shattered. Be kind and leave a comment here down

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Bindu Vinod

Add comment

Comments  
+1 # RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்Anusha Chillzee 2017-03-22 01:48
To be frank, I did not expect a story or even a theme like this from you Binds :-)

I read it in (sort of) disbelief.

Whatever be your reason for writing this, i am strongly against it.
The writings of Bindu I know and adore, gives positive vibe. Shows how you can see the positive aspect amongst gloom.
How you can win against all odds.

BTW, There's nothing wrong in this story. It is good.

Husband vendamnu sonnalum thanaku pidithathai seivenu storng aga irukum manaivi and Vendamnu sonnathai wife seithalum, avalai marakamal antah hall kitta drop seiyum husband irandu perume intriguing characters.

But no, no sad and sentimental stories from Binds :)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்Srijayanthi12 2017-03-19 11:31
Oru page kathaiyai padichuttu oru naal muzhukka feel panna vachuteenga... Very true... Pengal entha vishayam seithaalum athil yethenum aadhayam irunthaalthaan athu nalla vishayam illaiyendraal urupadaatha vishayamaagathan karuthapaduthu... Manavigalin thiramaiyai madhikkum kanavargal kidathavargal miga miga kodutha vaithavargal
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்Tamilthendral 2017-03-19 07:24
Avalin ezhthu avalukku mattumallathu ethanaiyo perukku magizhchiyai kodukkirathu.. Aval padaitha ulagathil ellorum nallavargal.. Ithai kadaculal kooda indru seyyamudiyathu.. Wife passion-ku thadaiya irppathai husband niruthanum.. Inga aval sonna mathiri avanoda velai avalukku pidikkalai enrathum avan mathipana? Athe mathiri wife kooda disturb pannama iruntha nalla irukkum..
Reply | Reply with quote | Quote
# **romba realistic**Usha A (Sharmi) 2017-03-18 03:14
As a writer aah naan kettta dialogues thaan... intha styla varra husband solrathu... Enna ithai husband sollalai.. But Ennoda friends and family members en parents kooda solli irukkanga!

They say that bcaz they care me so much.. that my health and family should not get into pblm bcaz of my passion...

True that Writing is a stress reliever... It is another world where we are the creators and we do WHAT WE WANT!!! Realistic story Binds!

Monalisa - Painting vanthu... niraya sithanthu pochu.. athai puthupikkiren antha painting ooda inner details change aagiduchunnu padicha ninaivu...
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்Jansi 2017-03-18 00:34
Super Bindu :clap:

Naan elutaren apdi yaaravatu sonna avanga kidda mutalla kedkapadra kelvi ituvaga taan irukum ... enna laabam? Enna varumaanam? apdi taan.

Storyla vara husband character realistic aa iruntuchu (y) (y)

அவளின் கதைகள்...! அது அவளின் உலகம்...! அவள் உருவாக்கும் உலகம்....!

அவளின் எழுத்துக்கள் பிரம்மாவாக அனைத்தையும் படைக்கும் உலகம்....!

இங்கே அவளுக்கு பிடிக்காத விஷயங்கள் இல்லை...! எல்லாமே பிடித்ததாக தான் இருக்கும்...!

அன்புடன், நல்ல புரிதலுடன் காதலில் கசிந்துருகும் கணவன்... நல்லதையே பார்க்கும் உறவினர்கள்...

உண்மை நட்பை தவிர வேறு எதையும் நினைக்காத, எதிர்பார்க்காத நட்புக்கள்....!

நல்லவர்கள் மட்டுமே வாழும் உலகம்...! :) (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்Nanthini 2017-03-17 22:53
kathai nandraga irukku pa :-)
Compromise illamal vazhkai illai. Athe pola mostly pengal inge varum 'avalai' pola perumbalana samyangalil kanavanai vittu kodupathillai. Very true.

Kanavan -Manaivi uravil communication enbathu romba mukkiyam. Athu illatha pothu antha uravin actual goodness teriyamal poi viduthu.

Short story, so oru pakkam than paarka mudiyuthu. Innoru pakkam namaku theriyamal pochu. May be avarudaiya wife is worth than it appadinum antha husband ninaichirukalam ;-)
Positive aga eduthupome :D

But as a friend, I should say, it's a matured story from you :)
And I am happy to see you are trying new arenas also.
That's a good sign keep it up.

Antha kathai en ulagam paguthi, arumai :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்Aarthe 2017-03-17 21:01
Superb way of narrating ma'am :clap:
Vaazhkai la Pala per Mona Lisa oviyam madhiri puriyadha pudhir ah dhaan makkaluku kaatchi tharanga. Adhuku pinaadi irukara vali'o sandhoshamo avangalukku mattum dhaan theriyum :-?
You nailed it in a very simple way ma'am :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்sivagangavathi 2017-03-17 20:15
Oru painting vachu oru unarvu poorvana story,simply super ma'am . Moneliza oda smile happya illa sogamaanadhaanu ennaku theryiala but oneae onu mattum theriyuthu,unarvukalai kattupatuthi athai matravaruku theriyaamal poosi maraikum men naghai.athna unarvu happy,sad,anger,ippadi ethu vendumaanalum irukalam!intha storyla varu kathai mantharum thanoda unarvai kadupathi marikirar,avarin unarvu namku purikirathu,moneliza odathuthaan puriyavillai.
மாய உலகத்தைப் படைத்தவள்,அதில் வாழ்பவள்,கடைசியில் அந்த மாய உலகத்தின் சிறப்பைக் காப்பதற்காக ஒரு மாயை மற்றவரிடம் தோற்றுவிக்கிறாள்.மாயத்தைக் காப்பதற்கும் ஒரு மாயமான முகமூடி தேவைப்படுகின்றது என்பதுதான் உண்மை!இதுதான் விரக்தியின் உச்சம்! அருமை. வாழ்த்துக்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்Adharv 2017-03-17 19:32
அவளின் கதைகள்….அது அவளின் உலகம்…அவள் உருவாக்கும் உலகம் :hatsoff: Bindu Ma'am. No comments. :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்madhumathi9 2017-03-17 19:27
Super story. Monalisa ovithai vaithu oru kathai uruvaakivitteergalr arumai. (y) monalisa oviyam paarppatharkku sogathil sirippathu polthaan irukkirathu. But idhai eppadi aaraychi panna mudiyum. Therinthaal solla mudiyuma? :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்rspreethi 2017-03-17 19:15
Nice story mam... Yenaku indha story la pidichadhu ungalukanadha manaiviya n ammava niraivethidren yenakana virupatha naa pathukaren gara thelivu... Nicchayama sollanumna avanga amaidhiyana bt urudhiyana character pidichuru... Yeppavum sudu vaarthai kidikumbodhu yen nu vidama irukangalea... (y)
Thn vizha arangula nuzhajadhum avangaloda unarva express pannirukadhu arumai... Andha places la avanga feel ah yennala unara mudinjudhu... Sooo nice mam...
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 04 Apr 2017 16:43 by Thenmozhi #46650
Thenmozhi's Avatar
Friends,
We have started sending winner notification e-mails to all.

If your story was published as part of contest and if you haven't received an email from us by next Wednesday (12th April 2017) please follow up with us at admin @chillzee.in

Thank you very much.
Posted: 23 Mar 2017 21:51 by Thenmozhi #46307
Thenmozhi's Avatar
I guess www.chillzee.in/forum/5-books/926-chillz...2016?start=200#27740 ithai solringanu!

Thanks for refreshing my memory :-)
Posted: 23 Mar 2017 21:37 by ManoRamesh #46303
ManoRamesh's Avatar
Hi mam last yr forum poi parthu vanthen. last yr GV lam anuppa arambicha piragu same forum la neega intha personal fav qus kettu iruthenga. so there is time for that. perhaps i will share my personal fav tomorrow.ManoRamesh wrote:
thani forum ah start pannangala illa ithulaiye after a week fav story qus ah kettanganu ninaikaren from team than yaarunu theriyala.Thenmozhi wrote:
ManoRamesh wrote:
team last yr readers oda favorite short story ethunu oru discussion pochu. intha yr irukka.
ppadi illana intha forum la naan oru share pannanum

Entha contextnu enaku muzhusa puriyalai Mano. Last year yar thread start seitahthunu enaku ninaivilai. If you would like to start a new thread thread feel free to do so :)
If you want to share it here you can share it here too :)
Posted: 23 Mar 2017 20:27 by ManoRamesh #46293
ManoRamesh's Avatar
thani forum ah start pannangala illa ithulaiye after a week fav story qus ah kettanganu ninaikaren from team than yaarunu theriyala.Thenmozhi wrote:
ManoRamesh wrote:
team last yr readers oda favorite short story ethunu oru discussion pochu. intha yr irukka.
ppadi illana intha forum la naan oru share pannanum

Entha contextnu enaku muzhusa puriyalai Mano. Last year yar thread start seitahthunu enaku ninaivilai. If you would like to start a new thread thread feel free to do so :)
If you want to share it here you can share it here too :)
Posted: 23 Mar 2017 17:31 by Thenmozhi #46266
Thenmozhi's Avatar
Friends,
Ellorukum contest result patriya e-mail notification April first week pola anupuvom.

Sorry athai result page -la mention seiyamal vitutom.

I will update it also. But ungaluku terinjirukatumnu solli vaikiren :-)

If you have any questions, feel free to reach us @ admin @ chillzee.in.

Cheers.
IPL 2017 @ Chillzee

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
24
MKK
VPS

PPN

NTES
25
NS
IPN

PEMP

PEPPV
26
MK
NEK

NAU

-
27
-
NA

VKV

-
28
YMVI
-

AEOM

-

6am


1pm

8pm
01
MKK
VPS

TIUU

NTES
02
UNES
IPN

Kir

PEPPV
03
SPK
NEK

KG

-
04
SV
-


VKV

IEIK
05
VS
-


Ame

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section