(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 156 - கன்னத்தில் ஒன்னே ஒன்னு... - பிந்து வினோத்

This is (guest) entry #156 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - பிந்து வினோத்

ளார்...!

திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலில் சிவாஜிகணேசன் கைகளை அசைத்ததும் உலகமே அசையாமல் நின்று போவதாக ஒரு காட்சி வரும். அதே தான் இங்கேயும் நடந்தது.

அந்த ‘அறை’யுடன் அனைத்தும் பிரீஸ் ஆகி போய் நின்றது!

பேப்பர் படித்துக் கொண்டிருந்த செவ்வந்தி நம்ப முடியாமல் விழிகளை விரித்து பார்த்தபடி இருந்தாள்.

காலேஜுக்கு கிளம்பிக் கொண்டிருந்த கீதா, வாயில் இருந்த இட்லியுடன் ஸ்டன் ஆகி இருந்தாள்.

அடி வாங்கிய தியாகு (எ) தியாகராஜன் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தான். அவனின் கன்னம் சிவந்து மின்னிக் கொண்டிருந்தது.

இந்த ‘ஃப்ரீஸ் எபக்ட்’டிற்கு காரணமான அறையை வழங்கிய கீர்த்தி (எ) கிருத்திகா அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்தாள்.

அறைந்த அதே கை இப்போது நடுங்கிக் கொண்டிருந்தது.

நடந்ததை அவளால் இன்னமும் நம்ப கூட முடியவில்லை.

எத்தனையோ முறை மனதினுள் நினைத்திருக்கிறாள்...! ஆனால் நிஜமாக அடிப்பது???

தியாகுவின் கோபம் மின்னிய கண்களை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது. அவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அவளின் இதயம் தன் துடிப்பை ஸ்கிப் செய்தது!

என்ன செய்ய போகிறான்? பதிலுக்கு அறைய போகிறானா???

மனதினில் கிலியுடன் அவள் நிற்க,

“டேய் கிளம்பலாமா? ரொம்ப டைம் ஆச்சு” என்ற ஷிவாவின் குரல் கேட்டது.

ஷிவா தியாகுவின் நண்பன் & பார்ட்னர்.

ஷிவாவின் குரலில் நின்ற தியாகு, மீண்டும் ஒருமுறை கீர்த்தியை முறைத்து விட்டு,

“போலாம்டா... நான் ரெடி...” என்று சொல்லி விட்டு நடந்தான்.

தியாகு கிளம்பி சென்ற பின்பு தான் கீர்த்தியால் மூச்சே விட முடிந்தது.

அவள் மட்டுமல்லாமல் செவ்வந்தி, கீதா இருவரும் கூட அப்போது தான் அசையவே செய்தார்கள்!

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கீர்த்தியின் முகத்தை பார்த்து செவ்வந்திக்கு என்ன தோன்றியதோ,

“இதை நான் அவனோட சின்ன வயசிலேயே செய்திருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்....” என்றாள் கீர்த்தியை தேற்றும் எண்ணத்துடன்.

செவ்வந்தியின் மூத்த மகன் தியாகு, இளைய மகள் கீதா. தியாகுவின் மனைவி கீர்த்தி. இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற போகிறது.

தியாகுவிடம் பொதுவான கெட்ட பழக்கங்கள் இல்லை என்றாலும் ‘ம்’ எனும் முன் கோபப்படும் முன்கோபம் வெகு அதிகமாக இருந்தது.

அவன் எப்போது திட்டுவான், எதற்கு கத்துவான் என அனுமானிப்பது, வானிலை ஆராய்ச்சியாளர்களின் வேலையை விட கடினமான ஒன்று. கிட்டத்தட்ட முடியாத ஒன்றும் கூட.

நடுத்தர குடும்பம் என்றாலும், அம்மா, அப்பா, அண்ணன் என்ற பாச பிணைப்பில் வளர்ந்திருந்த கீர்த்திக்கு கணவனின் இந்த கோப முகத்தை அனுசரித்து நடப்பது ரொம்பவே கடினமானதாக இருந்தது.

இது செய்தால் அவனுக்கு பிடிக்காது, இப்படி இருந்தால் பிடிக்காது என்றால் பரவாயில்லை. இவன் கணிக்கவே முடியாத வகையில் இருந்தான்... எதற்கெடுத்தாலும் கத்துவான்.... எரிந்து விழுவான்...

அவனின் கோபம் மற்றவரை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை எல்லாம் பற்றி அவன் கவலை பட்டதாக தெரியவே இல்லை...!

அம்மா, தங்கை, மனைவி என்று பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் ஒரே / அதே ட்ரீட்மென்ட் தான்!

அவனின் கோப முகத்தை சகிக்க இயலாமல் பலமுறை மனதினுள் சப்பென்று ஒன்று அறைந்தால் என்ன என்று யோசித்திருக்கிறாள் கீர்த்தி... ஆனால் அது நிஜத்தில் நடக்குமென்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.

இன்று காலையில் அவன் வந்த போது உணவு ரெடியாக இல்லையென அவன்  காட்டுக் கத்தல் போட.... ஏற்கனவே காலையிலேயே கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த சூரியனின் வெப்பத்தை அட்ஜஸ்ட் செய்து சமையலறையில் நின்றிருந்தவளுக்கும் கோபம் வர... நிஜமாகவே சப்பென்று அறைந்திருந்தாள்.

நீ ஒன்னும் கவலை படாதே கீர்த்தி... அவன் கிட்ட நான் பேசுறேன். பயப்படாமல் இரு...” என்றாள் செவ்வந்தி.

கீதாவும் அவளுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் புன்னகைக்க, இருவருக்கும் பொதுவாக தலை அசைத்து வைத்தாள் கீர்த்தி..

ஆனாலும் மனதில் இருக்கும் பயம் சற்றும் குறையவில்லை!

ஒன்றும் இலலாததிற்கே அந்த பாடு படுத்துபவன், இப்போது என்ன செய்ய போகிறான்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.