(Reading time: 6 - 12 minutes)

ந்த டாப்பிக்லேயே இன்னும் ஒன்னு சொல்லனும் :-) பேமிலி பிரென்ட்ஸ்ன்னு ஒரு சர்க்கிள்ல இருந்து கதை வழியாக கிடைக்கும் எக்ஸ்ட்ரா ஸ்பாட்லைட் :-) இதை ஹாண்டில் செய்ய நமக்கு வேண்டிய நல்ல துணை.

என்னை பொறுத்த வரை நான் ரோஜாவை தாலாட்டும் தென்றல் ஹீரோயின் அளவிற்கு இல்லை என்றாலும் ஓவர் pampered & spoilt தான் :p

ஆனால் in ஜெனரல், என்ன செல்லம் கொஞ்சினாலும் தேவையானப் போது என் பேமிலி / பிரென்ட்ஸ் யாராவது ஒருத்தர் நான் தப்பா ஏதாவது செய்தால் இது சரி இல்லைன்னு எனக்கு நேரா எடுத்து சொல்லிடுவாங்க :-)

ஒரு எக்சாம்பிள் சொல்றேன்.

நான் சொன்ன இன்னொரு சைட் வழியாக தெரிந்த ஒருத்தங்க chillzeeல என்னோட ஒரு கதை படிச்சிட்டு, நல்லா இருந்ததுன்னு சொல்லிட்டு ‘நான் உங்க ஃபேன்’ அப்படின்னு சொன்னாங்க ;-)

உங்க ஃபேன்னு ஒருத்தங்க சொல்வதை முதல் முறை கேட்டப்போ அப்படியே ஜில்லுன்னு இருந்தது :p

உலகத்திலேயே என்னவோ நான் மட்டும் தான ரைட்டர் எனபது மாதிரியான ஒரு பீல் :D ஹி ஹி !!!

வழக்கம் போல இதை நான் என் ஹஸ்பன்ட் கிட்ட சொல்ல, அவரும் சந்தோஷப் பட்டார் ஆனால் “don’t let this get into your head” அப்படின்னு சொன்னார்.

அந்த சமயத்தில் அது ஆன்டி-க்ளைமேக்ஸ் ஆக தோன்றினாலும் ;-) யோசித்து பார்த்தால் அவர் சொல்வது புரிந்தது :-)

அது முதல் யார் எப்போ உங்க ஃபேன்னு சொன்னாலும். ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நான் எழுதுறதை படிச்சு என்ஜாய் மட்டும் செய்ங்கன்னு சொல்லிடுவேன். இன்று வரை அப்படியே தான் ;-)

கதை எழுதுவதன் கூடவே வரும் இது போன்ற சின்ன சின்ன திட்-பிட்ஸ் கூட ரசிக்க கூடியவை தான் :-)

சென்ற வாரம் நாம பாதியில விட்ட கேள்வி “ஷார்ட்டா என்றாலும் இப்படி நீங்க கதையை சொன்னால் யாராவது காபி அடிச்சிற மாட்டாங்களான்னு” ஒரு தோழி கேட்ட கேள்வி.

அடிக்கலாம்...!

ஆனால் அப்படி காபி அடிக்குறவங்க, நான் சம்மரி சொல்லாமல் கதையா எழுதினாலும் கூட காபி அடிக்க தான் செய்வாங்க.

புக்கா போட்டாலும் காபி அடிப்பாங்க!

ஏன்னா இது அவங்களோட ஹார்ட் & மைன்ட் சம்பந்தப்பட்ட விஷயம். மற்றபடி நாம ஒன்றும் செய்ய முடியாது.

இதுக்காக பயந்து நான் ஏன் எல்லாத்தையும் என் மண்டைக்குள்ளேயே போட்டு உருட்டிக்கிட்டு இருக்கிறது!

ஜஸ்ட் இக்னோர் தான் ;-)

Chillzee ஆரம்ப நாட்கள் முதலே எனக்கு familiar ஆன ஒரு சைட். டீம் எல்லோரையும் எனக்கு தெரியும். சில பேர் என் க்ளோஸ் பிரெண்ட்ஸும் கூட. ப்ரெண்ட்ஷிப் என்ற எல்லையை தாண்டி professional அளவில் கூட எங்க ரிலேஷன்ஷிப் இருக்கு.

இது நிறைய பேருக்கு தெரிந்த விஷயமும் கூட :-)

அப்படி டீம் மக்கள் பிரெண்ட் ஆக இருப்பது பெரிய அட்வான்டேஜ் என்று நிறைய பேர் நினைக்குறாங்க :-)

நீங்களும் அப்படி நினைத்திருக்கீங்களா???

ஹு ஹும்!!!!! Re-think about it!

இதை பற்றி அடுத்த வாரம் பேசுவோம். கூடவே கதை பற்றியும் பேசுவோம் :-)

டாட்டா சொல்லும் முன் ஒரு சஸ்பென்ஸ் ப்ரேக் செய்திடுறேன். நாலு வருடம் ஆன பின்பும் இன்று வரை அந்த பாப்புலர் மேகசினில் இருந்து ஒரு பதிலும் இல்லை :p :D

 

Naanum en kathaiyum - 06

Naanum en kathaiyum - 08

{kunena_discuss:1105}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.