(Reading time: 8 - 15 minutes)

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கடத்தி நரபலி போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மற்ற கடத்தல்களைக் காட்டிலும், இதற்காக கடத்தப்படுவது குறைவுதான்.

10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்திய கடத்தல்கள் பெரும்பாலும், பாலியல் தொழிலுக்காகத் தான். இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளில் செயல்படும் பாலியல் தொழிலுக்கும், ஆபாச படங்களை எடுக்கவும் பயன்படுத்து கிறார்கள்.

வயது வரம்பின்றி உடலுறுப்பு திருட்டுக்காகவும் பெருமளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

தொழிலதிபர்களின் குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் கும்பலும் உண்டு. சென்னை `ஈசிஆர்', `ஓஎம்ஆர்' மற்றும் தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஏராளமான ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவும், குழந்தைகளைக் கடத்தி காரியத்தை சாதிக்கும் கும்பல்கள் ஏராளமாகச் செயல்படுகின்றன.

குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகளை சிறுவயதிலேயே கடத்திவிடுவதால், அவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அடையாளம் காண முடியா மலும், தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல வாழப் பழகிவிடுகின்றனர்’’ என்கிறார் தேவநேயன்.

இன்னும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவ தற்கான அறிவுரைகள், குழந்தை கடத்தலை தடுப்பதற்கான அரசு நிர்வாக அமைப்பு பரிந்துரை, குழந்தைகள் கடத்தப்பட்டால், தாமதிக்காமல் புகார் அளிக்கவேண்டிய தளங்கள், தத்தெடுப்புக்கான சட்ட விதிமுறைகள், குழந்தை கடத்தல் கும்பலுக்கான சட்டப்பூர்வ தண்டனை...

குழந்தை கடத்தலில் தமிழகம்..!

மெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கொல்கத்தா, பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கும், தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் போன்ற நகரங்களுக்கும் குழந்தைகள் அதிகமாக கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தலில் மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த குழந்தை கடத்தல்கள்:

2014 - 441

2015 - 656

2016 (முதல் மூன்று மாதங்களில்) - 58

கடத்தல் டார்கெட் இடங்கள்!

ஒரு நாளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் அரசு மருத்துவமனை களில்தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. தவிர, ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில், கடத்தல் கும்பல் டீமாக செயல்பட்டு பிள்ளைகளைக் கடத்துகிறார்கள். தற்போது கோடை வாசஸ்தலங்கள்தான் அவர்களின் டார்கெட் இடங்கள். இந்தச் சமயத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் தங்களின் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கடத்தல் நெட்வொர்க்!

கடத்தப்பட்ட ஒரு குழந்தை, எப்படி கைமாற்றப்படுகிறது என்பதை, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டபோது, இதயத் துடிப்பு அதிகரித்தது. 

‘‘கடத்தப்பட்ட ஒரு குழந்தையானது, ஒரு மணி நேரத்துக்குள் அடுத்த குரூப்புக்கு கைமாற்றப்படும். அடுத்து சில மணி நேரங்களுக்குள் மாநில எல்லையைக் கடந்து சென்றுவிடும். அடுத்தடுத்து பல குரூப்களுக்கு கைமாற்றப்பட்டு, பல மணி நேரங்களில் மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்படும். அந்த மெயின் கும்பல், பெரும்பாலும் மும்பை, கொல்கத்தா நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த கடத்தல் பின்னணியில், பல பெரிய வெளிநாட்டு நெட்வொர்க் செயல்படுகின்றன.

ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையும் அவரவர் வயது, அழகு, உடல் அமைப்பைப் பொறுத்து ரேட் ஃபிக்ஸ் செய்யப்படுகிறார்கள். ஆயிரத்தில் இருந்து பல லட்சம்வரை இந்த ரேட் மாறுபடும். தொழிலதிபர்களின் குழந்தைகளுக்கு, கோடியில் ரேட் பேரம் நடக்கும். கடத்தப்பட்ட எந்த ஒரு குழந்தையையும், ஓராண்டுக்கு மேல் ஒரு இடத்தில் வைத்திருக்க மாட்டார்கள். வெளிநாடுகளுக்குக் குழந்தைகளை கடத்திவிட்டால், 80 - 90% மீட்பது கடினம். இந்த குழந்தைகள் கடத்தல் கும்பலைப் பிடிப்பது அரிதான செயல். அப்படியே ஒரு குரூப் போலீஸிடம் சிக்கினாலும், அடுத்த குரூப்பை காட்டிக்கொடுக்கவே மாட்டார்கள். அதனால்தான் இதுவரை எந்த நெட்வொர்க்கும் மாட்டவில்லை’’ என்கிறார் நண்பர்.

அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர்நந்தினி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.