(Reading time: 8 - 15 minutes)

Scraped from the web - கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்! - நந்தினி

Smuggling children

குழந்தைக் கடத்தல்... எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்!

சில வருடங்களுக்கு முன் குழந்தைக் கடத்தல் பின்னணியை மனம் அதிரச் சொன்ன ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் நினைவிருக்கலாம். சில வாரங் களுக்கு முன், நடிகர் பார்த்திபன் சென்னை காவல் ஆணையரிடம் குழந்தைக் கடத்தல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்; குழந்தைகள் கடத்தலுக்கு எதிராக, ‘அபயம்’ அமைப்பு உருவானது. தவிர, ஏராளமான தன்னார்வ அமைப்புகள் இந்தப் பிரச்னைக்காக குரல் கொடுத்துவருகின்றன. காரணம், அந்தளவுக்குப் பரவலாக உங்கள் ஊர்களிலும், தெருக்களிலும் ஊடுருவியுள்ளது இந்த நெட்வொர்க். அதன் மாயக்கரங்களில் எந்தக் குழந்தையும் சிக்கலாம் என்பதே நிலை... உங்கள் குழந்தை உட்பட!

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள். தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும்  50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

குழந்தைகளை யார் கடத்துகிறார்கள்... எப்படிக் கடத்துகிறார்கள்... எதற்காக கடத்துகிறார்கள்? அதிர்ச்சியளிக்கும் பின்னணியை எடுத்துரைத்தார், குழந்தைகள் உரிமைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் ஆர்.தேவநேயன்.

எந்த வீட்டுக் குழந்தையும் கடத்தப்படலாம்!

‘‘குழந்தைகள் கடத்தல் இன்றைய சூழலில் மிக முக்கியமான பிரச்னையாக, பரவலான குற்றமாக மாறிவிட்டது என்பது சுடும் நிஜம். பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் குடும்பத்துப் பிள்ளைகளும், அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளும்தான் அதிகமாகக் கடத்தப்படுகிறார்கள். தவிர, நடுத்தர வர்க்கத்தில் இருந்து தொழிலதிபர் வீட்டுக் குழந்தைகள் வரை யாரும் கடத்தப்படலாம் என்பதும் நிதர்சனம். 

எப்படிக் கடத்தப்படுகிறார்கள்?

பிளாட்ஃபாரக் குழந்தைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில், பெற்றோர் அயர்ந்து தூங்கும்போது லாகவ மாகக் கடத்தப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதில் அங்கு பணியாற்றும் செவிலியர்களில் இருந்து கடைநிலை ஊழியர்கள்வரை பலர் உடந்தையாக இருக்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பத்தினர், தொழிலதிபர்கள் வீட்டுக் குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டுவிட்டால்... அந்தக் கும்பல் அக்குழந்தையின் நடமாட்டங்களை பல மாதங்களாகக் கண்காணிக்கிறது. அது எப்போது பள்ளிக்குச் செல்கிறது, திரும்புகிறது, அழைத்துச் செல்பவர் யார், குழந்தை எப்போது தனியாக இருக்கும், விடுமுறை நாட்களில் எங்கு விளையாடச் செல்லும் என்று தெரிந்துகொண்டு, ஒருவரை இயல்பாக அந்தக் குழந்தையுடன் பழகவிட்டு, தகுந்த நேரத்தில் கடத்திவிடுகிறார்கள்.

ஒரு குழந்தை கடத்தப்பட்ட செய்தி வருகிறதே தவிர, அது மீட்கப்பட்டதா என்ற அப்டேட்கள் பெரும்பாலும் வருவதில்லை. கடத்தப்படும் 100 குழந்தைகளில், 10 - 20 குழந்தைகள்தான் நல்ல நிலை யிலோ, சேதாரங்களுடனோ மீட்கப் படுகின்றனர்.  மற்ற குழந்தைகளின் நிலை அறியப்படாதது. கடத்தல் காரர்களை அடையாளம் கண்டு விடுவதால், கடத்தப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டுவிடுகின்றனர்.

எதற்காகக் கடத்துகிறார்கள் குழந்தைகளை?

சட்டத்துக்குப் புறம்பான முறையில் தத்தெடுத்தல், பிச்சை எடுத்தல், குழந்தை தொழி லாளர்கள், பாலியல் குற்றங்கள், உடலுறுப்பு திருட்டு, நரபலி என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகளை, தங்கள் பிள்ளை கள் போல மடியில் கட்டிக்கொண்டு பிச்சை எடுக்கிறது ஒரு கும்பல். ஏராளமான சிக்னல்களில் இந்தக் கும்பல் பெருகிக்கொண்டே வருகிறது. அந்தக் குழந்தைகளுக்கு போதையேற்றும் மருந்தைக் கொடுத்து, எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருப்பார்கள். மயங்கிய குழந்தையைச் சுமந்தபடி, கையேந்தி, பொதுமக்களின் பரிதாபத்தை தூண்டி, பிச்சையெடுப்பது இந்த கும்பலின் தொழில். ஒரு வாரம் சோழிங்கநல்லூர், அடுத்த வாரம் தாம்பரம் என இடம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு தொடர்ச்சியான நெட்வொர்க்.

பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சட்டத்துக்கு புறம்பான தத்தெடுத்தலுக்காகவும் கடத்தப் படுகின்றனர். குறிப்பாக, இந்தத் தேவையில் ஆண் குழந்தைகளுக்குப் பெரிய டிமாண்ட் இருக்கிறது.

கடத்தப்பட்ட 5 - 10 வயதுடைய குழந்தைகளை மாநில எல்லைகளில் சட்ட விரோத செயல்பாடுகளில் பயன்படுத்துகின்றனர். அதாவது, மாநில எல்லை களில் உள்ள சோதனைகளில் இருந்து தப்பிக்க, கடத்தப் பட்ட குழந்தைகளின் உடைகளுக்குள் போதை பொருட்களை வைத்து கடத்து கின்றனர். இதே வயதுடைய குழந்தைகளைக் கடத்தி, கொத்தடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.