Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி - 5.0 out of 5 based on 1 vote

படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி

Mirror

ந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.

அடிக்கடி அதைப் பார்ப்பார்.

பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!

‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”

பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?

“அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”

எத்துணை ஆழமான உவமை இது!

இந்த உவமையில் என்ன இருக்கிறது?

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

“ஆமாம்”

“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

“கிரேட்! அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?

“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”

“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்தத அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்.

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் ஜான்சி

 

About the Author

Jansi

Add comment

Comments  
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிudhi 2017-03-10 21:03
super
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிsivagangavathi 2017-03-10 20:30
Nice sharing ma'am ...kathaiyil varupavaruku mattum illai,enakum ini kannadi paarthal intha sinthanaikalae varum..Thank u for this sharing ...
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிChithra V 2017-03-10 18:31
Good sharing jansi (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிNaseema Arif 2017-03-10 17:59
Good one jansi (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிvathsala r 2017-03-10 11:04
wow very nice
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிmadhumathi9 2017-03-10 09:50
Padithathum appadiye manathil pathigirathu. :clap: .Tqvm 4 this info
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிTamilthendral 2017-03-10 04:32
Nalla karuthu (y)
Thanks Jansi
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கண்ணாடிப் பாடம்! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிThenmozhi 2017-03-10 01:34
Good message Jansi (y) Thanks for sharing :)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 16 Aug 2017 06:43 by Chillzee Team #48189
Chillzee Team's Avatar
பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலம் இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்படலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...B3%E0%AE%AE%E0%AF%8D
Posted: 26 Jun 2017 02:24 by Chillzee Team #47731
Chillzee Team's Avatar
ஏலியன்ஸ் - இதைப் பற்றி அறிந்துகொள்ள முற்படாதவர்களே இல்லை எனலாம். வருடத்துக்குக் குறைந்தது 3 ஹாலிவுட் படங்களாவது இதைக் கருவாகக் கொண்டு வெளிவந்து வெற்றியும் பெற்றுவிடும். "ஏலியன்கள் இருக்கிறார்கள், ஆதாரம் இதோ!" என்று கதறும் அனைத்து வீடியோக்களும் ஏகப்பட்ட வீயூஸ் மற்றும் கமென்ட்ஸ் பெற்று வைரலாகும். இன்றைய காலகட்டத்தில், ஏலியன்களை வைத்து மார்க்கெட் செய்தால், எதையும் மக்களிடையே கொண்டு சேர்த்துவிட முடியும், கல்லாகட்டிவிடவும் முடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

ஆனால், அறிவியல்பூர்வமாக இதை அணுகினால், ஒற்றைக் கேள்விதான் எப்போதும் ஒலிக்கிறது.
"நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாகத்தான் இருக்கிறோமோ?"

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...enna-solgirathu-nasa
Posted: 18 Jun 2017 19:35 by Chillzee Team #47669
Chillzee Team's Avatar
“என்னது? கடலுக்குள்ளே போஸ்ட்பாக்ஸா..? தண்ணிக்குள்ள போய் எப்படிய்யா லெட்டர் போஸ்ட் பண்ண முடியும்”னு தானே யோசிக்கிறீங்க. அட பண்ணலாம்ங்க.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...AE%E0%AE%A4%E0%AE%BF
Posted: 10 Jun 2017 23:09 by Chillzee Team #47599
Chillzee Team's Avatar
பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...aathi-yosi-vasumathi
Posted: 05 Jun 2017 07:00 by Chillzee Team #47538
Chillzee Team's Avatar
உங்களுக்கு 25 வயசு ஆயிடுச்சா ? இந்த வயசுல சில விஷயங்களை செய்யாமல் மிஸ் பண்ணிட்டீங்கன்னா அப்புறம் எதிர்காலத்துல இதை நாம செய்யவே இல்லையேன்னு வருத்தப்படுவீங்க. அதனால இதுதான் சரியான டைம். வாழ்க்கை ரொம்ப சின்னது, அடுத்த நொடி என்ன நடக்கப்போகுதுனு தெரியாம இருக்கறதுதான் சுவராஸ்யமே. அதுல இந்த 10 விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருக்கீங்களான்னு செக் பண்ணுங்க பார்ப்போம்...

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...laina-eppo-vasumathi
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

M


AN

Eve
07
MKK
-

TIUU

NTES
08
UNES
IPN

MOVPIP

PEPPV
09
SPK
PM

-

-
10
SV
-


VKV

IEIK
11
VS
-


Ame

MvM
12



TPEP



M 


AN

Eve
14
MKK
-

SIP

NTES
15
NS
IPN

OTEN

PEPPV
16
SaSi
PM

NAU

YMVI
17
MNP
NA

VKV

-
18
-
-

AEOM

MvM
19



TPEP


* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top