Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - கோடீஸ்வரனின் தலைவலி! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி - 5.0 out of 5 based on 1 vote

படித்ததில் பிடித்தது - கோடீஸ்வரனின் தலைவலி! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி

Change You

ரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.

அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.

பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார்.

அவர் பணக்காரனை வந்து பார்த்தார்.

பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.

அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.

தலைவலி குணமாகி விட்டது.

சன்னியாசி கூறியது சரிதான்.

உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது.

ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.

சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார்.

வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது.

காரணம் கேட்டார்.

அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.

வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு.

“நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி.

“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

ம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.

அது சாத்தியமல்ல.

மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் ஜான்சி

 

About the Author

Jansi

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: படித்ததில் பிடித்தது - கோடீஸ்வரனின் தலைவலி! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிAarthe 2017-03-14 08:09
True fact!
Thanks for the share ma'am :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கோடீஸ்வரனின் தலைவலி! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிTamilthendral 2017-03-14 01:27
Grt messege in a short story (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கோடீஸ்வரனின் தலைவலி! (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிThenmozhi 2017-03-14 00:08
Nalla karuthu Jansi (y)

Unmaiyum kuda (y)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 03 Oct 2017 11:40
யார் யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும்

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...iraivanukku-theriyum
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 27 Sep 2017 12:09
படித்ததில் பிடித்தது - கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா?

நாம் கழிவறைக்கு சென்று வந்ததும், உடனடியாக கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவி விடுகிறோம். ஏனென்றால், கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் நமக்குள் இருக்கிறது. ஆனால் கழிப்பறையை விட அசுத்தமானதும், அபாயகரமானதும் ஆன சில பொருட்கள் உள்ளன அவை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...utkal-enna-theriyuma
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 26 Sep 2017 13:07
படித்ததில் பிடித்தது - பெண்களை புரிந்துக் கொள்ளலாம் வாங்க
பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.
பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...inthu-kollalam-vanga
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Sep 2017 12:29
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...il-lakshmi-thanguval
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 16 Aug 2017 06:43
பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலம் இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்படலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...B3%E0%AE%AE%E0%AF%8D
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
MINN

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top