(Reading time: 4 - 7 minutes)

படித்ததில் பிடித்தது - இங்கேயெல்லாம் கடலுக்கு அடியில லெட்டர் போஸ்ட் பண்ணலாம்..!! - வசுமதி

ன்னது? கடலுக்குள்ளே போஸ்ட்பாக்ஸா..? தண்ணிக்குள்ள போய் எப்படிய்யா லெட்டர் போஸ்ட் பண்ண முடியும்”னு தானே யோசிக்கிறீங்க. அட பண்ணலாம்ங்க.

"தண்ணிக்கு அடியில யாரு போஸ்ட்பாக்ஸ் வெச்சிருக்காங்க?”

வெச்சிருக்காங்களே... இந்த ஊர்ல எல்லாம் வெச்சிருக்காங்களே!

“அப்படி எந்த ஊர்லய்யா தண்ணிக்கு அடியில போஸ்ட்பாக்ஸ் வெச்சிருக்காங்க?”

தண்ணீருக்கு அடியில் போஸ்ட் பாக்ஸ் இருக்கிற ஊர்களைத் தெரிஞ்சிக்கணுமா..? வாங்க பார்க்கலாம்...

சுசாமி, ஜப்பான் (Susami, Japan)

Mail

என்னது சுனாமியா? அட சுனாமி இல்லைங்க, சுசாமி! இது ஜப்பான்ல இருக்குற ஒரு கடற்கரைப் பகுதி. இந்தக் கடலுக்கு அடியில 1999-ம் ஆண்டு போஸ்ட்பாக்ஸ்  வெச்சாங்க. இதுவரைக்கும்  சுமார் 32,000 கடிதங்கள் இந்த போஸ்ட்பாக்ஸ்ல போடப்பட்டிருக்காம். இந்த போஸ்ட்பாக்ஸை கடலுக்கு நடுவுல 10 மீட்டர் ஆழத்துல வெச்சிருக்காங்க. இதுதான் மிகவும் ஆழமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் போஸ்ட் பாக்ஸ்னு 2002-ம் ஆண்டு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருக்குதுனா பார்த்துக்கோங்களேன். கடலுக்கு நடுவுல தபால்பெட்டி வைக்கலாம்ங்கிற ஐடியாவைக் கொடுத்தது, அப்போ அந்த நகரத்தோட போஸ்ட் மாஸ்டர் டொஷிஹிகோ மட்சுமோடோ. (பேர் புரியலைல. எனக்கும்தான் புரியல) வழக்கமா மூக்கு பொடைப்பா இருந்தாத்தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணும். ஆனா, ஜப்பான்காரங்களுக்கு மூக்கு சப்பையால்ல இருக்கும்?

ஹைட் அவே தீவு, வனுவாட்டு (Hideaway Island, Vanuatu)

Mail

ந்தத் தீவு தெற்கு பசிபிக் பெருங்கடல்ல இருக்கு. பேருக்கு ஏற்றமாதிரியே தபால்பெட்டியையும் தண்ணிக்கு அடியில மறைச்சுத்தான் வெச்சிருக்காங்க. இந்த போஸ்ட்பாக்ஸ் இந்த இடத்துல 2003-ம் ஆண்டு வைக்கப்பட்டுச்சு. போஸ்ட்பாக்ஸ் 3 மீட்டர் ஆழத்துல வைக்கப்பட்டிருக்காம். தண்ணிக்கு அடியில போஸ்ட்பாக்ஸ் இருந்தா தேடிக் கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கும்ல. அதனால இங்கதான் போஸ்ட்பாக்ஸ் இருக்குனு அடையாளத்துக்கு ஒரு கொடிய நட்டு வச்சிருக்காங்க. (என்னவொரு புத்திசாலித்தனம்). இங்க லெட்டர் எழுதி நீங்களே தண்ணிக்குள்ள நீந்திப்போய் போஸ்ட் பண்ணிக்கலாம். அப்படி உங்களால முடியலைனா ஒரு ஆள் வெச்சு லெட்டர் அனுப்பலாம். 

ரிசோர், நார்வே (Risor, Norway)

Mail

ண்ணீருக்கு அடியில 4 மீட்டர் ஆழத்துல இந்த தபால்பெட்டியை வெச்சுருக்காங்க. மற்றவற்றிற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கு. தபால்பெட்டிக்குள் லெட்டர் போட தண்ணிக்குள்ளே குதிக்க வேண்டியதெல்லாம் இல்லை. அங்கே இருக்குற பைப்ல லெட்டரைப் போட்டுட்டா தண்ணி படாம நேராகப் போய் தபால்பெட்டிக்குள்ளேயே விழுந்துடும். அப்புறம், அதைத் தண்ணி படாம எடுத்து, ஒரு ஸ்பெஷல் ஸ்டாம்ப் ஒட்டி, குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பிடுவாங்க. இந்த போஸ்ட்பாக்ஸ் 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த போஸ்ட்பாக்ஸ் வெச்ச வருஷத்துல மட்டும் 5,000 கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கு.

புலாவ் லயாங்-லயாங், மலேசியா (Pulau Layang-Layang, Malaysia)

Mail

ண்ணீருக்கு அடியில இருக்க தபால்பெட்டிகளிலேயே, மிகவும் ஆழமான இடத்துல இருக்கிற போஸ்ட்பாக்ஸ் இப்போதைக்கு இதுதான். இது நீருக்கு அடியில் சுமார் 40 மீட்டர் ஆழத்துல வைக்கப்பட்டிருக்கு. எப்படிய்யா அவ்வளவு ஆழத்துல போஸ்ட்பாக்ஸ் எல்லாம் கொண்டுபோய் வைக்குறீங்க. இவ்வளவு ஆழத்துல இருக்கிறதால நம்ம நேரடியாகப்போய் லெட்டரெல்லாம் போஸ்ட் பண்ணமுடியாது. அதுக்குன்னு அங்க ஆள் இருப்பாங்க, அவங்ககிட்டே கொடுத்து போஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான். இந்த போஸ்ட்பாக்ஸ் சேவை கடந்த 2015-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இங்கே அனுப்பப்படுற கடிதங்கள்ல ஸ்பெஷல் ஸ்டாம்ப் மற்றும் மலேசிய சாதனை புத்தகத்தோட அடையாளமும் பதிக்கப்பட்டிருக்கும்.

ரிங்க மக்களே! இந்த நாலு இடங்களில் நம்ம ஆட்கள் யாராவது இருந்தா நமக்கு ஒரு லெட்டர் அனுப்பிவிடுறது..!

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி

 

{kunena_discuss:1107}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.