(Reading time: 6 - 11 minutes)

5.யிர்களைத் தரவும், திரும்ப எடுத்துக்கொள்ளவும், இறைவனுக்கு மட்டுமே உரிமை உண்டு, அவற்றை எப்போது, எவ்விதம், எந்த இடத்தில் செய்வான் என்பதை நம் சிற்றறிவால் அறியமுடியாது, அதனால் நடப்பது எதுவோ அதை மனமார ஏற்கவேண்டும்.

6.றைவனால் படைக்கப்பட்ட அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். சகோதர, சகோதரிகள்! ஏன், மற்ற உயிரினங்களும் நமது உடன்பிறப்புகளே! எல்லோரிடமும் அன்பாக இருக்கவேண்டும். அடுத்தவன், தவறாக நடந்துகொண்டால்கூட நாம் நாமாகவே இருக்கவேண்டும். சூரிய வெளிச்சம் உலகத்துக்கே பாரபட்சமின்றி கிடைக்கிறதோ, நம் அன்பும் எல்லோருக்கும் சாதி, சமய, இன, மொழி, பாகுபாடின்றி கிடைக்கவேண்டும்.

7.கொடுப்பதை இன்பமாக கருதவேண்டும், பெருமைப்படவேண்டும், இறைவன் தனக்கு பதிலாக நம்மை கொடுக்கச் சொல்வதாக நம்பி மகிழவேண்டும்! தருவதில், ஒரு சிறப்பு, தருபவன், பெறுபவன் இருவருமே மகிழ்ச்சி அடைகின்றனர்.

8.ம்மைச் சுற்றி நடக்கிற இயற்கை சீற்றங்களின்போது, சுனாமி, புயல், மழை, எரிமலை, பூகம்பம், ஏற்படும்போது, நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். நாளைக்காக நமக்கு வைத்திருக்கிற உணவை, உடையை, இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும். அரசாங்கம் செய்யும், தொண்டு நிறுவனங்கள் செய்யும் என்று பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது.

9.ல்லை, இல்லை என புலம்புவதை உடனடியாக நிறுத்தி, எது நமக்கு தேவையோ அதை இறைவன் தாராளமாகவே தந்திருக்கிறான் என நன்றியோடு வாழவேண்டும். ஆக்கபூர்வமாக சிந்திக்கவேண்டும். அழிவுச் செயல்களில் ஈடுபடக்கூடாது. ஒரு துரும்பைக்கூட படைக்க சக்தியற்ற நாம் படைக்கப்பட்ட பொருட்களை நாசம் செய்யலாமா?

10.'ரோம் நகரம் ஒருநாளில் கட்டப்படவில்லை' எனச் சொல்வார்கள். அதைப்போல, மேலே பட்டியலிடப்பட்டவைகளை ஒரேநாளில் நாம் செயல்படுத்திவிடமுடியாது. நாட்களாகும். ஆனால், வைராக்கியமும், மன உறுதியும் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும்.

இறைவன் தனது குழந்தைகளை கைவிடமாட்டான் என்னும் நம்பிக்கையே நமது கவசம்!

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.