(Reading time: 10 - 19 minutes)

பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் தாஸர் - பகுதி 03 - தங்கமணி சுவாமினாதன்

Kabir Das

னைவி சுந்தராவின் பதிலைக்கேட்டு அதிர்ந்து போனார் கபீர்.ஐயோ இது என்ன இப்படிச் சொல்கிறாளே என்று நடுங்கிப்போனார்.சுந்தரா நீ என்ன சொல்கிறாய்?சுய நினைவோடுதான் பேசுகிறாயா?

ஆம் சுயனினைவோடுதான் பேசுகிறேன்...இதில் எனக்கு சம்மதமே..

சுந்தரா...

ஆம்..நாளை நம் வீட்டுக்கு சாதுக்கள் உணவு அருந்த வருவதாக தாமாகவே வந்து சொல்லிச் சென்றுள்ளனர்.

அப்படியிருக்க அவர்கள் சொன்னபடி உணவுண்ண வந்தால்  என்ன சொல்வது அவர்களிடம்?..எங்களால் உங்களுக்கு உணவளிக்க முடியாது..எங்களிடம் அதற்கான வசதி இல்லை..கடன் கொடுப்பாரும் யாரும் இல்லை என்று எப்படிச் சொல்வது?சாதுக்களைப் பட்டினி போடுவதைவிட என் உடலை விற்று அவர்களுக்கு உணவளிப்பது பாபம் அல்ல என்று எடுத்துச் சொல்ல கபீரும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

அன்று இரவு மனைவி சுந்தராவை வியாபாரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் கபீர்,

சுந்தராவைக்கண்ட வியாபாரிக்கு மிகுந்த மகிழ்ச்சி.கபீர் வியாபாரியிடம் தான் சொன்னபடி தன் மனைவியை அழைத்து வந்துவிட்டதாகவும் வியாபாரி சொன்னபடி பொருளுதவி செய்யவேண்டுமெனவும் கேட்டார்.வியாபாரியும் கபீரிடம் ஒப்புக்கொண்டபடி உதவி செய்து அனுப்பினான்.

மனம் முழுதும் மகிழ்ச்சியாக இருந்தது வியாபாரிக்கு.படுக்கை அறைக்குள் நுழைந்தாள்  சுந்திரா.அவள் அழகில் அப்படியே கிறங்கிப்போனான் வியாபாரி.படுக்கையில் அமர்ந்திருந்தவன்  மெள்ள எழுந்து சுந்தராவின் அருகில் சென்றான்.அவள் கையைப் பற்றி படுக்கையை நோக்கி அழைத்துச் செல்லும்  ஆர்வத்தோடு இருந்தவனை வாசற்கதவு தட்டப்படும் ஓசை துணுக்குறவைத்தது.

இருந்த இடத்தில் இருந்தபடியே யாரது என்று சத்தமாய்க் கேட்டான்.பதில் இல்லை.கதவு இன்னும் சப்தத்தோடு தட்டப்பட்டது.கொஞ்ச னேரம் மௌனித்தான்.இந்த இன்பமான நேரத்தில் யார் வந்து இப்படி தொந்தரவு தருவது என்ற கோபம் ஏற்பட்டது.வந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு கூட வந்துவிடுவார்கள் என்று தோன்றியது.இனியும் வாளாவிருக்க முடியாது எனத் தோன்றவே வாசல் கதவை நோக்கி நடந்தான் மிகுந்த ஆத்திரத்துடன்.கதவைத்திறந்தவன் அங்கே நின்றிருந்தவர்கலைப் பார்த்து இந்த இரவு நேரத்தில் எதற்காக இப்படி வந்து தொந்தரவு தருகிறீர்கள் என்று கோபமாகக் கேட்கவே அவர்கள் நாங்கள் இருவரும் அரசாங்க அதிகாரிகள்.உங்கள் வீட்டில் மக்களுக்கு நியாயமாகக்  கிடைக்க வேண்டிய மளிகைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் திருட்டுப்பொருட்களை குறைந்தவிலையில் வாங்கி வைத்திருப்பதாகவும் உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும். அதற்காகவே நாங்கள் வந்துள்ளோம் எனக்கூறினர்.

என் மீது பொய்யாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.அப்படி எதுவும் என் வீட்டில் கிடையாது.சென்று வாருங்கள் எனக் கூறினான் வியாபாரி.

இல்லை..உங்களை நம்ப மாட்டோம்.நாங்கள் சோதனை இட்டே ஆவோம் என்றனர் அவர்கள்.

இது என்ன?இப்படி இரவில் வந்து தொந்தரவு தருகிறீர்கள்?என்று கோபமாகக் கேட்டான் வியாபாரி.

நாங்கள் அரசாங்க அதிகாரிகள்.எங்களுக்கு இரவு பகலெல்லாம் கிடையாது.நகருங்கள் நாங்கள் உள்ளே சென்று சோதனையிடவேண்டும் என்றபடி வழிமறித்து நின்றுகொண்டிருந்த வியாபாரியை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

வீடெங்கும் ஓரிடம் விடாமல் தேடினர்.இன்னும் படுக்கை அறைதான் பாக்கி.அங்கும் நுழைய முற்பட்டனர்.

கடும் சினம் கொண்டான் வியாபாரி.அவர்களை படுக்கையறைக்குள் நுழைய விடாமல் முடிந்தவரை தடுத்தான்.அவர்கள் இவனைப் புறம் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர்.நுழைந்தவர்களின் பார்வையில் பட்டாள் சுந்தரா.

ஆ..இது என்ன கொடுமை?இவர் கபீரின் மனைவி அல்லவா?இவர் எப்படி இந்த வியாபாரியின் படுக்கையறைக்குள் இந்த இரவில்?என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டனர்.

பெண்ணே..நீங்கள் கபீரின் மனைவியல்லவா?நீங்கள் ஏன் இவ்விடத்தில் இருக்கிறீர்கள்?இந்த வியாபாரி உங்களை வற்புறுத்தி இவ்விடம் அழைத்து வந்தாரா?சொல்லுங்கள் என்றனர்.

அமைதியாக பதில் ஏதும் சொல்லாமல் நின்றிருந்தார் சுந்தரா.

வியாபாரியின் வீட்டை சோதனை செய்ய வந்தவர்கள் சுந்தராவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கபீரின் வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

பீர் யாரோ இருவருடன் தன் மனைவி வீடு திரும்பியதைக்கண்டு திகைத்தார்.வியாபாரியின் மனதை  திருப்திப்படுத்தாது தன் மனைவி வீடு திரும்பியதைக்கண்ட கபீருக்கு வருத்தமாய் இருந்தது.கைநீட்டிப் பொருளை வாங்கிவிட்டு சொன்ன சொல்லை காப்பாற்றாமல் ஏன் வந்தாய் என மனைவியைக் கடிந்து கொண்டார்.மனைவியை அழைத்து வந்த இருவரையும் நீங்கள் யார் என் மனைவியை அந்த வியாபாரியின் வீட்டிலிருந்து திரும்ப அழைத்து வர?என் விருப்பத்தோடுதான் என் மனைவி அங்கு சென்றார்.அந்த வியாபாரி செய்த உதவிக்காகவே என் மனைவியை அவரிடம் அனுப்பி வைத்தேன் என்று கோபத்தோடு கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.