(Reading time: 10 - 19 minutes)

யோ மகனே நீ செய்யச் சொல்லும் செயெலை நான் எவ்வாறு செய்வேன்?அது அவ்வளவு எளிதான காரியமா?என்னால் மட்டுமல்ல வேறு யாராலும்அக்காரியத்தைச் செய்ய முடியாது.நான் என்ன செய்வேன்?நான் என்ன செய்வேன்? எனக் கலங்கினார் கபீர்.கெஞ்சினான் மகன்.

தந்தையே..உள்ளே என் கால்களை உறுதியாய்ப் பற்றி இழுக்கிறார்கள்...இனி நான் அகப்பட்டுக்கொள்வேன்..

நான் சொன்னதைச் செய்யுங்கள் தந்தையே...யோசிக்காதீர்கள்...தாயிடம் என்னை எண்ணி வருந்தவேண்டாம் என்று சொல்லுங்கள்...என்று பிடிவாதமாய்க் கூறவும் மனதைக் கல்லாக்கிக் கொண்டார் கபீர்.

நெசவு நெய்யும் போது உபயோகப்படுத்தும் சிறிய கத்தியொன்று கபீரின் இடுப்பில் எப்போதும் இருக்கும்.

இப்போது கபீரின் கை அக்கத்தியை இடுப்பிலிருந்து எடுத்தது.அடுத்த நொடி அக்கத்தியால் கமாலின் கழுத்தை சரக்கென்று அறுத்தார்.கமாலின் தலை கழுத்தோடு கபீரின் கையில் வந்தது.அறுக்கப்பட்ட தலையை மளிகை பொருட்களை வைத்திருக்கும் மூட்டையில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு மனம் முழுதும் துக்கத்தோடு நடந்தார் கபீர்.

கடைக்காரர் பெரும் முயற்சியோடு கால்களைப் பற்றி இழுக்க தலையற்ற முண்டம் உள்ளே வந்து விழுந்தது.ஐயோ இதென்ன?தலையில்லா முண்டம்..இது யார் எனத் தெரியவில்லையே?என்று புலபினார்.

யாராக இருந்தாலு சரி என் கடையில் திருடிய திருடன் இவன்.முண்டமாக இருந்தாலும் சும்மா விடமாட்டேன் என்று சொல்லி அம் முண்டத்தைத் தலைகீழாகக் கம்பத்தில் கட்டிக் கடைதெருவில் வைத்தான்.போவோர் வருவோரெல்லாம் வேடிக்கைப் பார்த்தனர்.

பீர் வீட்டுக்குள் நுழந்தார்.மளிகை மூட்டையை மனைவி சுந்தராவிடம் கொடுக்க அவர் நீங்கள் மட்டும் வருகிறீர்களே..கமால் எங்கே எனக் கேட்க..நடந்த அனைத்தையும் கூறி கமாலின் தலை இந்த மூட்டைக்குள்தான் இருக்கிறது.நீ கொஞ்சமும் உன் துக்கத்தை உணவுண்ண வந்திருக்கும் பக்தர்களிடம் காண்பிக்காதே..அப்படிச் செய்தால் அவர்கள் உணவுண்ண மறுத்து விடுவார்கள்..அச்செயல் கமாலுக்கு நான் தந்த வாக்கைப் பொய்ப்பிப்பதாகும்.எனவே நீ துக்கத்தை மனதில் அடக்கி இவர்களுக்கு விருந்து சமைப்பாயாக என்றார்.மகன் இறந்தான் என்ற செய்தி கேட்டு எந்தத் தாயால் மனதைக் கட்டுப்படுத்த முடியும்?ஆனாலும் பொங்கிவரும் துயரையும் அழுகையையும் மனதில் அடக்கி விருந்து தயாரித்தார் சுந்திரா.

அடுத்த வாரமும் தொடரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.