(Reading time: 2 - 4 minutes)

உலகம் நம் கையில் - தூக்கத்திற்கான கருவி

ந்த முறை நாம் பேசப் போகும் கருவி ஒரு வித்தியாசமான கருவி.

 

ஸ்கூல், காலேஜ், வீட்டு வேலை, அலுவலக வேலை என எதுவாக இருந்தாலும் காலை முதல் இரவு வரை கிட்டத்தட்ட வாழ்க்கை இயந்திர கதி ஆகி விட்டது.

எப்போதுமே தூக்கம் ஒன்று தான் நம் அனைவருக்கும் புத்துணர்வை கொடுக்கும் மருந்து.

 

அந்த தூக்கம் சீராக கிடைக்கா விட்டால் என்ன செய்வது???

இந்த கேள்விக்கு பதில் கொடுக்க வந்திருக்கும் ஒரு நவீன கருவி தான் பெட்ர் (Beddr)

 

பழைய ஐம்பது பைசா அளவில் இருக்கும் இந்த கருவி நம் தூக்கத்தை ட்ராக் செய்து (கண்காணித்து), அதை மேம்படுத்த உதவக் கூடியது என்கிறார்கள்.

 

தூங்கும் போது இதை நெற்றியில் ஒட்டிக் கொண்டு தூங்க வேண்டும்.

 

காலையில் இது இணைக்கப்பட்டுள்ள ஆப்(app) பார்த்தால் எவ்வளவு நேரம் தூங்கினோம், தூங்கும் போது சுவாசிக்கும் பிரச்சனைகள் இருக்கிறதா, உடலில் ஆக்ஸிஜன் அளவு வேண்டிய அளவில் இருந்ததா, இதய துடிப்பு சீராக இருந்ததா, எந்த நிலையில் படுக்கும் போது சுவாசிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என அனைத்தையும் நமக்கு காட்டும்.

 

இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை எளிதாக கண்டுப்பிடித்து சரி செய்து விடலாம் என்று சொல்கிறார்கள்.

 

புதிய டெக்னாலஜியான இதில் பக்க விளைவுகள் இருக்கிறதா, எந்த அளவுக்கு இது துல்லியமானது என்பது போன்ற கேள்விகளுக்கு எதிர் வரும் நாட்களில் பதில் கிடைக்கலாம்.

 

இருந்தாலும் தூக்கம் வராமல் தவிக்கும் எண்ணற்றோர்க்கு இது ஒரு வர பிரசாதமாக அமையும்.

  

அதே போல எதிர் காலத்தில் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை கண்டுப்பிடிக்கவும், சரி செய்யவும் இது ஒரு ட்ரென்ட்செட்டிங் டெக்னாலஜியாக இருக்கும் என்றும் தோன்றுகிறது!

    

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.