(Reading time: 2 - 4 minutes)

உலகம் நம் கையில் - நெல்லி

ன்று நாம் பேசப் போகும் பொருளை பற்றி சொன்னால், ‘இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா Binds’ அப்படின்னு நீங்க கேட்பீங்க!

 

நம்ம ஜெனரேஷன்க்கு முந்தைய ஜெனெரேஷனைப் பார்த்தால், அவங்க பல விதங்களில் செல்ப்-மேட் மக்கள். அவங்களுடைய adaptability மற்றும் flexibility அபாரம். நாம் எல்லோரும் நிறைய விதங்களில் ஈசியாக எல்லாவற்றையும் செய்யும் மக்கள். நானும் அதே தான்!

  

பொதுவாக எல்லோருக்கும் ஒரு வீக் பாய்ன்ட் இருக்கும். என்னுடையது என்றுப் பார்த்தால் அது சமையல். வீக்னஸ் எதுன்னு தெரிந்தால் பெரிய அட்வான்டேஜ் இருக்கு. அதை எப்படி சமாளிக்குறது என்றும் நாம் முன் கூட்டியே யோசிக்கலாம்.

அதன் படி, எப்போதும் grocery கடைகளுக்கு போகும் போது புது விதமான பொருட்கள் இருக்கிறதா என்று கவனிப்பது என் வாடிக்கை.

அப்படி என் கண்ணில் பட்ட ஒன்று தான் இந்த நெல்லிக்காய் வடை.

Amla bites 

எங்க வீட்டில் அம்மா கிட்டத்தட்ட இதேப் போல நெல்லிக்காய், தேன் மிக்ஸ் செய்து செய்வார்கள். பார்த்த உடனேயே அந்த ஞாபகத்தில் வாங்கியது தான் இது.

அதே டேஸ்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் வீட்டு சமையலறைக்குள்ளேயே இருந்த ஒன்றை வித்தியாசமாக யோசித்து ஒரு விற்கக் கூடிய பொருளாக மாற்றி அதை உலகெங்கும் சென்று சேர உதவிய விதத்தில் கட்டாயம் உருவாக்கியவர்களை பாராட்ட வேண்டும்.

 

இதில் இருக்கும் உட்பொருட்கள் என்றுப் பார்த்தால் நெல்லிக்காய், மிளகாய், வெல்லம், பெருங்காயம் மட்டும் தான். அந்த விதத்தில் இது ஹெல்தியும் கூட!

நான் வாங்கியது எக்ஸ்போர்ட் பேக். இந்தியாவில் கிடைக்கிறதா என்று கூகிளில் ஒரு search போட்டு பாருங்கள்.

 

Innovation அதாவது புதுமை என்பது ராக்கெட் சைன்ஸ் ஆக இருக்க வேண்டும் என்றில்லை. அது சின்ன சின்ன பொருட்களில், மாறுப்பட்ட சிந்தனையில் (Out of box thinking) தான் உருவாகிறது.

 

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.