(Reading time: 1 minute)

வசந்த மாளிகை - மது

வியக்க வைக்கும் வடிவமைப்புகள்!!

விண்ணை முத்தமிட்டும் கோபுரங்கள்!!

தலை சிறந்த கட்டிட கலை வல்லுநன்

தோல்வியைத் தழுவி துயர் கொண்டான்...

சாதித்த  பொறியாளனுக்கு

சாத்தியமாகவில்லை வசந்த மாளிகை

காதல் மனைவி வேண்டுமென்றாள் ஓர் அழகு வீடு

காட்டிய மாதிரியோ -  தூக்கணாங் குருவிக் கூடு !!

 

{ குறிப்பு : தூக்கணாங் குருவியில் ஆண் குருவி பல  வசந்த மாளிகைகளை  பாதி  கட்டிய நிலையில்  தன் காதலிக்குக் காட்ட   தனக்கு பிடித்த மாளிகையில் சென்று பெண் குருவி அமர்ந்து கொண்டு ஓகே சொன்னவுடன்  மீதியை கட்டி முடிக்கும் }

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.