(Reading time: 1 minute)

அவனும் நானும் - 03 - என் கோபத்தின் ஆழம் நீ! - ப்ரியா

Hands

எனக்குள்ளே ஜனனம் கொண்டு

அக்னியின் இனமென

தனை மாற்றி கொண்டு..

ஆக்ரோஷ அவதாரத்தில்

என் தன்மையை விலக்கி

மூளையின் செல்களில்

முட்களை தூவி

இதய சோலையின் அன்பை

உறிஞ்சி பாலையென மாற்றி..

என்னை முழுதும் ஆட்கொள்ளும்

சில நிமிட கோபத்தின்

ஆளுமை போன்றதடா..!!

அழுத்தமாய் என் நெஞ்சில் 

அறைந்த உனக்கான என் காதல்..!!!

Avanum naanum - 02

Avanum naanum - 04

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.