(Reading time: 1 - 2 minutes)

அவனும் நானும் - 14 - வார இறுதியின் வசந்தம் நீ..!!! - ப்ரியா

Hands

திங்கள் முதல் வெள்ளி வரையாய்

தினமும் நான் தவிக்கும் நிமிடங்கள்

நிமிடங்களும் சலித்து கொண்டு

நகர்த்தி தள்ளும் நொடிகள்..

 

பிரித்து வைத்த காலம் தனையும்

பிரிந்து இருக்கும் விதி அதனையும்

நித்தமும் நிந்தித்து கடத்தும்

ஒவ்வொரு வினாடியும் நரகம்..!!

 

அன்னையை பிரிந்து பள்ளி செல்லும்

குழந்தையின் மனமாய் மாறி விட்டபின்

கடிகாரமும் கதிரவனும்

பகையாளிகள்.. எதிராளிகள்..!!

 

வெள்ளி முடிந்திடும் வேளை

குதூகலத்துடன் என் மாலை..

இரண்டு நாட்களின் மொத்த மகிழ்ச்சியும்

குத்தகைக்கு எடுத்து கொண்டாடும் மனது..!!

 

உன்னை காணும் வரையிலான

தவிப்புகள் அடங்கி ஓடோடி வந்து

உன் கைகளுக்குள் நான் அடங்க..

உள்ளத்தின் கூக்குரல்கள் ஓய்ந்து

தூங்குவது இன்பம் உன் மார் சாய்ந்து..!!

 

வார இறுதி நாட்கள் தரும் மகிழ்வை விட

உன் வானளவு காதல் தரும்

வசந்தத்தில் திளைப்பது சுகமடா..!!

வசந்தித்தினும் அழகானதடா

எனக்கான உன் காதல்...

Avanum naanum - 13

Avanum naanum - 15

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.