(Reading time: 1 - 2 minutes)

வாழ்க்கை - ஜான்சி

வாழ்க்கை என்பது சில தருணங்களில் நிர்மாணிக்கப் படுகின்றது.
 
பொருளாதார திட்டமிடலில்...........
 நமது ஆசைகளா? மன நிம்மதியா? எதுவென்று தீர்மாணிக்கும் தருணம்.
 
குடும்ப உறவுகளில்.........
சுய நலமா? குடும்ப நலமா? என முடிவெடுக்கும் தருணம்.
 
கொள்கை போராட்டங்களில் ........
இன்றைய பிரச்சனைகளா?  ,எதிர்கால சாதனைகளா? என தேர்ந்தெடுக்கும் தருணம்.
 
கடும் உழைப்பில் .............
இன்றைய சுக வாழ்வா?, பின்னைய நல்வாழ்வா? 
என தேர்ந்தெடுக்கும் தருணம்.
 
திருமணத்தில்............
 வெளி ஆடம்பரமா?, வாழ்நாள் அன்புறவா?
 என தெரிவு செய்யும் தருணம்.
 
மனச் சலனங்களில்..........
சில நிமிட சுகமா?, சுய மரியாதையா?
 என முடிவேடுக்கும் தருணம்.
 
 
தருணங்களை தவற விட்டால் வாழ்வும் தவறிடுமே!!!
ஆதலின் வாழ்க்கையை வாழ்ந்திருக்க நல் தருணங்களை சேகரிப்போம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.