உன் மொழி - ஜான்சி
எல்லோரும் சொல்கிறார்கள் பேச தெரியாதாம் உனக்கு?!!.....
பரிச்சயமானவர்களிடம் வாலாட்டுவதும்,
நான் வீடு திரும்புகையில் எதிர் கொண்டு ஓடி வருவதும்,
விடிந்ததும் எனை எழுப்ப என் கையை சுரண்டுவதும்,
விநோத ஒலி எழுப்பி என்னுடன் விளையாட முன்கால் தூக்கி நிற்பதும்,
புறக்கணிக்கப் படும் போது குரல் தேய்ந்து வீட்டின் ஓரம் போய் முடங்குவதுமாக...
எப்போதும் ஆயிரம் ஆயிரம் மொழி பேசிச் செல்கின்றாய் நீ.